கேன்ஸ் திரைப்பட விழாவில் மேலாடையில்லாமல் போராடிய பெண்ணால் பரபரப்பு - என்ன நடந்தது?

நேற்று கேன்ஸ் திரைப்பட விழாவின் சிகப்பு கம்பள அணிவகுப்பு நடைபெறும் போது புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த ஹாலிவுட் பிரபலங்களைக் குறுக்கிட்ட பெண் ஒருவர் மேலாடையில்லாமல் அலறியவாறு உள்நுழைந்தார்.
பெண்
பெண்Twitter
Published on

கேன்ஸ் திரைப்பட விழாவின் சிகப்பு கம்பள அணிவகுப்பின் போது மேலாடையில்லாமல் குறுக்கிட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரான்ஸ் நாட்டில் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். இன்று நான்காவது நாளாகத் திரைப்படங்கள் திரையிடுதல், திரை பிரபலங்களின் சிகப்பு கம்பள அணிவகுப்பு என அங்கு நடைபெற்று வருகிறது.

நேற்று கேன்ஸ் திரைப்பட விழாவின் சிகப்பு கம்பள அணிவகுப்பு நடைபெறும் போது புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த ஹாலிவுட் பிரபலங்களைக் குறுக்கிட்ட பெண் ஒருவர் மேலாடையில்லாமல் அலறியவாறு உள்நுழைந்தார்.

பெண்
Cannes: AR Rahman to Aishwarya Rai-Indian celebs at Cannes Festival Red Carpet

அந்த பெண்ணின் உடலில் உக்ரைன் நாட்டின் கொடியின் நிறமான நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் பெயின்ட் அடித்திருந்தார். Stop Raping Us என உடலில் எழுதியிருந்தார். அத்துடன் வன்புணர்வு செய்யப்பட்ட பெண் போலக் கீழே சிகப்பு நிறம் பூசியிருந்தார். அவர் முதுகில் SCUM என எழுதப்பட்டிருந்தது.

இந்த ஒரு நபர் போராட்டம் உலக அளவில் கவனம் பெற்றது. அந்த பெண் அரங்கிலிருந்து நீக்கப்பட்டார். SCUM Manifesto என்பது ஒரு பெண்ணியவாத அமைப்பாகும்.

உக்ரைன் போரில் நடைபெறும் கொடூரங்கள் குறித்துப் பல இடங்களில் பேசப்பட்டு வருகிறது. கேன்ஸ் விழா தொடக்கத்தில் உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி திரையில் தோன்றி பேசினார். மரியுபோலிஸ் 2 எனும் லிதுவேனிய இயக்குநர் Mantas Kvedaravičius இயக்கிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. இது உக்ரைன் போர் குறித்த படம்.

கேன்ஸ் திரைப்பட விழாவுக்குப் போராட்டங்கள் ஒன்றும் புதிதல்ல கடந்த 2018ம் ஆண்டு 82 பெண்கள் பாலின சமத்துவத்துக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

பெண்
PoojaHegde looks dazzling at Cannes Film Festival | Visual Story

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com