சீனா : ஐந்து வாரங்களில் 60,000 பேர் மரணம்: ருத்ர தாண்டவமாடும் கொரோனா வைரஸ்

கடந்த ஐந்து வார காலத்தில் மட்டும், சீனாவில் சுமார் 60 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அல்லது கொரோனாவோடு தொடர்புடைய உடல் நலக்குறைவு பிரச்சனைகளால் உயிரிழந்திருக்கலாம் என பிபிசி வலைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனா : ஐந்து வாரங்களில் 60,000 பேர் மரணம்: ருத்ர தாண்டவமாடும் கொரோனா வைரஸ்
சீனா : ஐந்து வாரங்களில் 60,000 பேர் மரணம்: ருத்ர தாண்டவமாடும் கொரோனா வைரஸ் Twitter

கடந்த 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒட்டுமொத்த உலகத்தையும் ஸ்தம்பிக்கச் செய்த கொரோனா வைரஸில் இருந்து, கடந்த சில மாதங்களாகத் தான் உலகம் சுவாசிக்கத் தொடங்கியுள்ளது. மருத்துவ நெருக்கடி முதல் பொருளாதார நெருக்கடி வரை எல்லாவற்றையும் எதிர்கொண்ட உலக நாடுகள், கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்ட பிறகு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை.

ஆனால் உலகின் தொழிற்துறை உற்பத்தி மையமாகக் கருதப்படும் சீனாவில் கொரோனா வைரஸ் சூழல் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது.

கடந்த ஐந்து வார காலத்தில் மட்டும், சீனாவில் சுமார் 60 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அல்லது கொரோனாவோடு தொடர்புடைய உடல் நலக்குறைவு பிரச்சனைகளால் உயிரிழந்திருக்கலாம் என பிபிசி வலைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று உருவானது முதல் சீனா ஜீரோ கோவிட் பாலிசி என்கிற கடுமையான கொள்கையைக் கடைபிடித்து வந்தது.

எனவே, ஒரு சிலருக்கு கொரோனா வந்தால் கூட ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் கடும் ஊரடங்கு உத்தரவுகள், மிகப்பெரிய எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டது சீனா.

அதை சமீபத்தில் தான் கொஞ்சம் தளர்த்திக் கொண்டது ஷி ஜின்பிங் தலைமையிலான அரசு. இப்படி கடுமையான ஊரடங்கு உத்தரவுகள், சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளும் விதிமுறைகளை தளர்த்திக் கொண்ட பின் சீனாவில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய உயிரிழப்பு எண்ணிக்கை இது என்பது வருத்தமளிக்கக் கூடியது.

சீனா: உச்சத்தில் கொரோனா- அதிகம் தேடப்பட்ட வார்த்தை என்ன தெரியுமா?

ஏற்கனவே சீனா தன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்வதாக பல்வேறு உலக நாடுகளும் குற்றம் சாட்டி வந்ததும் இங்கு நினைவு கூறத்தக்கது. இத்தனைக்கும் சீனாவின் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் தகன மையங்களில் அளவுக்கு அதிகமாக இறப்புகள் நடப்பதும், இறந்த உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு தகனம் செய்யப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி முதல் 2023 ஜனவரி 12ஆம் தேதி வரையான சுமார் ஐந்து வார காலத்தில், சீனாவில் சுமார் 59 ஆயிரத்து 938 பேர் கொரோனா அல்லது அது தொடர்பான உடல் நலக் குறைபாடுகளால் இறந்திருப்பதாக சீன தரப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானோர் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதில் பலரும் ஏற்கனவே சில உடல் நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

சீனா : ஐந்து வாரங்களில் 60,000 பேர் மரணம்: ருத்ர தாண்டவமாடும் கொரோனா வைரஸ்
சீனா கொரோனா வைரஸ் பிரச்னையில் இருந்து மீளாதது ஏன்? ஜீரோ கோவிட் டு தடுப்பூசிகள்; ஓர் அலசல்

5,503 பேர் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளால் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்கு கொரோனா வைரஸ் முழுமுதற் காரணமாக எடுத்துக் கொள்ளலாம். 54,435 பேர் ஏற்கனவே உள்ள உடல்நலக் கோளாறுகளாலும் புதிதாக ஏற்பட்ட கொரோனா தொற்று பாதிப்புகளாலும் உயிரிழந்திருக்கலாம் என பிபிசி வலைதள கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தற்போது சீனா குறிப்பிட்டு இருக்கும் எண்ணிக்கையை விட எதார்த்தத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம் சீனாவில் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவைகள் வழங்கப்படும் இடங்களில் நிகழும் கொரோனா மரணங்கள் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தரவுகளோடு சேர்க்கப்படுகிறது. மற்ற இடங்களில் நிகழும் மரணங்களில் பலதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

கடந்த மாதம் தான் சீனா கொரோனா மரணங்கள் கணக்கிடும் முறையை மாற்றியது. யார் ஒருவர் நேரடியாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சுவாச பிரச்சனைகளால் உயிரிழக்கிறார்களோ அவர்கள் மட்டுமே கொரோனாவால் இறந்தவர்கள் என கணக்கில் எடுத்துக் கொள்ளும் என அறிவித்தது. இதை உலக சுகாதார அமைப்பு ஆரம்பத்திலிருந்து விமர்சித்து வருகிறது. கொரோனாவால் ஏற்படும் மரணங்களுக்கு சீனா கொடுத்திருக்கும் இந்த விளக்கம் மிக மிகக் குறுகியது என்று கண்டித்ததும் இங்கு நினைவு கூறத்தக்கது.

எங்களுடைய கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை விவரங்கள் எல்லாம் மிகச் சரியாக இருப்பதாகச் சொல்லி, உலக சுகாதார அமைப்பின் விமர்சனங்கள் அனைத்தையும் புறந்தள்ளி இருக்கிறது சீனா.

சீனா - தைவான் பிரச்னை: ஏன்...? எதனால்? - விரிவான விளக்கம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை, சீனாவில் இந்த ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் உச்சத்தில் இருந்தது இப்போதும் தொடர்ந்து கொரனவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதே நிலையில் தொடர்ந்து வருகிறது.

இப்போதும் சீனாவின் கிராமப்புறங்கள் உட்பட பல பகுதிகளிலும் சூழ்நிலையை மேற்பார்வை செய்து வருவதாகவும், ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்படுவதை முன்கூட்டியே கணித்து அதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், கொரோனாவால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மருத்துவ சிகிச்சைகள் வழங்க ஏற்பாடு செய்து வருவதாகவும் சீன தரப்பு கூறியுள்ளது. என்று ஒழியும் இந்த கொரோனா பெருந்தொற்று?

சீனா : ஐந்து வாரங்களில் 60,000 பேர் மரணம்: ருத்ர தாண்டவமாடும் கொரோனா வைரஸ்
சீனா: கொரோனா ஊரடங்குக்கு எதிரான போராட்டம் அரசுக்கு எதிராக திரும்புகிறதா?- விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com