Cruise : சொகுசு கப்பலில் உள்ள ரகசிய அறைகள் - முன்னாள் ஊழியரின் அடடே தகவல்!

ஜேம்ஸ் இந்த கப்பல் ஒன்றில் 200 நாட்களுக்கும் மேலாக பயணித்துள்ளார். TikTok-ல் அவர் கப்பலின் சில ரகசியங்களை தொடர்ச்சியான வீடியோக்கள் மூலம் பகிர்ந்து கொண்டார்.
Cruise Ship (Rep)
Cruise Ship (Rep)Twitter
Published on

மறக்க முடியாத அனுபவத்தையும், நினைவுகளையும் தரக்கூடியது தான் இந்த கப்பல் பயணம். சொகுசு கப்பல் மூலம் உலகம் முழுவதும் பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் விரும்புகின்றனர்.

பொதுவாக பயணக் கப்பல்களில் உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் திரையரங்குகள் போன்ற வசதிகள் இருப்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

ஆனால் கப்பல் முன்னாள் ஊழியர் ஒருவர், கப்பலில் இருந்த சில ரகசிய அறைகளை வீடியோக்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார்.

உலகில் மிக பெரிய கப்பலான குரூஸ் கப்பலில் இருக்கும் ரகசிய அறைகளை அவர் காண்பித்துள்ளார், என்ன அறை அது?

ராயல் கரீபியன் பயணக் கப்பலில் குழு உறுப்பினராகப் பணிபுரியும் பிரையன் ஜேம்ஸ், ரகசிய அறைகளின் ஒரு கண்ணோட்டத்தைப் பகிர்ந்துள்ளார்.

ஜேம்ஸ் இந்த கப்பல்களில் ஒன்றில் 200 நாட்களுக்கும் மேலாக பயணித்துள்ளார். TikTok-ல் அவர் கப்பலின் சில ரகசியங்களை தொடர்ச்சியான வீடியோக்கள் மூலம் பகிர்ந்து கொண்டார்.

நீங்கள் கப்பலுக்குள் செல்லும்போது அவற்றின் முழுமையை கண்டுபிடிக்க பல மாதங்கள் செலவழித்தால் அது பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகிறார் ஜேம்ஸ்.

டெக்கிற்கு கீழே ஒரு ரகசிய கடை உள்ளது, அங்கு பணிக்குழு உறுப்பினர்கள் மட்டுமே தேவையான எதையும் வாங்க முடியும்.

பணியாளர்கள் எட்டு மாதங்களுக்கு கப்பலில் பணியாற்றுகிறார்கள். அங்கு இருந்து வெளியேற அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று அவர் வீடியோவில் கூறினார்.

Cruise Ship (Rep)
கோவா டூ ஜெர்மனி : 43 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மர்மக் கப்பல் - விடை தெரியாத புதிர்

அவர் காண்பிக்கும் வீடியோவில் ஒவ்வொரு அலமாரியிலும் பொருட்கள் நிறைந்திருக்கிறது.

" பணியாளர்கள் பொருட்களை வாங்கக்கூடிய ரகசிய கடையை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள், ஆனால் விருந்தினர்கள் பொருட்களை வாங்கக்கூடிய ஒரு ரகசியக் கடையும் உள்ளது " என்று அவர் கூறினார்.

இது சாதாரண கடை இல்லை, இயந்திரங்கள் மூலம் இங்கு விற்பனை நடக்கிறது.

இந்த இயந்திரங்கள் அவர்களுக்கு தேவையான பொருட்களை விற்கின்றது. பற்பசை, சன்ஸ்கிரீன் போன்ற பொருட்கள் விற்கப்படுகின்றது என்று ஜேம்ஸ் கூறியுள்ளார்.

Cruise Ship (Rep)
15000 ஆடுகளுடன் கடலில் மூழ்கிய கப்பல் : என்ன, எங்கே, எப்போது நடந்தது? - விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com