காலநிலை மாற்றம்: உக்ரைன் ரஷ்யா போரால் என்ன நிகழ்ந்து இருக்கிறது தெரியுமா?

வியட்நாம் நாடு சோலார் மின்சார உற்பத்தியை ஒரு வருடத்தில் 300% அதிகரித்திருக்கிறது. வியட்நாமில் சூரிய மின்சாரத்தை தயாரிப்பதற்கு அரசு நிதியுதவி செய்கிறது. வீடுகள், தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்கு போக உள்ள மீதி மின்சாரத்தை அது வாங்கிக் கொள்கிறது.
காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்NewsSense
Published on

ஒரு ஆய்வின் படி 2021 ஆம் ஆண்டில் முதல் முறையாக உலகளாவிய மின்சாரத்தில், 10% காற்று மற்றும் சூரிய சக்தி பங்களித்திருக்கிறது. காலநிலை மற்றும் ஆற்றல் சிந்தனைக் குழுவான எம்பெரின் ஆய்வின்படி, ஐம்பது நாடுகள் காற்று மற்றும் சூரிய மூலங்களிலிருந்து தங்கள் ஆற்றலில் பத்தில் ஒரு பங்கிற்கு மேல் உற்பத்தி செய்து பயன்படுத்துகின்றன.

2021 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரங்கள் கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து மீண்டு வருவதால், எரிசக்திக்கான தேவை அதிகரித்திருக்கிறது. 1985க்கு பிறகு மின்சாரத்திற்கான தேவை பிரம்மாண்டமாக வளர்ந்தது. இதனால் நிலக்கரியில் தயாரிக்கப்படும் மின்சாரம் ஒரு எழுச்சியைக் கண்டது.

இந்தியா எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்துகிறதோ அந்த அளவு மின்சாரம் உலக அளவில் புதிதாக தேவைப்படுவதாக மேற்கண்ட ஆய்வு காட்டுகிறது.

சூரியன், காற்று மற்றும் பிற மாசற்ற மின்சார ஆதாரங்கள் 2021 இல் உலகின் 38% மின்சாரத்தை உற்பத்தி செய்தன. முதன் முறையாக காற்றாலை விசையாழிகள் மற்றும் சோலார் பேனல்கள் மொத்தத்தில் 10% உற்பத்தியை பங்களித்தன.

காலநிலை மாற்றம்
வேடர்கள்: இலங்கையின் கடைசி பழங்குடி மக்களின் அவல வாழ்க்கை
NewsSense

பாரிஸ் காலநிலை ஒப்பந்தம்

பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் கையெழுத்தான 2015 ஆம் ஆண்டிலிருந்து காற்று மற்றும் சூரியன் மூலம் வரும் மின்சாரத்தின் பங்கு இரட்டிப்பாகியுள்ளது.

நெதர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் காற்று மற்றும் சூரிய மின்சாரத்திற்கு வேகமாக மாறின. மூன்றுமே கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்களின் மின்சாரத் தேவையை புதை படிவ எரிபொருட்களான நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்றவற்றிலிருந்து மாறி மாசற்ற பசுமை வடிவங்களுக்கு மாறியுள்ளன. இதைப் போன்று நெதர்லாந்தும் சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் சாதனை படைத்துள்ளது.

வியட்நாம் நாடு சோலார் மின்சார உற்பத்தியை ஒரு வருடத்தில் 300% அதிகரித்திருக்கிறது. வியட்நாமில் சூரிய மின்சாரத்தை தயாரிப்பதற்கு அரசு நிதியுதவி செய்கிறது. வீடுகள், தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்கு போக உள்ள மீதி மின்சாரத்தை அது வாங்கிக் கொள்கிறது.

உலகில் கடந்த ஆண்டு சூரிய மின் உற்பத்தியில் ஒரு பெரும் வளர்ச்சி இருந்தது. அது அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு இல்லை என்றாலும் நிலக்கரி மற்றும் எரிவாயு உற்பத்தி இரண்டின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

டென்மார்க் போன்ற சில நாடுகள் இப்போது காற்றாலை மற்றும் சூரிய சக்தியிலிருந்து 50% த்துக்கும் அதிகமான மின்சாரத்தைப் பெறுகின்றன. எனினும் உலகில் நிலக்கரியால் தயாரிக்கப்படும் மின்சாரமும் 2021 இல் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது உண்மையே.

நிலக்கரி பயன்பாட்டின் பெரும்பகுதி சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்தது. ஆனால் நிலக்கரியின் பயன்பாடு அதிகரித்தது போல எரிவாயு பயன்பாடு அதிகரிக்கவில்லை. இது உலகளவில் 1% மட்டுமே அதிகரித்தது. எரிவாயுவின் விலை அதிகம் என்பதால் நிலக்கரிதான் மலிவான மின்சாரா ஆதாரமாக திகழ்கிறது.

NewsSense

பத்து மடங்கு அதிகம்

ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பெரும்பகுதியில் எரிவாயுவின் விலை கடந்த ஆண்டை விட 10 மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆனால் நிலக்கரியின் விலை கடந்த ஆண்டை விட மூன்று மடங்குதான் அதிகம்.

2021 இல் நிலக்கரி உற்பத்தி அதிகரித்தாலும், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் கனடா உள்ளிட்ட பெரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகள் அடுத்த 15 ஆண்டுகளில் 100% கார்பன் இல்லாத மின்சாரத்திற்கு தங்கள் நாட்டை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நூற்றாண்டில் உலகின் வெப்பநிலை உயர்வை 1.5 செல்சியசுக்கு கீழ் வைத்திருப்பது குறித்த முயற்சிகளால் இப்படி காலநிலைக்கேற்ற மின்சாரம் உலகில் உற்பத்தி செய்வது வளர்ந்து வருகிறது. ஆனால் இந்த வெப்பநிலை உயர்வை முற்றிலும் தடுக்க வேண்டுமென்றால் 2030 ஆம் ஆண்டு வரை காற்று மற்றும் சூரிய சக்தி மின்சாரம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20% வளர வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

உக்ரைனில் நடக்கும் போர், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியைச் சார்ந்திருக்காதா மின்சார ஆதாரங்களுக்கு ஒரு உந்துதலைக் கொடுக்கலாம்.

எது எப்படியோ காலநிலை மாற்ற கவலைகளோ, இல்லை ரஷ்யாவின் போர் குறித்த கவலைகளோ இந்த உலகில் வெப்பநிலையைக் குறைக்கும் வண்ணம் சூரிய பேனல்கள், காற்றாலை மின்சார உற்பத்தியை அதிகரிப்பது உலகிற்கு நல்லது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com