ஒரே வீட்டில் 9 மனைவியுடன் வாழ்ந்து வந்த நபருக்கு ஏற்பட்ட சோகம்!

அகதா விவாகரத்து குறித்து ஒற்றுமையாய் இருக்கும் ஆர்தரின் மற்ற எட்டு மனைவிகள், “பலதார மண வாழ்வில் இருக்கும் உணர்வுப்பூர்வமான மகிழ்ச்சியை அகதா உணரவில்லை. சாகச உணர்வுக்காக மட்டும் அவர் பல தார திருமணம் முடிவை எடுத்திருந்திருக்கிறார்” எனக் கூறியுள்ளனர்.
Arthur Urso
Arthur UrsoTwitter
Published on

ஆர்தர் உர்ஸோ பிரேசில் நாட்டை சேர்ந்தவர். மாடலிங் துறையில் இயங்கிவரும் இவருக்கு மொத்தம் 9 மனைவிகள் இருந்தனர். 9 மனைவிகளுடனும் அமைதியான ஆனந்தமான வாழ்க்கையை நடத்தி வந்தார் ஆர்தர். அர்தரின் வாழ்க்கைக்கு விமர்சனங்களும் ஆதரவுகளும் சமூகத்திலிருந்து வந்த வண்ணம் இருக்கும். தற்போது ஆர்தரின் ஒரு மனைவியான அகதா அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.

இது குறித்து ஆர்தர் பேட்டியளிக்கும் போது, அகதாவின் முடிவு தனக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகக் கூறினார். அத்துடன் அகதா தான் மட்டும் எல்லாமுமாக இருக்க வேண்டும் என நினைப்பதாகவும் இதனால் அவர் பலதார மண வாழ்கையில் இருக்கும் சந்தோஷத்தை இழப்பதாகவும் ஆர்தர் கூறியுள்ளார்.

அகதாவோ தான் ஒரு தார மணவாழ்க்கையில் ஈடுபடும் உயரிய முடிவை எடுத்துள்ளதாகவும், பல தார வாழ்க்கை இனியும் மகிழ்ச்சியாக இல்லை எனவும் கூறியுள்ளார்.

Arthur Urso
2050 -இல் உலகை ஆளப்போகும் 5 சூப்பர் பவர் நாடுகள் - ஓர் ஆச்சர்ய ரிப்போர்ட்


அகதா விவாகரத்து குறித்து ஒற்றுமையாய் இருக்கும் ஆர்தரின் மற்ற எட்டு மனைவிகள், “பலதார மண வாழ்வில் இருக்கும் உணர்வுப்பூர்வமான மகிழ்ச்சியை அகதா உணரவில்லை. சாகச உணர்வுக்காக மட்டும் அவர் பல தார திருமணம் முடிவை எடுத்திருந்திருக்கிறார்” எனக் கூறியுள்ளனர்.

ஆர்தர் தனது மண வாழ்வை லூயானா கஸாகி என்ற பெண்ணுடனே தொடங்கினார். ஆர்தர், லூயானா இருவரும் பல தார மண வாழ்வில் நாட்டம் கொண்டிருந்திருந்ததால் ஆர்தரின் அடுத்தடுத்த திருமணங்களுக்குச் சம்மதித்தார் லூயானா. காதல் சுதந்திரமான உணர்வு அதனை ஒருதார மண வாழ்வில் அடக்கிவிட முடியாது என்பதை வெளிக்காட்டவும், பல தார மணவாழ்வு தவறானதில்லை என்பதை உரைக்கவும் 2021ல் அடுத்தடுத்து 8 திருமணங்கள் செய்து கொண்டார் ஆர்தர். ஆர்தரின் முதல் மனைவி லூயானவுக்கு மட்டும் ஒரே ஒரு பெண் குழந்தை உள்ளது, மற்ற அனைத்து மனைவிகளும் தலா ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஆர்தரின் விருப்பம் எனத் தெரிவித்திருக்கிறார்.

Arthur Urso
எட்டி : இமயமலை பனி மனிதன் இருப்பது உண்மையா? - மர்ம உயிர் பற்றி ஆய்வாளர்கள் சொல்வதென்ன?

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com