இரண்டு மூக்கு கொண்ட பூனை : இது எவ்வளவு அரிதானது?
இரண்டு மூக்கு கொண்ட பூனை : இது எவ்வளவு அரிதானது?twitter

இரண்டு மூக்கு கொண்ட பூனை : இது எவ்வளவு அரிதானது?

பிறவியிலேயே அசாதாரணமாக இரண்டு மூக்குடன் இந்த பூனை பிறந்துள்ளது தெரியவந்துள்ளது. இது மாதிரி இரண்டு மூக்கு உள்ள பூனையைப் பார்ப்பது தங்களது அனுபவத்தில் இதுவே முதல்முறை என்கிறார் பூனை பாதுகாப்பு அமைப்பின் மூத்த மருத்துவர்.

வீடு இல்லாமல் தெருவில் சுற்றித்திரிந்த பூனை ஒன்றுக்கு இரண்டு மூக்குகள் இருப்பது தெரிந்த பின்னர் அதற்கு தங்குமிடமும் பாதுகாப்பும் கிடைத்திருக்கிறது.

பூனை பாதுகாப்பு மற்றும் தத்தெடுப்பு மற்றும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் முதலில் இந்த பூனை சற்று பெரிதான மூக்கு இருக்கும் சாதாரண பூனை என்றே நினைத்திருந்தனர்.

அதன் பிறகு பிறவியிலேயே அசாதாரணமாக இரண்டு மூக்குடன் இந்த பூனை பிறந்துள்ளது தெரியவந்துள்ளது. இது மாதிரி இரண்டு மூக்கு உள்ள பூனையைப் பார்ப்பது தங்களது அனுபவத்தில் இதுவே முதல்முறை என்கிறார் பூனை பாதுகாப்பு அமைப்பின் மூத்த மருத்துவர்.

பூனைகளுக்கு பிளவு உதவு, கன்னத்தில் பிளவு இருப்பது போன்று பிறவியிலேயே சாதாரணமான தோற்றம் இருப்பது மிகவும் அரிதானது இல்லை.

மரபணு கோளாறுகள் அல்லது கருவில் இருக்கும்போது ஏற்படும் பிரச்னைகளால் அதுபோன்ற தோற்ற மாற்றங்கள் நிகழலாம். ஆனால் இரண்டு மூக்கு இருப்பது மிகவும் அரிதான ஒன்றுதான்.

பூனைப் பாதுகாப்பு மையத்தில் பணியாற்றுபவர்கள் அந்த பூனை உற்றுப்பார்ப்பதை நிறுத்தவே முடியவில்லை என பிபிசியிடம் கூறியிருக்கின்றனர்.

இப்போது மையத்தில் பிரபலமான பூனையாக இருக்கும் இரண்டு மூக்கு பூனைக்கு McPhee எனப் பெயரிட்டுள்ளனர். இப்போது அவரைத் தத்தெடுத்துக்கொள்ளும் அன்பான குடும்பத்துக்காக காத்திருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com