Cartoon Network: முடிவுக்கு வருகிறதா 90ஸ் கிட்ஸ் மனம் கவர்ந்த சேனல்? - என்ன நடக்கிறது?

இதனை அறிந்த பலரும், 30 வருடங்களாக தங்களை மகிழ்வித்து வந்த, கார்ட்டூன் சேனலின் முடிவு இது என்று தெரிவித்து வருகின்றனர். இனி பழையபடி இந்த சேனல் இயங்காது என்றும், ஆஸ்தான நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு நிறுத்தப்படும் என்றும் இணையவாசிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்
Cartoon Network
Cartoon NetworkTwitter
Published on

பிரபல குழந்தைகள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் டிவி சேனலான கார்ட்டூன் நெட்வொர்க் முடிவுக்கு வருவதாக வெளியாகியுள்ள செய்தி இணையத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் டிவி சேனல் கார்ட்டூன் நெட்வொர்க். Tom and Jerry, Powerpuff Girls, Ben10, Scooby Doo, Looney Tunes போன்ற நிகழ்ச்சிகள் இந்த சேனலில் ஒளிபரப்பப்பட்டன. காலத்திற்கு ஏற்ப புதிய நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், சேனலின் துவக்கத்தில் வந்த நிகழ்ச்சிகளுக்கு இன்றும் மவுசு குறையவில்லை.

கார்ட்டூன் நெட்வொர்க் என்ற பெயரை கேட்டாலே பல இனிய நினைவுகள் நம் கண் முன் தோன்றும். இப்படியிருக்க கடந்த செவ்வாய்க் கிழமை அன்று பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வார்னர் ப்ரோஸ் கார்ட்டூன் நெட்வொர்க்கை தன்னுடன் இணைத்துக்கொண்டதாக செய்திகள் வெளியாகின.

இதனை அறிந்த பலரும், 30 வருடங்களாக தங்களை மகிழ்வித்து வந்த, கார்ட்டூன் சேனலின் முடிவு இது என்று தெரிவித்து வருகின்றனர். இனி பழையபடி இந்த சேனல் இயங்காது என்றும், ஆஸ்தான நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு நிறுத்தப்படும் என்றும் இணையவாசிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Cartoon Network
பெங்களூரு: Uber, Ola, Rapido சேவைகளை நிறுத்த உத்தரவு- அரசின் முடிவுக்கு காரணம் என்ன?

மேலும் தங்களால் இந்த செய்தியை நம்ப முடியவில்லை என்றும், ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்து வருகின்றனர். அனைவரும் அவர் அவர் சிறுவயதில் பார்த்து ரசித்த, தங்களின் மன கவர்ந்த நிகழ்ச்சிகள் குறித்த நினைவுகளை பகிர்ந்தனர்.

பலரும், தங்கள் சிறுவயதை இனியதாகவும் நினைவுக்கூரத்தகுந்ததாகவும் மாற்றியது கார்ட்டூன் நெட்வொர்க் தான் எனவும் மனமுருக நன்றி தெரிவித்தனர். "இதுவரை அறிமுகமான கார்ட்டூன் சேனல்களில் சிறந்த சேனல் இது தான் எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் ரசிகர்களின் ஆதங்கத்தை பார்த்த கார்ட்டூன் நெட்வொர்க், இந்த செய்திக் குறித்த விளக்கத்தை டிவிட்டரில் அளித்திருந்தது. அதில், "இது முடிவல்ல. நாங்கள் 30 ஆண்டில் கால் பதித்திருக்கிறோம். ரசிகர்களுக்கு: நாங்கள் எங்கும் போய்விடவில்லை, எப்போதும் உங்கள் மனங்களில் வசிக்கின்றோம். உங்கள் விருப்பத்துக்கு உகந்த கார்ட்டூன்களை நீங்கள் பார்க்க கார்ட்டூன் நெட்வொர்க் எப்போதும் கதவுகளை திறந்து வைத்திருக்கும்" என்று தெரிவித்திருந்தது

இந்த ட்வீட்டை பார்த்த ரசிர்கள் பலரும் நிம்மதி பெருமூச்சு விட்டதாக தெரிவித்தனர். ஏன் இந்த செய்தி வெளியானது? நீங்கள் தனிபட்ட நிர்வாகமாக செயல்படுவீர்களா போன்ற கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இருந்த போதும், வார்னர் ப்ரோஸுடன் இணைக்கப்பட்ட பிறகு கார்ட்டூன் நெட்வொர்க்கின் 26% பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Cartoon Network
Scooby Dooவில் ஓரினச் சேர்க்கையாளர் கதாபாத்திரம்; முன்பே கணித்த ரசிகர்கள்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com