கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே முடங்கியிருந்த நேரத்தில், ஒருவர் கூட தங்கள் நாட்டில் பாதிக்கப்படவில்லை என்று கூறி வந்தது வடகொரியா. கடந்த மாதம் முதல் கொரோனா தொற்றை உறுதி செய்த வடகொரிய அரசு, முழு முடக்கத்தை அமல்படுத்தி, விரைவில் பாதிப்பிலிருந்து மீளும் என்று தெரிவித்திருந்தது. பதிவான தொற்றைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் பாதிப்பு குறைந்து வருகிறது என்று வடகொரியா ஒரு பக்கம் தெரிவிக்க உலக சுகாதார அமைப்பின் கூற்றுச் சற்றே அச்சுறுத்தும் விதமாகத் தான் அமைந்துள்ளது.
பாதிப்புகள் நன்றாகவே குறைந்து வருகிறது என்று வடகொரியா கூறுவதில் சந்தேகங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு. இரண்டு வாரங்களுக்கு முன் 390,000 வாக இருந்த பாதிப்பின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்கிறது வட கொரியா. பியோங்யாங் இதுவரை நேரடியாக அவர்கள் நகரத்தில் பதிவான பாதிப்புகளை அளித்ததே இல்லை.
உலக சுகாதார அமைப்பின் அவசரக்கால குழுவின் தலைவர் மைக்கேல் ரியான் கூறுகையில், வடகொரியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு மோசமாக உள்ளதாக சந்தேகம் இருப்பதாகவும், வடகொரியா பதிவாகும் பாதிப்புகளைக் குறைத்துத் தான் அறிக்கை தருவதாகவும் கூறியுள்ளது
முதல் தொற்று உறுதியானதிலிருந்து 96,610 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய வடகொரியா, இதுவரை பாதிப்பால் புதிதாக இறந்தவர்களின் எண்ணிக்கையையும் கொடுக்கவில்லை.
கொரியன் சென்ட்ரல் நியூஸ் ஏஜன்ஸியின்(KCNA) படி மருந்துகள் தயாரிக்கும் பணிகள், குறிப்பிட்ட பகுதிகளில் முடக்கம், கிருமி நாசினி தெளிப்பது போன்ற நடவடிக்கைகள் நடைபெற்றுத் தான் வருகின்றன. மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நேரில் ஆய்வு செய்தார் அந்நாட்டுக் குடியரசு தலைவர் கிம் ஜாங் உன்.
மக்கள் பாதுகாப்பிற்காகத் தேவையான அளவு மருந்துகள் உற்பத்தியும், கையிருப்பு வைத்திருப்பதற்கான ஏற்பாடுகள் தடையற்று நடைபெறுவது அவசியமாகும் என்றார்.
எனினும், உலக சுகாதார அமைப்பின் கூற்று அச்சுறுத்தும் வகையில் தான் அமைந்திருக்கிறது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust