வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் வரும், “கட்டிப்பிடி வைத்தியம்” பற்றி நாமெல்லாமே அறிந்திருப்போம். “அரவணைப்பு” என்பது நோய்களையே குணப்படுத்தும் என்கிற அளவிற்கு ஒரு தியரியை உருவாக்கிய படம் அது.. அப்படிக் கட்டிப்பிடிப்பது ஒரு சம்பிரதாயமாக, மருத்துவமாக இருக்கையில், ஒருவர் கட்டிப் பிடித்ததால் வழக்கை எதிர்கொண்டிருக்கிறார் என்றால் எப்படி இருக்கும்?
ஆம், இந்த சம்பவம் உண்மையில் சீனாவில் நடந்திருக்கிறது. சீனாவின் ஹுனான் மாகாணத்தின் யுயாங் நகரத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது அலுவலகத்தில் சக ஊழியருடன் அரட்டை அடித்துக்கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அங்கே வந்த ஒரு ஆண் சக ஊழியர், அவளை இறுக்கமாகக் கட்டிப் பிடித்திருக்கிறார்.
அப்போது அந்த பெண் வலியால் துடித்து அலறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தொடர்ந்து அந்த பெண்ணிற்கு வலி இருந்திருக்கிறது. சாதாரண சுளுக்கு போல இருக்கும் என்று, மார்பு, முதுகுப் பகுதிகளில் எண்ணெய்யைத் தடவிக் கொண்டு சமாளிக்க முயற்சி செய்திருக்கிறார். ஐந்து நாட்களுக்குப் பிறகு, வலி இன்னும் அதிகமாகவே மருத்துவனைக்குச்சென்றிருக்கிறார்.
எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில், அவரின் விலா பகுதியில் மூன்று எலும்புகள் முறிந்திருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அந்த பெண் வேலைக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. மேலும், மருத்துவச் செலவுகளுக்கும் எக்கச்சக்கமாகப் பணம் செலவு செய்ய வேண்டி இருந்திருக்கிறது.
இந்த காயத்திலிருந்து மீண்டு வருகையில், தன்னைக் கட்டிப்பிடித்த ஆண் ஊழியரிடம் சென்று இது குறித்துப் பேசியிருக்கிறார். அதற்கு அந்த ஆண் ஊழியரோ, “உன்னை நான் கட்டிப் பிடித்ததற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறாய்?” என்று கேட்டிருக்கிறார்.
இந்த உரையாடலில் சுமுகமான முடிவு கிடைக்காமல் போகவே, அந்த பெண் நீதிமன்றத்தின் உதவியை நாடியிருக்கிறார். தனக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு, உரிய இழப்பீடு பெற்றுத் தருமாறு கோரிக்கை வைத்தார்.
இந்த வழக்கு விசாரனையின் முடிவில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10,000 யுவான் சீன ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என் தீர்ப்பளித்தார். இந்திய மதிப்பில் 1.16 லட்சம் ரூபாய். மேலும், அந்த பெண்ணுக்கு வேறு எதனால் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கும் என்பதை எதிர் தரப்பு நிரூபிக்க தவறிவிட்டதாகவும் நீதிபதி கூறினார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust