’மனதை திருடி விட்டாய்’ - செல்ஃபோன் திருடியவரிடம் காதலில் விழுந்த பெண்
’மனதை திருடி விட்டாய்’ - செல்ஃபோன் திருடியவரிடம் காதலில் விழுந்த பெண்twitter

’மனதை திருடி விட்டாய்’ - செல்ஃபோன் திருடியவரிடம் காதலில் விழுந்த பெண் | Viral Story

நான் அந்த சமயத்தில் மிகவும் கஷ்டத்தில் இருந்தேன். இவரது (இமானுவெல்லாவின்) ஃபோட்டோக்கள் என்னை ஈர்த்தன, குறிப்பாக இவரது தலைமுடி மிகவும் அழகாக இருந்தது. இவரிடம் செல்ஃபோன் திருடியதை நினைத்து வருந்தினேன்

காதல் எந்த தருணத்தில் யார் மீது தோன்றும் என்று நம்மால் கணிக்க முடியாது. அதனை நிரூபிக்கும் விதமாக உள்ளது இவர்களின் காதல் கதை.

பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் இமானுவெல்லா. இவர் ஒரு நாள் வெளியில் சென்று கொண்டிருக்கும்போது, இவரை அடையாளம் தெரியாத ஒருவர் வழிமறித்து இவரது கைப்பேசியை திருடிச் சென்றுள்ளார்.

அதுவே இவர்களின் காதலுக்கு தொடக்க புள்ளி!

Love
LovePexels

இமானுவெல்லாவின் செல்ஃபோனை பறித்து சென்ற திருடன் அவரது கேலரியை பார்த்திருக்கிறார். அவரது புகைப்படங்களை பார்த்து அழகில் மயங்கி காதல்வயப்பட்டுள்ளார் அந்த திருடன்.

நியூயார்க் போஸ்ட்டிடம் இவர்கள் பேட்டியளித்தனர். அப்போது பேசியவர், “நான் அந்த சமயத்தில் மிகவும் கஷ்டத்தில் இருந்தேன். இவரது (இமானுவெல்லாவின்) ஃபோட்டோக்கள் என்னை ஈர்த்தன, குறிப்பாக இவரது தலைமுடி மிகவும் அழகாக இருந்தது. இவரிடம் செல்ஃபோன் திருடியதை நினைத்து வருந்தினேன்” என்றார்.

’மனதை திருடி விட்டாய்’ - செல்ஃபோன் திருடியவரிடம் காதலில் விழுந்த பெண்
பாகிஸ்தான் பெண்ணை 7 ஆண்டுகளுக்கு பின் கரம் பிடிக்கும் இந்தியர்- கடல் கடந்த காவிய காதல் கதை

அதன் பிறகு எப்படியோ இமானுவெல்லாவை தேடிப்பிடித்து இருவரும் பழகத் தொடங்க, தற்போது இரண்டு வருடங்களாக காதலித்து வருகின்றனர்.

பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது இந்த கதை. எனினும், இணையத்தில் இந்த வித்தியாசமான காதல் கதை வைரலாகி வருகிறது.

’மனதை திருடி விட்டாய்’ - செல்ஃபோன் திருடியவரிடம் காதலில் விழுந்த பெண்
உலகம் முழுக்க இருக்கும் தனித்துவமான காதல் ஜோடிகள் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com