எலான் மஸ்க் டு ஜெஃப் பெசாஸ் - 'குச்சி ஐஸாக' மாறிய உலக பணக்காரர்கள் - பின்னணி என்ன?

எலான் மஸ்க் முதல் ஜேக் மா வரை, உலக பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் அனைவரது முகங்களை தான் குச்சி ஐஸாக வடிவமைத்து விற்கிறது இந்நிறுவனம். ஒரு ஐஸின் விலை 10 டாலர்கள். இதை வடிவமைப்பது ஒரு கலைஞர்களின் கூட்டு நிறுவனம்.
Jeff Bezos
Jeff BezosTwitter
Published on

பொதுவாக நம் எல்லோருக்கும் ஐஸ்க்ரீம் என்றால் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதன் வித விதமான ஃப்ளேவர்களுக்கு அடிமை.


ஐஸ்க்ரீம் விற்கும் நிறுவனங்கள், புதிய வடிவங்களைக் குழந்தைகளை கவர்வதற்காகவே பிரத்தியேகமாக வடிவமைத்தன. ஸ்பின் வீல், பழங்கள், பொம்மைகள் போன்ற வடிவங்களில் இவை இருக்கும்.

இந்நிலையில், அமெரிக்காவின் ப்ரூக்லின் நகரை சேர்ந்த ஒரு நிறுவனம், சற்று வித்தியாசமான வடிவத்தில் பாப்சிக்கிள்களை (குச்சி ஐஸ்) தயாரிக்கின்றன. இது குழந்தைகளை விட பெரியவர்களைத் தான் அதிகம் ஈர்த்துள்ளது. காரணம், இவற்றின் வடிவம் மனிதர்களின் முகங்கள். அதுவும் சாதாரண மனிதர்கள் அல்ல. நாம் பார்த்து வியக்கும் உலகப் பணக்காரர்கள்!

எலான் மஸ்க் முதல் ஜேக் மா வரை, உலக பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் அனைவரது முகங்களை தான் பாப்சிக்கிள் ஆக வடிவமைத்து விற்கிறது இந்நிறுவனம். ஒரு பாப்சிக்கிளின் விலை 10 டாலர்கள். இதை வடிவமைப்பது ஒரு கலைஞர்களின் கூட்டு நிறுவனம்.


பாப்சிக்கிளில் வடிவமைக்கப்பெற்ற முகங்கள்

1.எலான் மஸ்க்

2.பில் கேட்ஸ்

3.மார்க் சக்கர்பெர்க்

4.ஜெஃப் பெசாஸ்

5.ஜேக் மா

ஏன் உலக பணக்காரர்கள் முகத்தை தேர்ந்தெடுத்தீர்கள் என்ற கேள்விக்கு அவர்கள் தந்த பதில், "நாம் செல்வந்தராக இல்லாவிட்டாலும் நாம் சாப்பிடுவதாவது ரிச்சாக இருக்கட்டுமே" என்று தான் என்கிறார்கள்.

இந்த பாப்சிக்கிளை "Eat the rich" (செல்வத்தை உண்ணுங்கள்) என்ற டேக் லைனுடன் நியூயார்க், கலிஃபோர்னியாவில் உள்ள சான்டா மானிகா ஆகிய இடங்களில் அந்நிறுவனம் விற்கிறது.

இந்த புதிய பாப்சிக்கிள்களுக்கு மக்கள் மத்தியில் பெறும் வரவேற்புள்ளது. காரணம், பெருந்தொற்று காலத்தில், மக்கள் நிதி சார்ந்த விஷயங்களிலும் கஷ்டப்பட்டு வந்த நேரத்தில், உலகப் பணக்காரிகளின் செல்வாக்கு உயர்த்திருந்ததே தவிர, குறையவில்லை என்பது தான்.

இப்படி ஒரு பக்கத்தினர் கூற, மற்றவர்களோ, இதுவும் ஒரு விதத்தில் முதலாளித்துவத்தின் சுரண்டல் தான் என்கின்றனர். அதாவது, செல்வத்தை சாப்பிட காசுக்கொடுக்க வேண்டியுள்ளது என்பதே முரண்பாடாக இருக்கிறது என்பது தான் அவர்களது வாதம்.

Jeff Bezos
Trevor James - The Food Ranger: Youtubeல் கோடிகளில் ஈட்டும் கனடா யூட்யூபர்
Jeff Bezos
Food Delivery: வெறும் வெங்காயத்தை பார்சலில் அனுப்பிய கல் நெஞ்சக்காரர்கள் - கலங்கிய இளைஞர்

மேலும் இதை வடிவமைத்து விற்பதும் ஒரு மில்லியன் டாலர் நிறுவனம். இது கலைஞர்களை, கலையை சுரண்டும் ஒரு செயல் என்று இணையவாசிகள் வசைப்பாடிவருகின்றனர்.

"யார் இவர்களுக்கு சொல்வார்கள்? Eat the rich! ஆனால் அதை $10 கொடுத்து வாங்கி சாப்பிடுகிறார்கள்" என்று ஒரு ட்வீட் இருந்தது.

அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய சமயத்திலேயே பலரது கவனத்தை ஈர்த்த இந்த பாப்சிக்கிள், வரும் புதன் வரை மட்டுமே விற்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Jeff Bezos
எலான் மஸ்க் : "ட்விட்டரை நான் வாங்கமாட்டேன்" - என்ன காரணத்திற்காக வாங்க மறுக்கிறார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com