அமெரிக்கா : மரத்தான் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்ற வாத்து - வைரல் வீடியோ

அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட வாத்து ஒன்று பதக்கம் வெல்லும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Duck
Duck Twitter

இன்றைய நவீன உலகில் பல்வேறு ஆச்சர்ய விஷயங்கள் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கிறது. அதிலும் சில விஷயங்கள் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்ந்தும். இப்படியொரு வேடிக்கையான விஷயம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்துள்ளது.

அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் அவ்வப்போது மாரத்தான் போட்டிகள் நடப்பது வழக்கம். அப்படி சமீபத்தில் நடந்த மாரத்தான் போட்டியில் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டு உற்சாகமாக ஓடிக் கொண்டிருந்த வேளையில் திடீரென்று எல்லோரும் ஆரவாரத்துடன் கத்தி கூச்சல் போட்டனர்.

அதற்குக் காரணம் மாரத்தான் போட்டியில் மக்களுடன் வெள்ளை வாத்து ஒன்று கலந்து கொண்டது. இப்படியொரு வேடிக்கையான மாரத்தான் போட்டியை இதுவரை அங்கிருந்த யாருமே கண்டிருக்க மாட்டார்கள். இறுதியில் அந்த வாத்து முதலிடம் வந்து பதக்கம் பெற்றது.

போட்டி அமைப்பாளர்கள் அந்த வாத்துக்கு தாகம் தீரத் தண்ணீர் கொடுத்தது மட்டுமின்றி பதக்கத்தையும் அணிவித்து மகிழ்ந்தனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.


Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.


Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com