சீனாவில் பெண் ஒருவர் தனது வளர்ப்பு பிராணிகளான நாய் மற்றும் பூனைகளுக்கு தனது பல கோடி ரூபாய் சொத்துக்களை உயிலாக எழுதி வைத்த சம்பவம் இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரை சேர்ந்தவர் லியூ. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வித்தியாசமான உயிலை எழுதி வைத்துள்ளார்.
அதில் தனக்கு உடல் நலம் பாதித்து இருந்த போதும், மரண தருவாயிலும் தனது 3 குழந்தைகளில் ஒரு குழந்தை கூட கவனிக்கவில்லை. இதனால் கோபமடைந்த லியூ , தனது உயிலை புதுவிதமாக எழுதினார்.
அதில் எனது இறுதி காலத்தில் நான் பெற்ற பிள்ளைகள் ஒருவர் கூட என்னை கவனிக்கவில்லை. ஆகவே நான் குழந்தைகளாக வளர்த்த எனது செல்ல பிராணிகளான நாய் மற்றும் பூனைக்கு 23 கோடி மதிப்பிள்ள சொத்தை எழுதி வைப்பதாக அந்த உயிலில் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குழந்தைகள், கால்நடை மருத்துவமனை ஆரம்பித்து நாயையும், பூனையையும் வளர்க்க அனுகியுள்ளனர்.
எனெனில் அந்த பெண்ணின் முழு சொத்து மதிப்பும் தற்போது அந்த செல்லப்பிராணிகளின் பெயரில்தான் உள்ளது. தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust