Moai: ஈஸ்டர் தீவிலிருக்கும் பிரம்மாண்ட சிலைகளுக்கும் ஏலியன்களுக்கும் என்ன தொடர்பு?

5 முதல் 33 அடி உயரம் வரை இருக்கும் இந்த சிலைகள் அதிகபட்சமாக 80 டன் வரை எடைக் கொண்டவை. இந்த பிரம்மாண்ட சிலைகளுக்கு நடக்கும் சிலைகள் என்ற பெயரும் இருக்கிறது. என்னது சிலை நடக்குமா? என ஆச்சரியப்படாமல் முழுவதுமாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
Moai: ஈஸ்டர் தீவிலிருக்கும் பிரம்மாண்ட சிலைகளுக்கும் ஏலியன்களுக்கும் என்ன தொடர்பு?
Moai: ஈஸ்டர் தீவிலிருக்கும் பிரம்மாண்ட சிலைகளுக்கும் ஏலியன்களுக்கும் என்ன தொடர்பு?Moai / Canva

ஈஸ்டர் தீவு பசிபிக் கடலில் இருக்கும் சிறிய தீவாகும். இங்கு உலகப் புகழ்பெற்ற ஒற்றைக்கல் மனித சிலைகள் இருக்கின்றன.

ராபா நுய் என உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இந்த இடம் மோவாய் சிலைகளுக்கு பெயர் பெற்றது. மனித முகத்தைப் போன்ற அமைப்புடன் நிமிர்ந்து நிற்கும் இந்த சிலைகள் 33 அடி வரை உயரமானவை.

இந்த பிரம்மாண்டமான சிலைகளை தாங்கள் தெய்வமாக கருதும் முன்னோர்களை கௌரவிக்கும் விதமாக உருவாக்கியுள்ளனர்.

இந்த தீவு முழுவதும் கிட்டத்தட்ட 900 பெரிய மனித தலை சிலைகள் இருக்கின்றன. இந்த ஒவ்வொரு சிலையும் ஒவ்வொரு சமூகத்தால் செதுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சமூகங்களை ஒருங்கிணைக்க இந்த சிலைகளைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த சிலைகள் ஏன் இங்கே இருக்கின்றன? எப்படி இந்த தீவு முழுவதும் தூக்கிச்செல்லப்பட்டன? அந்த காலத்திலேயே இவ்வளவு நேர்த்தியான சிலைகள் எப்படி உருவாக்கப்பட்டன? போன்ற கேள்விகளுக்கு விடைத்தேடலாம்!

இந்த பெரிய சிலைகளில் பெரும்பாலானவை எரிமலை சாம்பலால் உருவாக்கப்பட்டுள்ளன. கி.பி 1250 முதல் 1500 ஆண்டுகளுக்கு இடையிலான காலத்தில் இவை உருவாக்கப்பட்டுள்ளன.

5 - 33 அடி வரை உயரமாக இருக்கும் இந்த சிலைகளை செதுக்க சிலை ஒன்றுக்கு 1 வருடம் ஆகியிருக்கலாம் எனக் கூறுகின்றனர். மேலும் இந்த தீவில் ஆறோ, ஏரியோ கிடையாது. சில நன்னீர் ஊற்றுகள் இருக்கும், கிணறுகளைப் பயன்படுத்துகின்றனர்.

தீவில் நன்னீர் வளங்கள் எங்கெல்லாம் இருக்கின்றன எனப் பார்த்து இந்த கற்களை வைத்திருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர்.

இந்த சிலைகள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. ஒன்றைப் போல மற்றொன்று இருக்கவே இருக்காது. குழுக்களுக்கு இடையில் சண்டைகள் நடந்த போது இந்த சிலைகளை அவர்கள் தாக்கி சேதப்பட்டுத்தியிருப்பதாக கூறுகின்றனர்.

1868களில் இங்கிருந்த அனைத்து சிலைகளும் சேதமடைந்திருந்தன. சில பாதி அளவு பூமிக்கடியில் புதைந்திருந்தன.

மாவோய் சிலைகள் செதுக்கப்பட்ட காலத்தில் ராபா நுய்யில் வசிக்கும் பூர்வீக மக்களிடம் நவீன வசதிகள் கிடையாது. பெரிய வண்டிகள், யானை போன்ற பெரிய விலங்குகள், கிரேன்கள் எதுவும் இல்லாமல் இந்த பிரம்மாண்டமான சிலைகளை எப்படி நகர்த்தியிருப்பார்கள் என்பது மர்மமான ஒன்றக இருக்கிறது.

80 டன்னுக்கு மேல் எடையிருக்கும் இவற்றை மரக்கட்டைகளில் வைத்து உருட்டியிடுக்கலாம் என சிலர் கூறுகின்றனர். ஆனால் இந்த சிலைகளைக் கயிறு கட்டி நடக்க வைத்திருக்கின்றனர் என்கிறது பிபிசி தளத்தின் அறிக்கை ஒன்று.

இந்த அறிக்கையில் இரண்டு பக்கமும் கயிறுகளைக் கட்டி இடதும் வலதுமாக இழுத்து இதனை நடக்க வைத்திருக்கலாமெனக் கூறப்படுகிறது. நடப்பதற்கு ஏற்ற வகையில் இந்த சிலைகளின் அடி பாகம் செதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

இதனால் இந்த சிலைகளுக்கு 'நடக்கும் சிலைகள்' என்றும் பெயர்! ஆனால் பலரும் இதனை நம்புவதில்லை. தனித்து இருக்கும் இந்த தீவு மக்கள் இதனைச் செய்திருக்க முடியாது, இது ஏலியன்களின் செயல் என ஒரு கும்பல் இன்றும் வாதாடுகிறது.

மாவோய் சிலகைகளில் பெரும்பாலானவை கடலில் இருந்து தீவைப் பார்க்க நிற்கவைக்கப்பட்டுள்ளனர். ஒரே ஒரு சிலை மட்டுமே கடலை நோக்கி இருக்கிறது. அந்த சிலை இருக்கும் இடம் புனிதத்தலமாக பார்க்கப்படுகிறது.

Moai: ஈஸ்டர் தீவிலிருக்கும் பிரம்மாண்ட சிலைகளுக்கும் ஏலியன்களுக்கும் என்ன தொடர்பு?
ஆஸ்திரேலியா ஆதிக்குடிகள் அழிக்கப்பட்ட வரலாறு: பழங்குடிகளிடமிருந்து ஐரோப்பா திருடிய நாடு

சிலைகள் உள்பக்கமாக கிராமங்களை நோக்கி இருப்பதனால் இங்குள்ள மக்கள் அவை தங்களை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் ஆபத்து நேரத்தில் பாதுகாக்கும் என்றும் நம்பிக்கைக் கொண்டிருந்தனர்.

இந்த மாவோய் சிலைகளுக்கு ஈஸ்டர் தீவு தலைகள் என்று பெயர். ஏனெனில் இந்த சிலைகளுக்கு உடல் பகுதி இருப்பதையே பலரும் அறியவில்லை.

பிரபலமான அனைத்து புகைப்படங்களில் தலைக்கு கீழ் உள்ள பகுதிகள் பூமிக்கு அடியில் புதைந்திருப்பதால் மக்கள் அப்படி தவறாக நினைத்துக்கொள்கின்றனர்.

Moai: ஈஸ்டர் தீவிலிருக்கும் பிரம்மாண்ட சிலைகளுக்கும் ஏலியன்களுக்கும் என்ன தொடர்பு?
மதுகிரி : ஆசியாவின் மிக பெரிய ஒற்றைக்கல் பாறை - சென்னையில் இருந்து எவ்வளவு தூரம் தெரியுமா?

இந்த சிலைகளில் தலை முடியோ அல்லது அலங்காரமோ இருக்காது. இதனால் இவை ஒரே மாதிரியான தொப்பியை அணிந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது ஊர் தலைவர்கள் மட்டும் அணியும் தொப்பியாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.

இந்த சிலைகள் சரிந்து அல்லது விழுந்து கிடக்க காரணம் அந்த மக்களின் மூடநம்பிக்கை தான். ஒரு மோவாய் சிலை விழுந்துவிட்டால் அதனை நல்ல சகுனமாக கருதுகின்றனர். இதனால் மீண்டும் எழுப்பி நடுவதில்லை.

இந்த மோவாய் சிலைகளில் ஒன்றான Hoa Hakananai’a என்ற சிலையை 1868ம் ஆண்டு ரிச்சர்ட் போவெல் என்ற ஆங்கிலேயே கப்பல் கேப்டன் விக்டோரியா மகாராணிக்கு பரிசாக அளித்தார். அது லண்டன் மியூசியத்தில் வைக்கப்பட்டது.

மோவாய் சிலைக்கு சொந்தக்காரர்களான தீவின் பூர்வீக மக்கள் அதனை திருப்பித் தரவேண்டும் என சிலி அரசின் வாயிலாக இங்கிலாந்திடம் கேட்டு வருகின்றனர்.

Moai: ஈஸ்டர் தீவிலிருக்கும் பிரம்மாண்ட சிலைகளுக்கும் ஏலியன்களுக்கும் என்ன தொடர்பு?
திருப்பதி : கருவறை மையத்தில் சிலை இல்லையா? பாலாஜி கோவில் குறித்த 5 ரகசியங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com