ராணி எலிசபெத் II காலமானார், பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு

தனது 25வது வயதிலிருந்து இங்கிலாந்தின் ராணி ஆக இருந்து வந்தவர் மரணமடைந்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு அவரது கணவர் இளவரசர் பிலிப் இறந்தது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் ராணி எலிசபெத் காலமானார்
பிரிட்டன் ராணி எலிசபெத் காலமானார்NewsSense
Published on

பிரிட்டிஷ் இராஜ்ஜியத்தை அதிக காலம் ஆட்சி செய்தவரான ராணி இரண்டாம் எலிச்சபெத் காலமானார்.

கடந்த 2021 அக்டோபரிலிருந்தே அவருக்கு உடல் நலப் பிரச்னைகள் இருந்தது. எழுந்து நிற்பதற்கும் நடப்பதற்கும் சிரமப்பட்டு வந்தார். இன்று ராணியின் உடல்நிலை கவலைக்கிடமான பின்னர் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அவரது 4 குழந்தைகளும் வருகை தந்திருந்தனர்.

தற்போது 96 வயதாகும் எலிசபெத் 70 ஆண்டுகளாக பிரிட்டிஷை ஆண்டு வந்தார். அவர் தலைமையில் இதுவரை 15 பிரதமர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் மன்னர் 14ம் லூயிஸுக்கு பிறகு உலகிலேயே ஒரு நாட்டை அதிக காலம் ஆண்டவர் இவர்தான்.

ஏப்ரல் 21, 1926ம் ஆண்டு பிறந்தார் ராணி எலிசபெத். 1952ம் ஆண்டு மன்னர் 6ம் ஜார்ஜ் மறைவுக்கு பிறகு அரியணை ஏறினார். அப்போது அவருக்கு வயது 25.

தனது 21 வயதில் கிரீஸ் இளவரசர் பிலிப்பை அவர் மணந்து கொண்டார்.

எலிசபெத் ராணிக்கு 13 வயது இருக்கும் போதே அப்போது 18 வயதாக இருந்த இளவரசர் பிலிப்பை சந்தித்தார். இருவரும் நட்பாக பழக பின்னாட்களில் இருவருக்குமிடையில் காதல் மலர்ந்தது.

இரண்டாம் உலகப் போர் முடிந்த இரண்டு ஆண்டுகளிலேயே அவர்களின் திருமணம் நடைபெற்றது. தன் காதலுக்காக அரசப்பட்டத்தை துறந்தார் பிலிப்.

எலிசபெத் ராணியான பிறகு டியூக் ஆஃப் எட்டின் பெர்க் என்ற பட்டத்தை தனது கணவருக்கு பெற்றுக்கொடுத்தார். பதின் பருவத்தில் முளைத்த அவர்களின் காதல் 7 தசாப்தங்களுக்கும் மேலாக நிலைத்திருந்தது.

கடந்த 2021ம் ஆண்டு இளவரசர் பிலிப் மரணமடைந்தார். இளவரசரின் மரணம் ராணியை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கியது.

பிரிட்டன் ராணி எலிசபெத் காலமானார்
காதலுக்காக சிறு வயதில் ஓடிய பெண், 56 ஆண்டுகள் கழித்து குடும்பத்தினருடன் சந்திப்பு

எலிசபெத் மகாராணி தனது 19 வயதில் இராணுவத்தில் சேர்ந்து சேவையாற்றத் தொடங்கினார். பெண்களுக்கான ATS பிரிவில் இணைந்தார். இதற்காக 6 வாரம் ஆட்டோ மெக்கானிக் பயிற்சி பெற்றார். அவரது ராணுவ சேவை மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு பெரும்பான்மையான நாடுகள் மன்னராட்சியை முழுவதுமாக கைவிட்டன. சில நாடுகளில் படிப்படியாக மன்னராட்சி நீர்த்தது. ஆனால் ராணி எலிசபெத் மாறிவரும் கால சூழலுக்கு ஏற்ப மன்னராட்சியை நவீனப்படுத்தினார்.

பிரிட்டிஷ் பழைமைவாதத்தில் இருந்து வெளியேறும் போது இவர் புதியவற்றை ஏற்றுக்கொண்டு நாட்டை முன் நடத்தினார். திருமணம், விவாகரத்து போன்ற புதிய சட்டங்களை புரிந்து கொண்டு செயல்பட்டார்.

தொழில்நுட்ப வளர்ச்சியிலும் முழுமையாக ஆளுமை செலுத்தினார். அடிக்கடி தொலைக்காட்சியில் மக்களுடன் உரையாடினார். 2014ம் ஆண்டு ராயல் குடும்பத்தின் முதல் ட்வீட்டை வெளியிட்டதன் மூலம் மக்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தினார். இப்படி ராணியின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

அசாத்தியமான வாழ்வை வாழ்ந்து முடிந்திருக்கும் எலிசபெத் ராணிக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

பிரிட்டன் ராணி எலிசபெத் காலமானார்
செளதி மன்னர் தெரியும், உலகை ஆளும், ஆண்ட இந்த 9 அரசர்கள் குறித்து தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com