நாட்டை விட பிரபலமாக திகழும் நகரங்கள் பற்றி தெரியுமா?

சில நாடுகள் அவற்றின் பெயர்களை கடந்து அங்கு உள்ள சிறப்பான அடையாளங்கள் மற்றும் இடங்கள் மூலமாக தனித்து தெரிந்து உலகின் பல இடங்களிலிருந்தும் மக்களை கவர்ந்து இழுக்கிறது
Dubai
DubaiNewsSense

இந்த உலகம் தற்போது பல கண்டங்களாக, நாடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சில நாடுகள் அவற்றின் பெயர்களை கடந்து அங்கு உள்ள சிறப்பான அடையாளங்கள் மற்றும் இடங்கள் மூலமாக தனித்து தெரிந்து உலகின் பல இடங்களிலிருந்தும் மக்களை கவர்ந்து இழுக்கிறது. அப்படி பல கலாச்சாரங்கள் , பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடங்களைத்தான் தற்போது பார்க்க உள்ளோம்.

டோக்கியோ, ஜப்பான்

துடிப்பாக இருப்பதில் ஜப்பானியர்கள் போல் இருக்க வேண்டும் என கூறுவார்கள். அதே போல் தொழில்நுட்பத்திலும், காலாச்சாரங்களிலும் சிறந்து விளங்குகிறது ஜப்பான். இங்கு டோக்கியோ டவர் மற்றும் ஷிபுயா கிராசிங் போன்ற நகரங்களும் டோக்கியோவின் பாரம்பரிய கோயில்களும் அதோடு அறிவியல் வளர்ச்சியில் ஆச்சர்யபடுத்தும் கண்டுபிடிப்புகளும் ஜப்பானை பிரபலப்படுத்தி காட்டுகிறது. அதோடு உலக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக ஜப்பானின் டோக்கியோ உள்ளது.

இஸ்தான்புல், துருக்கி

இந்தியாவில் டெல்லி எந்த அளவுக்கு பிரபலமானதோ அதே போல் துருக்கியில் அமைந்துள்ள இஸ்தான்புல் பிரபலமானது. இங்கு உள்ள ஹகியா சோபியா, ப்ளூ மசூதி மற்றும் டோப்காபி அரண்மனையின் அழகு மற்றும் அதன் வரலாறு பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும், துருக்கியின் இன்னொரு அடையாளமாக இஸ்தான்புல் உள்ளது.

ரியோ டி ஜெனிரோ, பிரேசில்

பிரேசில் என்றவுடன் நமக்கு ஞாபகம் வருவது பெரிய இயேசு சிலை கிறிஸ்ட் தி ரிடீமர் சிலை பிரேசிலின் தனி அடையாளமாக மாறியுள்ளது. அதோடு சுகர்லோஃப் மலை மற்றும் கோபகபனா கடற்கரை போன்ற இடங்கள் பிரேசிலின் தனி அடையாளமாக திகழ்கிறது.

பாங்காக், தாய்லாந்து

தாய்லாந்து என சொன்னாலே நமக்கு துடிப்பான ஜாலியான இரவு வாழ்க்கைக்கு ஏற்ற இடம் தாய்லாந்தில் உள்ள பாங்காக் தான் நினைவிற்கு வரும். அதே போல் இங்கு உள்ள உணவு வகைகளும் புகழ் பெற்றவை. அதோடு தனது கலாச்சாரம் இயற்கை அழகை காண சுற்றுலா பயணிகள் பலரும் இங்கு வருகை தருகின்றனர்.

ரோம், இத்தாலி

வரலாற்றில் கீழடி , ஹரப்பா எந்த அளவுக்கு முக்கியமானதோ அதே அளவில் பல வரலாற்று பதிவுகளை தன்னுள் வைத்துள்ளது ரோம். உலகில் உள்ள பழமையான நகரங்கள் இத்தாலியில் உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ரோம் மன்னர்கள் இந்திய மன்னர்களுடன் வணிக தொடர்பில் இருந்தனர் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர், வரலாற்றை விரும்பும் மக்களை தனியாக ஈர்த்து வருகிறது இத்தாலி.

துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

எண்ணெய் வளங்களுக்கு புகழ் பெற்ற நாடான துபாய் தற்போது சுற்றுலா துறைக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது. ஆகவே இந்தியாவில் உள்ள பல திரை பிரபலங்களுக்கு கோல்டன் குளோப் விசா கொடுத்துள்ளது.

உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவும், செயற்கைத் தீவுக்கூட்டமான பாம் ஜுமேராவும் துபாயின் கட்டிடக்கலை அதிசயங்கள் துபாய்க்கு ஒரு அடையாளமாக மாறியுள்ளது.

ஒரு காலத்தில் வேலைக்காக சென்ற மக்கள் தற்போது துபாய் உருவாக்கியுள்ள செயற்கை அருவிகளையும் சரணாலயங்களையும் காண மக்கள் குவிந்து வருகின்றனர்.

Dubai
துபாய்: அபுதாபியில் கட்டப்பட்ட முதல் இந்து கோயில்; எப்போது திறக்கப்படுகிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com