பிலிப்பைன்ஸில் உள்ள 'சாக்லேட் ஹில்' ஏன் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் தெரியுமா?

இயற்கை அழகில் உள்ள இந்த மலைத்தொடர் கோடைக்காலத்தில் சாக்லெட் போல மின்னுவதை காண ஏராளமான சுற்றுலாவசிகள் வருகின்றனர்.
Chocolate Hill doesn’t treat you with chocolate, but a surprising twist
Chocolate Hill doesn’t treat you with chocolate, but a surprising twistcanva
Published on

சாக்லேட் என்றாலே நமக்கு பிடிக்கும். இதே பெயரில் ஒரு புகழ் பெற்ற சுற்றுலா தலம் உள்ளது என்பது குறித்து நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

பிலிப்பைன்ஸில் உள்ள போஹோல் என்ற இடத்தில் தான் இந்த சாக்லே ஹில் உள்ளது. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு வசீகரிக்கும் இடமாகவும் பிலிப்பைன்ஸின் மூன்றாவது தேசிய புவியியல் நினைவுச்சின்னமாகவும் இது உள்ளது. இந்த குட்டித் தீவின் மையத்தில் அமைந்துள்ள சாய்ந்த மலைகள், வறண்ட காலநிலை காரணமாக சாக்லேட் நிறமாக காணப்படுகிறது.

இந்த சாக்லேட் ஹில்ஸ் சுமார் 20 சதுர மைல்களுக்கு மேல் பரந்து விரிந்துள்ளது. இங்கு உள்ள மலைத்தொடர்கள் இவற்றில் உள்ள தாவரங்கள் சுற்றுலாவாசிகளை கவரும் வகையில் உள்ளது.

மே 24, 2023 அன்று, யுனெஸ்கோ இதை பிலிப்பைன்ஸின் முதல் புவிசார் பூங்காவாக அறிவித்தது. ஏறக்குறைய 2-3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ப்ளியோசீன் காலத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சுண்ணாம்புக் கற்கள் அரிக்கப்பட்டதன் விளைவாக இந்த மலைகள் உருவாகியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்த இடத்தில் அதிக சுற்றுலாசிகள் வருவதால் இந்த இடத்தை தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமைத்து கட்டிடங்கள் எழுப்புவதாகவும் இதனால் அங்கு உள்ள இயற்கை வளங்கள் அழிவதாகவும் அந்த பகுதியில் உள்ள தன்னார்வ அமைப்பாளர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இயற்கை அழகில் உள்ள இந்த மலைத்தொடர் கோடைக்காலத்தில் சாக்லெட் போல மின்னுவதை காண ஏராளமான சுற்றுலாவசிகள் வருகின்றனர்.

Chocolate Hill doesn’t treat you with chocolate, but a surprising twist
நேபாளத்தில் உள்ள ’ஜனக்பூர்’ ஏன் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com