சீனா : மிகப்பெரிய கோடீஸ்வரரை 13 ஆண்டுகள் சிறையில் அடைத்த அரசு - உடையும் மர்மம்

சீனாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான சியாவோ கடந்த 2017 ஆம் ஆண்டில் ஹாங்காங்கில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் இருந்து காணாமல் போனார். அதன் பிறகு அவர் எங்கிருக்கிறார் என்பது மர்மமாகவே இருந்தது.
 சியாவோ ஜியான்ஹூவா
சியாவோ ஜியான்ஹூவாTwitter
Published on

சீன - கனடிய கோடீஸ்வரரான சியாவோ ஜியான்ஹூவாவிற்கு சீனாவில் 13 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. அவரது நிறுனவத்திற்கு 8 பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சியாவோ ஜியான்ஹூவா மற்றும் அவரது நிறுவனமான டுமாரோ ஹோல்டிங்ஸ் மீது லஞ்சம் மற்றும் மோசடிப் புகார் நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஹாங்காங் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சீனாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான சியாவோ கடந்த 2017 ஆம் ஆண்டில் ஹாங்காங்கில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் இருந்து காணாமல் போனார்.

அவர் வழக்கை எதிர்கொள்வார் என்று கனடிய தூதரகம் ஜூலை மாதம் தெரிவிக்கும் வரை சியாவோவிடம் இருந்து அதிகார்ப்பூர்வ செய்தி எதுவும் வரவில்லை. இந்த வழக்கு ஜூலை 4 அன்று தொடங்கும் என்று அப்போது கூறப்பட்டது.

சியாவோ மற்றும் அவரது நிறுவனம் சட்டவிரோதமாக பொது மக்களின் வைப்புத் தொகையை எடுத்துக் கொண்டது, நம்பகமான சொத்துக்களின் பயன்பாட்டில் நம்பிக்கையை மீறியது, முறைகேடாக நிதியைப் பயன்படுத்தியது என ஷாங்காய் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறது.

மேலும் சியாவோவும் அவரது நிறுவனமும் நிதி மேலாண்மை ஆணையை கடுமையாக மீறியுள்ளதோடு, அரசு நிதிப் பாதுக்காப்பையும் பாதித்துள்ளனர் என்று நீதிமன்றம் கூறியது.

சியாவோவும் அவரது நிறுவனமும் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் அதிகாரிகளுடன் ஒத்துழைத்தாகவும் அதனால் அவரது தண்டனை குறைக்கப்பட்டாதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

ஜூலை மாதம் கனடிய தூதரகம் தனது பிரதிநிநிதிகளுக்கு நீதிமன்ற விசாரணையின் போது அனுமதி மறுக்கப்பட்டதாக கூறியது. ஒரு கனடிய குடிமகனாக கனடிய தூதரக சேவைகளை அணுகுவதற்கு சியாவோவிற்கு உரிமை உள்ளதா என்று கேட்டதற்கு, சீனா இரட்டை குடியுரிமையை அங்கீகரிக்கவில்லை, எனவே சியாவோவிற்கு அத்தகைய உரிமைகள் இல்லை என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் குடும்பம் உட்பட ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களோடு சியாவோ நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார்.

2016 ஆம் ஆண்டு வாக்கில் சியாவோவின் சொத்து மதிப்பு 6 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சியாவோ என்ன ஆனார்?

2017 ஆம் ஆண்டில் ஹாங்காங்கில் உள்ள ஃபோர் சீசன்ஸ் எனும் ஹோட்டலில் வசித்து வந்த சியாவோ காணாமல் போனார். அவர் காணாமல் போன பிறகு அவரது குடும்பத்தினர் ஹாங்காங் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். ஆனால் சியாவோ தங்களுடன் மீண்டும் தொடர்பு கொண்டதாக கூறி அந்த புகாரை ஒரு நாள் கழித்து திரும்பப் பெற்றனர்.

சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு காட்சிகளின் படி சியாவோ வற்புறுத்தலின் பேரில் ஹோட்டலை விட்டு வெளியேறவில்லை என்று கூறிய ஹாங்காங் போலீசார் அந்தக் காட்சிகளை வெளியிட மறுத்து விட்டனர்.

சியாவோ பின்னர் தான் ஒரு வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக ஒரு பிரபல செய்தித்தாளில் ஒரு அறிக்கை வெளியிட்டார். மேலும் சீனாவில் சட்டத்தின் ஆட்சி நடப்பதாகவும் தான் சீனாவிற்கு நாடு கடத்தப்படவில்லை என்றும் கூறினார். அவரது நிறுவனமும் அவர் நலமாக இருக்கிறார் என்று அறிக்கை வெளியிட்டு பின்னர் அதை திரும்ப பெற்றுக் கொண்டது.

உண்மையில் சியாவோ சீனாவிற்கு கொண்டு செல்லப்பட்டு நீதிமன்ற விசாரணை முடிந்து தற்போது 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் பட்டிருக்கிறார். இதுதான் உண்மை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com