ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர துறை சார்ந்த திறன்கள், சமயோஜிதம், ஆளுமை, பொறுமை, அணியோடு சார்ந்து இருத்தல், வேலை பார்ப்பது போன்ற விஷயங்கள் நமக்கு மிக முக்கியம்.
கேட்கப்படும் கேள்விகளுக்கு நாம் ஆலோசித்து பதிலளிப்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு சில நிறுவனங்கள், இந்த திறன்களையும் தாண்டி சில விஷயங்களை கவனிப்பதாக முன்வைக்கிறனர்.
உதாரணத்திற்கு சீனா நிறுவனம் ஒன்று முகமூடி அணிந்து கேண்டிடேட்களை நேர்காணலுக்கு வரச் சொன்னது.
அதே போல ஒரு வித்தியாசமான நேர்காணல் முறையை பகிர்ந்திருக்கிறார் டிரென் ஐன்னஸ் என்ற நபர்
டிரெண்ட் ஐன்னஸ் ஜீரோ ஆஸ்திரேலியா என்ற நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர். இவர் நேர்காணலுக்கு வருபவர்களுக்கு காபி கப் டெஸ்ட் என்ற ஒரு சோதனையை முன்வைக்கிறார்.
இந்த காபி கப் சோதனை என்பது என்ன என்பதையும் அவர் 2019ல் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
”நேர்காணலுக்கு வருபவர்களுடன் பேசிக்கொண்டே எங்கள் நிறுவனத்தின் கிச்சனுக்கு செல்வேன். அங்கிருந்து திரும்புகையில் உங்கள் கையில் எப்படியும் ஒரு கோப்பை காபி இருக்கும்”
மீண்டும் பேசிக்கொண்டே நாம் வேறு அறைக்கு செல்வோம். நான் இதை செய்வதில் ஒரு முக்கியமான விஷயம் அடங்கியிருக்கிறது. நேர்காணல் முடிந்தவுடன் நீங்கள் அந்த காபி கப்பினை மீண்டும் கிச்சனில் கொண்டு வைக்கிறாரா என்பதை கவனிப்பேன்” என்றார்.
ஒரு நபர் எப்படியும் தனது திறன்களை, அனுபவத்தை வளர்த்துக்கொள்ளலாம். ஆனால் பண்புகள் அப்படியல்ல. உங்கள் காபி கப்களை நீங்களே சுத்தம் செய்கிறீர்களா என்பது நீங்கள் எவ்வளவு பொறுப்பாக இருக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது என்கிறார் டிரெண்ட்.
டிரெண்ட் பகிர்ந்த இந்த இண்டர்வியூ சீக்ரெட் பலரது கவனத்தை பெற்று வருகிறது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust