எலான் மஸ்க் : முன்னாள் ஊழியரிடம் மன்னிப்பு கேட்ட ட்விட்டர் தலைவர் - ஏன் தெரியுமா?

மஸ்க் மீண்டும் ட்விட்டரில் தான் ஹல்லியின் நிலைமையை தவறாக புரிந்துகொண்டதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என ட்வீட் செய்துள்ளார். அத்துடன் ஹல்லி ட்விட்டரில் தொடர்ந்து வேலை செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறியிருக்கிறார்.
எலான் மஸ்க் : முன்னாள் ஊழியரிடம் மன்னிப்பு கேட்ட ட்விட்டர் தலைவர் - ஏன் தெரியுமா?
எலான் மஸ்க் : முன்னாள் ஊழியரிடம் மன்னிப்பு கேட்ட ட்விட்டர் தலைவர் - ஏன் தெரியுமா?Twitter
Published on

ட்விட்டர் நிறுவனத்தில் தனக்கு வேலை இருக்கிறதா இல்லையா எனக் கேட்ட ஊழியரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார் எலான் மஸ்க்.

ஹல்லி தோலிஃப்சன் என்ற ட்விட்டரின் மூத்த இயக்குநர் எலான் மஸ்கை டேக் செய்து, "9 நாட்களுக்கு முன்னர் எனது நிறுவன கணினி வேலை செய்யாமல் நின்றது. நான் வேலையில் இருக்கிறேனா இல்லையா என்பதை தலைமை HR-ஆல் உறுதி செய்ய முடியவில்லை. நீங்கள் எனது இ-மெயில்களுக்கு பதிலளிக்கவில்லை. இங்கு போதுமான ரீ ட்வீட்கள் இருந்தால் நீங்கள் பதில் சொல்வீர்களா?" என நேற்று ட்விட்டரில் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக மஸ்க், "நீ என்ன வேலை செய்துகொண்டிருந்தாய்?" எனக் கேட்டார்.

அதற்கு ஹல்லி, "நான் இந்த கேள்விக்கு இங்கு பதிலளித்தால் நிறுவனத்தின் ரகசியத் தன்மையை உடைக்க வேண்டியது இருக்கும்.

உங்கள் வழக்கறிஞர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தால் என்னால் அதனைச் செய்ய முடியும்." என கூறினார்.

தொடர்ந்து மஸ்க் அவரிடம் "சொல்லுங்கள்" எனக் கேட்க, வேலைக்கு சேருவதற்கான நேர்காணல் போல தான் செய்த வேலைகளை விளக்கினார் ஹல்லி.

எலான் மஸ்க் : முன்னாள் ஊழியரிடம் மன்னிப்பு கேட்ட ட்விட்டர் தலைவர் - ஏன் தெரியுமா?
Elon Musk: ”நான் ராஜினாமா செய்கிறேன்”- CEO பதவியில் இருந்து விலகும் எலான் மஸ்க்!
News Sense

மஸ்கும் அவ்வாறே கேள்விகளைக் கேட்டார்.

முடிவில் தனக்கு அதிகாரப்பூர்வமாக வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கான மெயில் வந்ததாக ஹல்லி கூறினார்.

ஐஸ்லாந்தை சேர்ந்த ஹல்லி 45 வயது தொழில்முனைவோராவார். 2021ல் Ueno டிசைன் என்ற தனது நிறுவனத்தை ட்விட்டருக்கு விற்றுவிட்டு இங்கு முழுநேர ஊழியராக பணியாற்றத்தொடங்கினார்.

இவர்களின் உரையாடல் வைரலானது, "இவர் ஒரு சுதந்திரமான செல்வந்தர். எந்த வேலையும் செய்யாமல் தனது இயலாமையை (மாற்றுத்திறன்) சாக்காகக் கூறி டைப் செய்யாமல் தப்பிப்பவர்" என மஸ்க் ஹல்லியை குற்றம்சாட்டினார்.

எலான் மஸ்க் : முன்னாள் ஊழியரிடம் மன்னிப்பு கேட்ட ட்விட்டர் தலைவர் - ஏன் தெரியுமா?
ட்விட்டர் நிறுவனர் வெளியிட்ட Bluesky செயலி - எலான் மஸ்குக்கு ஆப்பா?

மேலும், "இதற்காக அவருக்கும் அதிக மரியாதை கிடைக்கும் எனக் கூறிவிட முடியாது" எனவும் மஸ்க் கூறினார்.

இந்த ட்வீட் புயலாக கிளம்பியது.

சில மணி நேரத்துக்கு பிறகு மஸ்க் மீண்டும் ட்விட்டரில் தான் ஹல்லியின் நிலைமையை தவறாக புரிந்துகொண்டதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என ட்வீட் செய்துள்ளார்.

அத்துடன் ஹல்லி ட்விட்டரில் தொடர்ந்து வேலை செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறியிருக்கிறார்.

எலான் மஸ்க் : முன்னாள் ஊழியரிடம் மன்னிப்பு கேட்ட ட்விட்டர் தலைவர் - ஏன் தெரியுமா?
எலான் மஸ்க்: சிறு வயதில் மோசமான நெருக்கடிகள் முதல் உலகின் No 1 பணக்காரர் வரை - யார் இவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com