பொதுவாக நாம் ஒரு இடத்திற்கு பயணிக்கிறோம் என்றால், எப்படி செல்வோம்? பஸ், கார், ரயில், விமானம் என நமக்கு பல ஆப்சன்கள் உண்டு. சக்கரம் போன்றவை கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னர், நடைபயணமாக, கப்பலில் என சென்று கொண்டிருந்தோம்.
அதுவும் பெரியவர்கள் தான் பயணிப்போம். நம்முடைய பாதுகாப்பில் குழந்தைகளை கூட்டிச் செல்வோம்.
ஆனால் அமெரிக்காவில், கைக்குழந்தைகளை தன்னந்தனியாக பயணிக்கவைத்தனர் பெற்றோர்கள். அதுவும், பார்சல் மூலமாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு.
ஆச்சரியமாக இருக்கிறதா? வரலாற்றை பார்க்கலாம் வாருங்கள்
ஜனவரி 1913ல் தொடங்கியது இந்த வழக்கம். அப்போது தான் அமெரிக்காவின் தபால் சேவைகளின் மூலம் அதிக கனமுடைய பொருட்களை அனுப்பலாம் என்ற சேவை மக்களுக்கு இருந்தது
மக்கள் தங்களது மனதுக்கு தோன்றியதையெல்லாம் அனுப்பிக்கொண்டிருந்தனர். சவப்பெட்டி, முட்டை, நாய் போன்றவை
இதனையடுத்து, ஓஹியோ மாகாணத்தை சேர்ந்த தம்பதியினர், தங்களது கைக்குழந்தையை தபாலில் அனுப்பினர்.
ஒரு மைல் தூரமே உள்ள அவனது பாட்டி வீட்டுக்கு பார்சலில் சென்றான் குழந்தை. இந்த குழந்தை சுமார் 10 பவுண்ட் எடை கொண்டிருந்தது. 15 சென்ட் கட்டணமாகவும், 50 டாலர்கள் காப்பீட்டு தொகையாகவும் செலுத்தப்பட்டது
அதன் பிறகு பிப்ரவரி 1914ஆம் ஆண்டில் 6 வயது பெண் குழந்தை மே பியர்ஸ்டாஃப் 73 மைல்கள் தபாலில் அனுப்பப்பட்டாள். குடும்பத்தினருக்கு நன்கு பழக்கமுடைய ஒரு தபால்காரர் அந்த குழந்தையை (பார்சலை) எடுத்துச் சென்றார்.
இந்த செய்தி அறிந்த போஸ்ட் மாஸ்டர், குழந்தைகளை தபால் மூலம் அனுப்பும் வழக்கத்துக்கு தடை விதித்தார். ஆனால் உடனடியாக இந்த பழக்கத்தை நிறுத்தவில்லை அமெரிக்கர்கள். 1913ஆம் ஆண்டு முதல், 1915ஆம் ஆண்டு வரை, சுமார் 7 குழந்தைகள் பார்சல் மூலம் பயணித்தனர்.
1915ஆம் ஆண்டு ஒரு பெண் தனது மகளை ஃப்ளோரிடாவில் இருந்து விர்ஜினியா வரை பார்சலில் அனுப்பினார். இதுவே நீண்ட தூரத்துக்கு அனுப்பப்பட்ட தபாலாகும்.
கடைசியாக ஒரு மூன்று வயது குழந்தை ஸ்மித் தபால் மூலமாக, பாட்டி வீட்டில் இருந்து அவனது அம்மா வீட்டுக்கு அனுப்பப்பட்டான்.
இந்த செய்தி அதிகாரிகளின் காதுகளுக்கு சென்றது. விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, இந்த வழக்கம் முற்றிலுமாக தடை செய்யப்பட்டது.
தபால் மூலம் அனுப்பப்பட்ட குழந்தைகள் யாரும் தொலைந்து போனதாகவோ, மரணமடைந்ததாகவோ எந்த தகவலும் இல்லை.
எனினும் இந்த ஆபத்து நிறைந்த வழக்கம் தடை செய்யப்பட்டது.
வடிவேலுவின் பார்சல் சர்வீசில் குடும்பத்தையே அனுப்ப நினைத்த ஆசாமியின் கதை நினைவுக்கு வருகிறதா?
அமெரிக்கர்கள் இதிலும் கூட முன்னோடிகள் தான் போல!
இது குறித்து உங்க கருத்து என்ன மக்களே?
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust