தண்ணில கண்டம்னா இதுதானா? அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட இளம் பெண்- மருத்துவர்கள் சொல்வதென்ன?

இவர் தண்ணீர் அருந்தினாலோ, அல்லது இவர் மீது தண்ணீர் பட்டாலோ, தோலில் படை நோய் வந்தது போல வீக்கங்கள், தடிப்புகள் வந்துவிடும். இந்த தடிப்புகளில் அரிப்பு இருக்கும். அதிக தண்ணீர் இருக்கும் பானம் எதையும் அருந்தினால், எரிச்சல் ஏற்படும்.
தண்ணில கண்டம்னா இதானா! அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட இளம் பெண் - மருத்துவர்கள் சொல்வதென்ன?
தண்ணில கண்டம்னா இதானா! அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட இளம் பெண் - மருத்துவர்கள் சொல்வதென்ன?ட்விட்டர்

எனக்கு தண்ணில கண்டம் என்று பலரும் சொல்லி நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் இந்த அமெரிக்க பெண்ணுக்கு உண்மையிலேயே தண்ணீரில் கண்டம். தண்ணீர் கொஞ்சம் உடலில் பட்டாலும், எரிச்சல், வீக்கம், தோல் நோய் முதல், உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் விளைவுகள் ஏற்படுகிறது.

சாதாரணமாக, வேர்க்கடலை, பால் பொருட்கள் போன்றவை பலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். அதனால் அவற்றை உட்கொள்வதை தவிர்ப்பார்கள். ஆனால் கலிஃபோர்னியாவை சேர்ந்த டெஸ்ஸா என்ற பெண்ணுக்கு தண்ணீர் என்றால் அலர்ஜி.

மனிதர்கள் உயிர்வாழ உணவை விட முக்கியமானது தண்ணீர் தான். ஆனால், இவரால் தண்ணீரை கையால் கூட தொடமுடியாது

அரிய வகை நோயான இந்த தண்ணீர் ஒவ்வாமை உலகில் பலரிடம் கண்டறியப்பட்டுள்ளது. 100 முதல் 250 பேர் இந்த நோயால் அவதிப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த நோயின் பெயர் அக்வாஜெனிக் யூடிகேரியா (aquagenic urticaria). கலிஃபோனியாவை சேர்ந்த டெஸ்ஸா ஹான்சென் ஸ்மித் என்ற 25 வயது பெண்ணுக்கு இந்த அரிய வகை நோய் உள்ளது.

சமீபத்தில் தனது இந்த நோய் குறித்து மனம்திறந்திருந்தார் டெஸ்ஸா. இவர் தண்ணீர் அருந்தினாலோ, அல்லது இவர் மீது தண்ணீர் பட்டாலோ, தோலில் படை நோய் வந்தது போல வீக்கங்கள், தடிப்புகள் வந்துவிடும். இந்த தடிப்புகளில் அரிப்பு இருக்கும். அதிக தண்ணீர் இருக்கும் பானம் எதையும் அருந்தினால், எரிச்சல் ஏற்படும்.

அலர்ஜி ஆஸ்துமா நெட்வொர்க்கின் கூற்றுப்படி, ஒவ்வாமை முதன்முதலில் 1964 இல் பதிவு செய்யப்பட்டது. மழை, பனி, நன்னீர், கடல், வியர்வை மற்றும் கண்ணீர் அனைத்தும் இந்த நிலையில் உள்ள எவருக்கும் படை நோய்களை ஏற்படுத்தும்.

டெஸ்ஸாவுக்கு 8 வயது இருக்கும்போது முதன்முதலில் இந்த ஒவ்வாமை கண்டறியப்பட்டது. கைகளில் தடிப்புகளும், தலையில் புண்களும் ஏற்பட்டுள்ளது.

மருத்துவரை அணுகியபோது, அவர் பயன்படுத்தும் சோப் அல்லது ஷாம்பூக்களில் ஏதொ ஒன்றினால் ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் என்று முதலில் கூறினர்.

மருத்துவரான டெஸ்ஸாவின் தாயார், மகளின் நிலையை தொடர்ந்து பல மருத்துவர்களுடன் இணைந்து பரிசோதனை செய்துள்ளார். சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து தனது மகளுக்கு தண்ணீர் ஒவ்வாமை இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

தண்ணில கண்டம்னா இதானா! அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட இளம் பெண் - மருத்துவர்கள் சொல்வதென்ன?
36 ஆண்டுகளாக வயிற்றில் இரட்டை சகோதரரை சுமந்த ஆண்; மருத்துவர்கள் அதிர்ச்சி! என்ன நடந்தது?

டெஸ்ஸா வளர வளர இந்த ஒவ்வாமை மற்றும் அதன் அறிகுறிகள், விளைவுகள் நீண்டுகொண்டு தான் போனதே தவிர, குறையவில்லை.

டெஸ்ஸாவுக்கு கண்களில் அரிப்பு, நாக்கில் கீறல்கள் மற்றும் வாயில் படை நோய் வர ஆரம்பித்தன. அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட பானங்கள் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தியது.

பால் மட்டுமே மிகவும் தாங்கக்கூடிய மாற்றாக இருந்தது, ஏனெனில் அதன் கொழுப்பு மற்றும் புரதம் நீர் உள்ளடக்கத்தை சமப்படுத்தியது.

அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. நீண்ட நாட்களுக்கு பால் குடிக்காமல் இருந்தால், அவருக்கு தாகம் ஏற்படும். தாங்கமுடியாத தாகத்தினால், சமயங்களில் டெஸ்ஸா, விளைவுகளை கண்டுகொள்ளாமல் தண்ணீரை குடித்துவிடுவார். இப்படி செய்கையில், அதிகமாக வலி ஏற்பட்டு, சில சமயம் அவர் மயங்கி விழும் நிலை கூட உருவாகியுள்ளது

தண்ணீர் அளவு மிக மிகக் குறைவாக இருக்கும் உணவுகளை மட்டுமே டெஸ்ஸா சாப்பிட முடியும். கிரானோலா பார்கள், ரொட்டி, பீனட் பட்டர், உருளைக்கிழங்கு, பீன்ஸ் மற்றும் பால் சார்ந்த சூப்கள்.

இந்த அலர்ஜிக்கு தீர்வே இல்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சில மருத்துவ சிகிச்சைகள் மூலமாக அறிகுறிகளை மட்டுப்படுத்த வாய்ப்புகள் இருக்கிறது. அதனையே பின்பற்றி வருகின்றனர் டெஸ்ஸாவின் குடும்பத்தினர்.

தண்ணில கண்டம்னா இதானா! அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட இளம் பெண் - மருத்துவர்கள் சொல்வதென்ன?
பெண்ணின் மூளைக்குள் நெளிந்த 8 செ.மீ நீளமுள்ள புழு - மருத்துவர்கள் கண்டுபிடித்தது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com