புரட்சி ஓவியம், போர் துப்பாக்கி: எலான் மஸ்க் பகிர்ந்த புகைப்படம் - நெட்டிசன்கள் குழப்பம்

விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் இவர் மீது தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மஸ்க் சர்வ சாதாரணமாக ட்விட்டரில் தனது பதிவுகள் மூலம் அட்ராசிட்டி செய்து வருகிறார்.
புரட்சி ஓவியம், போர் துப்பாக்கி! எலான் மஸ்க் பகிர்ந்த புகைப்படம்,  நெட்டிசன்கள் குழப்பம்
புரட்சி ஓவியம், போர் துப்பாக்கி! எலான் மஸ்க் பகிர்ந்த புகைப்படம், நெட்டிசன்கள் குழப்பம்twitter
Published on

எலான் மஸ்க் தன் பெட்சைட் டேபிளில் துப்பாக்கிகள் வைத்திருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்ற நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் எலான் மஸ்க். இவர் பல குழப்பங்களுக்கு பிறகு கடந்த அக்டோபர் மாதம் டிவிட்டர் நிறுவனத்தை சொந்தமாக்கினார்.

எலான் மஸ்க் என்றால் சர்ச்சை என்பது போல, இவரின் பெயர் ஏதாவது ஒரு விஷயத்தில் அடிபடாமல் இல்லை. விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் இவர் மீது தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மஸ்க் சர்வ சாதாரணமாக ட்விட்டரில் தனது பதிவுகள் மூலம் அட்ராசிட்டி செய்து வருகிறார்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்twitter

இந்நிலையில், நேற்று தன் டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் எலான். அதில், சில டயட் கோக் கேன்கள், தண்ணீர் பாட்டில், ஒரு அமெரிக்க புரட்சி ஓவியம் மற்றும் இரண்டு துப்பாக்கிகள் இருந்தன. இந்த புகைப்படத்தை, “என்னுடைய பெட்சைட் டேபிள்” என்று தலைப்பிட்டு பகிர்ந்திருந்தார் மஸ்க்.

இந்த துப்பாக்கிகள் இரண்டுமே தற்காலத்தின் வடிவத்தில் இல்லை. Gun caseல் இருந்த துப்பாக்கி அமெரிக்க புரட்சி போரில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிப் போல காட்சியளிக்கிறது.

புரட்சி ஓவியம், போர் துப்பாக்கி! எலான் மஸ்க் பகிர்ந்த புகைப்படம்,  நெட்டிசன்கள் குழப்பம்
Twitter : விமர்சித்த ஊழியர்கள் பணி நீக்கம்; மன்னிப்பு கேட்பது போல எலான் மஸ்க் மறைமுக கேலி!

அந்த ஓவியமும் 1851 வரையப்பட்ட Washington Crossing the Delaware என பிசினஸ் டுடே செய்தி தளம் கூறுகிறது.

ஜெனரல் ஜார்ஜ் வாஷிங்டன் ஒரு புயலின் மத்தியில் உறைந்த டெலாவேர் ஆற்றின் வழியே வீரர்களை வழிநடத்திய தருணத்தை தான், ஓவியர் இமானுவேல் லூட்ஸே என்பவர் வரைந்துள்ளார். இந்த தருணம் அமெரிக்க புரட்சி போரில் ஒரு முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.

புரட்சி ஓவியம், போர் துப்பாக்கி! எலான் மஸ்க் பகிர்ந்த புகைப்படம்,  நெட்டிசன்கள் குழப்பம்
Twitter: இயேசு, சாத்தானுக்கு 'Verified' கணக்குகள் - என்ன செய்யப்போகிறார் எலான் மஸ்க்?

மற்றொரு துப்பாக்கி சைன்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் துப்பாக்கி. மேலும் அந்த துப்பாக்கிகள் தற்போது உபயோகத்தில் இல்லை எனவும் கூறப்படுகிறது.

இவற்றுடன், வஜ்ரா எனப்படும் புத்த தாயத்தும் இருந்தது. இது திபெத்திய பௌத்த விழாக்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஐந்து முனை சடங்குப் பொருளாகும்.

அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி சூடுகள் அதிகரித்து வரும் நிலையில், துப்பாக்கி விற்பனையில் கட்டுப்பாடு வேண்டும் என குரல் கொடுத்து வருபவர்களில் ஒருவர் மஸ்க்.

இதனால் இந்த புகைப்படம் இணையவாசிகளை சற்றே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com