மீண்டும் டைனோசர்கள்: Dinosaur கருமுட்டையை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்

வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய விலங்குகள் மற்றும் நவீன பறவை இனங்களுக்கு இடையேயான தொடர்புக்கு இது வலுசேர்ப்பதாக உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மீண்டும் டைனோசர்கள்: Dinosaur கருமுட்டையை கண்டறிந்த சீன விஞ்ஞானிகள்

மீண்டும் டைனோசர்கள்: Dinosaur கருமுட்டையை கண்டறிந்த சீன விஞ்ஞானிகள்

Dinosaur

Published on

6.6 கோடி வருடங்களுக்கு முந்தைய டைனோசர் கருமுட்டை ஒன்றை கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

6 கோடி வருடத்திற்கு முன்பானது என்றாலும் இது நேர்த்தியாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த கருமுட்டை ஒரு கோழிக்குஞ்சை போல முட்டையிலிருந்து வெளிவர காத்திருந்தது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த டைனோசர் வகை தெரோபாட் என்று அழைக்கக்கூடிய பல் இல்லா டைனோசர் வகையை சார்ந்தது. இதற்கு கிளி போன்ற அலகும் உண்டு.

சீனாவின் தெற்கு பகுதியில் இந்த டைனோசர் கருமுட்டை கண்டறியப்பட்டது. இதற்கு விஞ்ஞானிகள் ‘குழந்தை யிங்லியாங்’ என்று பெயரிட்டுள்ளனர்.

வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய விலங்குகள் மற்றும் நவீன பறவை இனங்களுக்கு இடையேயான தொடர்புக்கு இது வலுசேர்ப்பதாக உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

<div class="paragraphs"><p><strong>dinosaur embryo found in China</strong></p></div>

dinosaur embryo found in China

Facebook

வரலாற்றில் இதுவரை கண்டறிந்ததில் இது சிறந்த டைனோசர் கருமுட்டை என இந்த கண்டுபிடிப்பில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளரான ஃபியான் வைசும் மா தெரிவிக்கிறார்.

இந்த கருமுட்டையில் தனது உடம்புக்கு கீழே தலையை புதைத்து இரு பக்கத்திலும் காலை வைத்து பின்புறம் முட்டையின் வளைவோடு சேர்ந்தாற்போல காணப்பட்டது அந்த டைனோசர்.

இதனால்தான் அது பறவையைபோல இருந்தது என்று தெரிவிக்கின்றனர்.

ஏனென்றால் நவீன பறவைகள் முட்டையிலிருந்து வருவதற்கு முன் இவ்வாறுதான் முட்டையில் குடியிருக்கும்.

தற்போதைய நவீன பறவைகளின் முன்னோடியாக டைனோசர்கள் கருதப்படுகிறது.

எனவே பறவையின் இந்த செய்கை தங்களின் முன்னோடியான டைனோசர்களிடத்திலிருந்துதான் வந்திருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதாவது இந்த டைனோசர் கருமுட்டைய் ஒரு கோழியின் முட்டையில் குஞ்சு எப்படி படுத்திருக்குமோ அதேபோல உள்ளது. இதுதான் ஆராய்ச்சியாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தெரோபாட் என்று அழைக்கப்படும் இந்த ஓவிராப்டோரோசரஸ் டைனோசர்களின் பெயர் விளக்கம் “முட்டையை திருடும் பல்லிகள்” என்பது. இதற்கு இறகுகள் உண்டு. இது தற்போதைய ஆசியா மற்றும் வட அமெரிக்காவில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.

இந்த முட்டை ஏதோ ஒரு மண்சரிவால் புதையுண்டு எதிரிகளிடமிருந்து தப்பியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

குழந்தை யிங்லியாங் தலை முதல் வால் வரை 27 செமீ நீளம் உள்ளது. இந்த 27 செமீ நீளம் கொண்ட டைனோசர் 17 செமீ நீளம் கொண்ட முட்டைக்குள் அடைந்திருந்தது.

இந்த முட்டை சீனாவில் உள்ள யிங்லியாங் ஸ்டோன் நேச்சர் வரலாற்று அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருந்தது. இது முதலில் 2000ஆம் ஆண்டு கண்டறியப்பட்டு படிமத்தோடு படிமமாக சேகரித்து வைக்கப்பட்டிருந்தது.

10 வருடங்கள் கழித்து அந்த அருங்காட்சியகத்தில் ஒரு கட்டுமான பணி நடந்தபோதுதான் விஞ்ஞானிகள் கண்ணில் இது மீண்டும் பட்டுள்ளது.

அப்போது இதற்குள் டைனோசர் கரு இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் இதை ஆராய தொடங்கினார்.

தற்போதும் இந்த கருமுட்டை முழுவதுமாக ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படவில்லை. ஏனென்றால் இதன் சில பகுதி பாறைக்குள் புதைந்துள்ளது.

எனவே விஞ்ஞானிகள் நவீன ஸ்கேனிங் வசதிகளை கொண்டு இதன் முழு எலும்பு கூட்டையும் கண்டறியவுள்ளனர்.

ஒருசில தினங்களுக்கு முன்புதான் இங்கிலாந்தின் வடக்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் கண்டறியப்பட்ட ராட்ச மரவட்டையின் படிமம், உலகில் வாழ்ந்த மிகப்பெரிய பூச்சியாக இருந்திருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த படிமம் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கண்டறியப்பட்டது.

உயிரோடு இருக்கும்போது இந்த மரவட்டை 55 செமீ அகலம், 2.63 மீட்டர் நீளம் மற்றும் 50கிலோ எடையுடன் இருந்திருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com