இந்தியா-கனடா உறவில் விரிசல்! சீக்கிய தலைவர் மரணத்தில் இந்திய அரசு தொடர்பா? விரிவான தகவல்

பஞ்சாபுக்கு வெளியில் சீக்கியர்கள் அதிகமாக வாழ்வது கனடாவில் தான். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிஜ்ஜாரின் மரணத்துக்கு பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என அந்த நாட்டின் உளவுத்துறை கண்டறிந்ததாக தெரிவித்த கருத்துதான் உலக அரங்கில் புயலைக் கிளப்பியது.
இந்தியா-கனடா உறவில் விரிசல்! நிஜ்ஜார் மரணத்தில் இந்திய அரசு தொடர்பா? விரிவான தகவல்கள்!
இந்தியா-கனடா உறவில் விரிசல்! நிஜ்ஜார் மரணத்தில் இந்திய அரசு தொடர்பா? விரிவான தகவல்கள்!Twitter
Published on

இந்தியா - கனடா உறவில் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது ஒரு சீக்கியரின் மர்மமான கொலை சம்பவம்.

காலிஸ்தான் என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருப்போம். இந்தியாவில் மதச் சிறுபான்மையினராக இருந்துவரும் சீக்கியர்களின் தனிநாடு கோரிக்கைதான் காலிஸ்தான்.

1980களின் இந்த கோரிக்கையை முன்னிட்டு கலவரங்கள் நடந்தது. ஆனால் இன்றைய சூழலில் இந்தியாவில் அத்தகைய கோரிக்கைகள் இல்லை. ஆனால் புலம்பெயர் வட்டாரங்கள் அடிக்கடி காலிஸ்தான் குறித்த பேச்சுகள் எழுகின்றன. இவற்றை இந்திய அரசு கடுமையாக கண்டித்து வருகிறது.

பஞ்சாபுக்கு வெளியில் சீக்கியர்கள் அதிகமாக வாழ்வது கனடாவில் தான். கனடாவின் சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர்தான் கடந்த ஜூலை மாதம் கொலை செய்யப்பட்டது.

 ஹர்தீப் சிங் நிஜ்ஜார்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

அவர் சர்ரே நகரில் உள்ள ஒரு குருத்துவாராவில் வழிபட்டு திரும்பும்போது பார்கிங்கில் முககவசம் அணிந்த இருவர் துப்பாக்கியால் அவரை சுட்டுக்கொன்றனர்.

சில மாதங்கள் ஆகியும் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இது திட்டமிடப்பட்டு குறிவைக்கப்பட்ட சம்பவம் என கனடா காவல்துறை தெரிவித்துள்ளது.

நிஜ்ஜார் ஒரு காலிஸ்தான் ஆதரவாளர். இவர் தீவிரவாத குழுக்களை வழிநடத்துவதாக இந்திய அரசு குற்றம்சாட்டியது. ஆனால், நிஜ்ஜாரின் ஆதரவாளர்கள் இதனை மறுத்து வருகின்றனர்.

இந்த ஆண்டில் காலிஸ்தான் ஆதரவு தலைவர்களின் 3வது மரணம் இது. பிரிட்டனில் காலிஸ்தான் விடுதலைப் படையின் தலைவர் என்று கூறப்பட்ட அவதார் சிங் கந்தா கடந்த ஜூன் மாதம் பர்மிங்காமில் இறந்தார். இவரது மரணம் மர்மமானதாகவே இருக்கிறது.

இந்திய அரசால் தீவிரவாதி எனக் கருதப்பட்ட பரம்ஜித் சிங் பஞ்வார் கடந்த மே மாதம், பாகிஸ்தானில் உள்ள லாகூரில் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

நிஜ்ஜாரின் மரணத்தைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தினர். அதில் இந்திய அரசை சாடும் கோஷங்களை முழக்கமிட்டனர்.

 இந்திய அரசு சீக்கிய சமூகத்தையும் தனி காலிஸ்தான் ஆதரவாளர்களையும் குறிவைப்பதாக காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. நிஜ்ஜார் உட்பட பிற காலிஸ்தான் ஆதரவு தலைவர்கள் மரணம் குறித்து பல வதந்திகள் பேசப்படுகின்றன.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிஜ்ஜாரின் மரணத்துக்கு பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என அந்த நாட்டின் உளவுத்துறை கண்டறிந்ததாக தெரிவித்த கருத்துதான் உலக அரங்கில் புயலைக் கிளப்பியது.

இந்தியா-கனடா உறவில் விரிசல்! நிஜ்ஜார் மரணத்தில் இந்திய அரசு தொடர்பா? விரிவான தகவல்கள்!
AR Rahman: கனடா நாட்டுத் தெருவுக்கு ரஹ்மானின் பெயர் - இணையத்தில் வைரலான புகைப்படம்

மேலும், இந்திய தூதரக அதிகாரியையும் கனடா வெளியேற்றியது.

கனடாவின் குற்றச்சாட்டை மறுத்த இந்திய அரசு, கனட தூதரகத்தின் மூத்த அதிகாரி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்கா இந்த விவகாரத்தில், "கனட அரசின் குற்றச்சாட்டுகள் மிகவும் கவலைக்குறியவை" எனக் கூறியுள்ளது. கனடாவுடன் தொடர்பில் இருப்பதாக கூறிய பிரிட்டன் செய்திதொடர்பாளர், "இந்த விவகாரத்தை கனட உளவித்துறை விசாரித்து வருவதால் அதிக கருத்துக்களை தெரிவிப்பது சரியாக இருக்காது" எனக் கூறியுள்ளார்.

கனடா - இந்திய அரசு செப்டம்பரில் செய்யவிருந்த தடையற்ற பொருளாதாரத்துக்கான பேச்சுவார்த்தையை தள்ளி வைத்துள்ளனர். ஜி 20 மாநாட்டில் கனட பிரதமர் கலந்துகொண்ட போதிலும் இரு தலைவர்களும் சந்தித்துக்கொண்ட போது இருவருமே இறுக்கமான முகத்துடன் இருந்ததைப் பார்க்க முடிந்தது.

ஜி20 மாநாட்டில் இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத நடவடிக்கைகளை குறைக்க கனட அரசு போதுமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என மோடி குற்றம் சாட்டியிருந்தார்.

நேற்று, "கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகன் கொல்லப்பட்டதன் பின்னணியில் எந்தவொரு வெளிநாட்டு அரசாங்கத்தின் தலையீடும் இருப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது " என ஜஸ்டின் ட்ரூடோ பேசியிருந்தார்.

கனடாவின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளது இந்திய அரசு.

இந்தியா-கனடா உறவில் விரிசல்! நிஜ்ஜார் மரணத்தில் இந்திய அரசு தொடர்பா? விரிவான தகவல்கள்!
கார்த்தி சிதம்பரம்: “ஹிஜாபை எதிர்க்கும் நீங்கள் சீக்கியர்கள் டர்பனில் கை வைக்க முடியுமா?”

நிஜ்ஜார் மரணம் குறித்து, இந்தியாவில் உள்ள உயர்மட்ட பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளிடம் பேசியிருப்பதாக ட்ரூடோ கூறினார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோரிடமும் பேசியுள்ளார்.

நிஜ்ஜார் கொலை பற்றி உண்மைகளை அறிய இந்திய அரசு கனடாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என ஜஸ்டின் ட்ரூடோ கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், நிஜ்ஜார் மரணம் கனட மக்களை கோபமடையச் செய்துள்ளதாகவும், சிலர் தங்களது உயிருக்கு அஞ்சுவதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடோவின் பேச்சை உலக சீக்கியர்கள் அமைப்பு வரவேற்றுள்ளது. அவர் பல சீக்கியர்கள் மனதில் இருந்ததை உறுதிப்படுத்திவிட்டார் என கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.

இந்தியா-கனடா உறவில் விரிசல்! நிஜ்ஜார் மரணத்தில் இந்திய அரசு தொடர்பா? விரிவான தகவல்கள்!
Battle of Saragarhi: 10,000 படைவீரர்களை எதிர்த்து போராடிய 21 சீக்கியர்கள்- வியத்தகு வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com