மது போதையில் ஈஃபிள் டவரிலேயே இருவர் படுத்து உறங்கியதால் சர்ச்சையாகியுள்ளது.
உலகின் பிரபலாமான சுற்றுலா தலங்களில் ஒன்று பாரிஸில் இருக்கும் ஈஃபிள் கோபுரம். ஆண்டு தோறும் குறைந்தது 5 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துபோகும் இந்த இடத்தில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம்.
அதே சமயத்தில் குறிப்பிட்ட நேரத்தில் தான் சுற்றுலா பயணிகள் இந்த உலக அதிசயத்தில் சுற்றிப்பார்க்கவும் அனுமதிக்கப்படுகின்றனர்.
வழக்கமாக காலை 9 மணிக்கு மக்கள் பார்வைக்கு திறக்கப்படுகிறது ஈஃபிள் டவர்.
இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று இரவு, ஈஃபிள் டவருக்கு வந்த இருவர் அங்கேயே படுத்து உறங்கியுள்ளனர். விசாரித்ததில் அவர்கள் இருவரும் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.
ஞாயிறு மாலை சுமார் 10.40 மணியளவில் உள்ளே சென்றவர்கள், அத்துமீறி ஈஃபிள் டவரின் இரண்டாம் மற்றும் மூன்றாவது தளத்தில் நுழைந்துள்ளனர். வழக்கமாக இந்த தளங்களானது மக்கள் அனுமதிக்கப்படாத இடமாகும்.
ஈஃபிள் டவரின் பாதுகாவலர்கள் இவர்களை கண்டறிந்து காவல்துறைக்கு தகவல் அளித்திருக்கின்றனர். சிறப்பு தீயணைப்பு வீரர்கள் குழு இவர்களை வெளியில் மீட்டது.
வரலாற்று முக்கியத்துவம் உள்ள இடத்தில் அத்துமீறி நுழைந்ததால் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று பாரிஸ் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன் ஈஃபிள் டவரில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த சுற்றுலா பயணிகள் விரைவாக வெளியேற்றப்பட்டு தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து ஈஃபிள் டவரில் பாதுகாப்பு கூடுதல் பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில், மதுபோதையில் இருவர் சுற்றுலா தலத்திற்குள் படுத்து உறங்கிய சம்பவம் மேலும் சர்ச்சியாகியுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust