நாய்க்கு தங்க சிலை : வட கொரியா கிம் -ஐ தெரியும் இந்த துர்க்மெனிஸ்தான் அதிபரை தெரியுமா?

2006ம் ஆண்டு முதல் கொடுங்கோல் ஆட்சி செய்து வரும் இவரை மக்கள் கடவுகளாக வணங்குகிறார்கள் அல்லது அப்படித்தான் வணங்க வேண்டும்.
நாய்க்கு தங்க சிலை
நாய்க்கு தங்க சிலைNewsSense
Published on

சர்வாதிகார நாடான வட கொரியா பற்றி மேற்குலக ஊடகங்களில் அன்றாடம் ஒரு செய்தி வரும். வட கொரியாவிற்கு ஒருவர் சுற்றுலா நிமித்தம் செல்வதற்கு தடைகள் பலவற்றைத் தாண்ட வேண்டும். மத்திய ஆசியாவில் இருக்கும் துர்க்மெனிஸ்தானின் நிலையும் அதுதான். இங்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அரசால் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். இப்படி சர்வாதிகாரத்தில் கொடி கட்டிப் பறக்கும் துர்க்மெனிஸ்தான் பற்றி ஊடகங்களில் செய்தி வருவது அரிது.

துர்க்மெனிஸ்தானில் 60 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை விடக் கொஞ்சம் பெரிய நாடு. நாட்டின் பெரும் பகுதி பாலைவனமாக உள்ளது. இந்நாட்டில் ஏராளமான எரிவாயு இருப்பு உள்ளது. இதைத் தவிர பொருளாதாரத்தில் சொல்லிக் கொள்ளுமளவு அங்கு ஏதுமில்லை.

1991ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பழைய சோவியத் யூனியனிடமிருந்து துர்க்மெனிஸ்தான் பிரிந்து தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது.

செதார் பெர்டிமுகமேடோவ்
செதார் பெர்டிமுகமேடோவ்Twitter

குர்பங்குலி பெர்டிமுகமெடோவ்

இந்நாட்டின் முன்னாள் அதிபரின் பெயர் குர்பங்குலி பெர்டிமுகமெடோவ்.

இவர் 2006ஆம் ஆண்டு முதல் கடந்த மார்ச் 2022 வரை சர்வாதிகாரியாக ஆட்சி செய்து வருகிறார். அவரை நாட்டின் "பாதுகாவலர்" என்று மக்கள் அழைக்கிறார்கள் அல்லது அப்படி அழைக்க வேண்டும். துர்க்மெனிஸ்தானின் தலைவர் ஒரு மத வழிபட்டு கடவுள் போலப் போற்றப்படுகிறார். அப்படி மக்களை மாற்றி விட்டார்கள். நாட்டின் தலைநகர் அஷ்கபாத்தில் அதிபரது 69 அடி தங்கச் சிலை 2016 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இச்சிலையைப் பாதுகாவலர் என்று நாட்டு மக்கள் வாழ்த்த வேண்டும். இப்படி நாட்டின் தலைவர் மீதான வழிபாடு என்பது பிரம்மாண்டமாக உள்ளது.

இவர் தான் இப்போது அதிபரில்லையே என நினைக்க வேண்டாம். இவருக்கு பின்னால் அதிபராக பதவியேற்றிருப்பது இவரது மகன் செதார் பெர்டிமுகமேடோவ் தான். சரி, நாட்டின் கதைக்கு வருவோம்.

NewsSensetn
நாய்க்கு தங்க சிலை
விளாடிமிர் புதின் : உளவாளி, கொலைகாரர், பெரும் பணக்காரர் - யார் இந்த Putin?

ஜனநாயகமா... அப்படின்னா?

தென்னமெரிக்க வாழைப்பழக் குடியரசுகளோடு போட்டிப் போடும் நிலையில்தான் ஜனநாயகம் இங்குள்ளது.

நாட்டின் முதல் அதிபரான சபர்முரத் நியாசோவ் எப்படி ஒரு சர்வாதிகாரியாக இருந்தாரோ அதே போன்றுதான் பெர்டிமுகமெடோவும் இருக்கிறார். முதல் அதிபரான நியாசோவ் ஜனவரி மாதத்தின் பெயரையே மாற்றி தன்னுடைய பெயரை வைத்தார். இப்படி ஒரு மாதத்தின் பெயரை தன்னுடைய பெயராக மாற்றிய ஒரு சர்வாதிகாரத் தலைவரை நீங்கள் எங்கும் பார்த்திருக்க முடியாது. மேலும் இவர் மக்களது பொழுதுபோக்கிற்காக 50 மில்லியன் டாலரில் ஒரு பூங்காவைக் கட்டியிருக்கிறார். மக்கள் பற்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எலும்புகளைக் கடித்துப் பழகுவது அவசியம் என ஒரு ‘மருத்துவ’ ஆலோசனையையே கூறியிருக்கிறார். இத்தகைய தலைவர் வழி வந்தவர்தான் இன்றைய அதிபர் பெர்டிமுகமெடோவ்.

துர்க்மெனிஸ்தான்
துர்க்மெனிஸ்தான்Twitter

உலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்நாட்டை உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் அடக்குமுறை அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாகக் கூறுகிறது. மேலும் இந்த அமைப்பு துர்க்மெனிஸ்தானின் பொதுவாழ்வின் அனைத்து அம்சங்களும் அதிபர் மற்றும் அவரது கும்பலால் கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் கூறுகிறது.

நாய்க்கு தங்க சிலை
மான்சா மூசா : பில்கேட்ஸ், அமேசான் ஜெஃப் பெசாஸைவிட உலகின் மிகப்பெரிய பணக்கார தங்க அரசன் கதை

பொருளாதார வீழ்ச்சி

எரிவாயு அதிகம் இருந்தாலும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் அபாயத்தில் உள்ளது. உணவு பற்றாக்குறையும், அதிக பணவீக்கமும் இந்நாட்டில் நிலவுகிறது. அரசு நடத்தும் கடைகளில் போதுமான உணவுப் பொருட்கள் இல்லை. கோதுமை மாவு, ரொட்டி, சர்க்கரை போன்றவற்றை வாங்குவதற்கு மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டும்.

துர்க்மெனிஸ்தானில் என்ன நடக்கிறது என்று நீங்கள் அதிகம் தெரிந்து கொள்ள முடியாது. அந்த அளவிற்கு இந்நாட்டில் கடுமையான தகவல் கட்டுப்பாடு உள்ளது. இதனால் நாட்டில் உள்ள பிரச்னைகள் வெளி உலகிற்குத் தெரியாது.

குர்பங்குலி பெர்டிமுகமெடோவ்
குர்பங்குலி பெர்டிமுகமெடோவ்Twitter

பாரீஸில் இயங்கும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் குழு உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் துர்க்மெனிஸ்தானை கடைசி வரிசையில் வைத்திருக்கிறது. அரசு அனைத்து ஊடகங்களையும் கட்டுப்படுத்துகிறது. இணையத்திலும் கடுமையான தணிக்கை உள்ளது. இதற்கு உட்பட்டுத்தான் மக்கள் செய்திகளை அணுக முடியும். உள்நாட்டு ஊடகங்களுக்கே இதுதான் கதி என்றால் வெளிநாட்டு ஊடகங்களின் நிலை இன்னும் மோசம். வெளிநாட்டு நிருபர்கள் கைது செய்யப்படுவது, மற்றும் சித்திரவதைகளை எதிர்கொள்வது அல்லது பார்க்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலை பார்ப்பது ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டும்.

நாய்க்கு தங்க சிலை
சோவியத் யூனியன் : உக்ரைன், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் - சிதறிய வல்லரசு நாட்டின் கதை

ஊடகங்களில் பெர்டிமுகமடோவின் தோற்றங்களை ஒரு சினிமா ஹீரோ போலக் காட்ட வேண்டும். குதிரையில் பயணிப்பது, விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் காரில் போஸ் கொடுப்பது, பாராளுமன்றத்தில் தங்கக் கட்டியைக் காட்டுவது போன்ற பதிவுகள் அடிக்கடி ஊடகங்களில் வரும்.

இப்படி துர்க்மெனிஸ்தானின் சர்வாதிகார ஆட்சி தெரியாத ஹாலிவுட் நடிகை மற்றும் பாடகியான ஜெனிஃபர் லோபஸ் 2013 ஆம் ஆண்டு அதிபர் பெர்டிமுகமடோவிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் நாட்டின் மனித உரிமைகள் குறித்து தனக்குத் தெரியாது என்று மன்னிப்பும் கேட்டார்.

அதிபர்
அதிபர்Twitter

வடகொரிய அதிபர் போல இவரைப் பற்றியும் அவ்வப்போது உடல் நலமில்லை போன்ற வதந்திகள் வரும். 2019 கோடைக்காலத்தில் அவரது படம் சில வாரங்களாகக் காட்டப்படவில்லை என்றதும் உடனே அவர் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கிளம்பியது. உடனே அவர் குதிரையில் சவாரி செய்வது, பாலைவனத்தில் காரில் செல்வது போன்ற காட்சிகளைப் பகிர்ந்து கொண்டு தான் உயிருடன் இருப்பதை நிரூபித்தார்.

நாய்க்கு தங்க சிலை
வட கொரியா: கிம் ஜாங் உன் வம்சத்தின் விறுவிறுப்பான கதை | பகுதி 1

துர்க்மெனிஸ்தான் ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும். ஆனால் அப்படி பயணிகள் அதிகம் வருவதற்கு இங்கு வழியில்லை. நாட்டின் சுற்றுலாத் துறையைத் திறந்து விட்டால் இந்நாட்டிற்கு பெரும் அன்னியச் செலாவணி கிடைக்கும். தலைநகர் அஷ்கபத்தில் உலகின் மிக அதிகமான வெள்ளை பளிங்கு கட்டிடங்கள் உள்ளன. இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நாட்டில் பழங்குடி மக்களே அதிகம் வாழ்கின்றனர். அவர்களது வாழ்வில் குதிரை முக்கிய பங்கு வகிக்கிறது. குதிரையை மதிப்பதற்கென்றே ஒரு தேசிய விடுமுறை உள்ளது.

துர்க்மெனிஸ்தான் மக்கள்
துர்க்மெனிஸ்தான் மக்கள்Twitter

அதிபர் பெர்டிமுகமடோவ் நாட்டை ஒரு சர்வதேச போக்குவரத்து மையமாக மாற்ற விரும்புகிறார். அதற்காகத் தலைநகர் அஷ்கபத் சர்வதேச விமானநிலையத்தில் பெரிய முதலீடுகளைச் செய்து செயல் படுத்த நினைக்கிறார். ஆனால் சர்வாதிகாரம் கோலோச்சும் ஒரு நாடு எப்படி சர்வதேச போக்குவரத்து மையமாக மாறும்?

முன்னாள் சோவியத் யூனியனிடம் இருந்து பிரிந்த மத்திய ஆசிய நாடுகள் அனைத்தும் இப்படித்தான் சர்வாதிகார நாடாக உள்ளன. ரஷ்யாவும் இப்படித்தான் உள்ளது. ஆகப் பழைய சோவியத் யூனியன் ஒன்றாக இருந்த போது உள்ள நிலையே சோவியத் யூனியன் சிதறுண்ட போதும் இருக்கிறது.

ஏழ்மையும், சர்வாதிகாரமும் நிலவும் இந்நாட்டில் மக்களுக்கு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்?

நாய்க்கு தங்க சிலை
செங்கிஸ்கான் கல்லறை : உலகை நடுங்க வைத்த ஒரு மர்ம வரலாறு - அட்டகாச தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com