எலான் மஸ்க் கூகுள் இணை நிறுவனரின் மனைவியோடு உறவா? என்ன கூறுகிறார் அவர்?

கூகுள் இணை நிறுவனரான பிரின் கடந்த ஆண்டு ஜனவரியிலேயே விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். அதில் சமரசம் செய்ய முடியாத படி தன் மனைவியோடு வேறுபாடுகள் ஏற்பட்டு விட்டதாகக் கூறினார்.
elon musk
elon muskTwitter

கூகுளின் இணை நிறுவனரும் பில்லியனருமான செர்ஜி பிரின்னின் மனைவியோடு தனக்கு தொடர்பு இருப்பதாக வெளியான ஊடக செய்திகளை எலான் மஸ்க் இன்று மறுத்துள்ளார்.

“ மொத்தத்தில் இது அடிப்படையற்ற செய்தி. செர்ஜியும் நானும் நண்பர்கள். நேற்றிரவு ஒன்றாக ஒரு விருந்தில் இருந்தோம். அவரது மனைவியான நிக்கோலை கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே பார்த்திருக்கிறேன்.

அதுவும் தனியாகப் பார்க்கவில்லை. பலர் சூழ சேர்ந்துதான் பார்த்தேன். அவருடன் காதல் ஏதுமில்லை" என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Elon Musk
Elon MuskTwitter

புகழ்பெற்ற பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வந்த செய்தி, எலான் மஸ்க்கிற்கும் செர்ஜி பிரின்னின் மனைவியான நிக்கோல் ஷனாஹனுவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறுகிறது. அந்த செய்தியின் படி இந்த உறவு ஏற்படுவதற்கு முன்பு வரை மஸ்கும், பிரின்னும் நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.

கூகுள் இணை நிறுவனரான பிரின் கடந்த ஆண்டு ஜனவரியிலேயே விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். அதில் சமரசம் செய்ய முடியாத படி தன் மனைவியோடு வேறுபாடுகள் ஏற்பட்டு விட்டதாகக் கூறினார். மேலும் அவரும் மனைவியான ஷனாஹனும் டிசம்பர் 15, 2021 அன்று முதல் பிரிந்து விட்டதாக அவர் கூறினார்.

elon musk
பாலியல் சர்ச்சையில் சிக்கிய எலான் மஸ்க் - குற்றத்தை மறைக்க பணம் கொடுத்தாரா?
Elon Musk
Elon MuskTwitter

இது தொடர்பாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறும் மேலதிக தகவலைப் பார்ப்போம். எலான் மஸ்க்கின் கள்ள உறவு 2021 டிசம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் மியாமி நகரில் நடந்த ஆர்ட் பாசல நிகழ்வில் நடந்தது. ஆர்ட் பாசல் என்பது உலகம் முழுவதும் உள்ள பணக்காரர்கள் பங்கேற்கும் வருடாந்திர திருவிழா. ஒரு விருந்தில் எலான் மஸ்க், செர்ஜி பிரின்னின் முன்பு மண்டியிட்டு மன்னிப்பு கோரியதாக இதைப் பார்த்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

டெஸ்லா கார் ஆலையிலிருந்து உற்பத்தி முடிந்து வந்த முதல் வரிசை கார்களில் ஒன்று பிரின்னிற்கு வழங்கப்பட்டது. பதிலுக்கு கூகுள் இணை நிறுவனர் 2008 இல் மஸ்கிற்கு அரை மில்லியன் டாலர் நிதியுதவி செய்தார். அப்போது நடந்த அமெரிக்க அடமான நெருக்கடியால் உலகம் முழுவதும் மந்த நிலை ஏற்பட்டபோது டெஸ்லா நிறுவனத்தை நடத்துவதற்கு அந்தப் பணம் பயன்பட்டது.

elon musk
எலான் மஸ்க் தந்தை : 70 வயதில் வளர்ப்பு மகளோடு வாழ்ந்து குழந்தை பெற்றுக் கொண்ட எரால் மஸ்க்
elon musk
elon muskTwitter

எலான் மஸ்கின் பாலியல் சர்ச்சையில் இது சமீபத்திய வரவு. இதற்கு முன்பு அவர் தனது காதலியும் பாடகியுமான க்ரைம்ஸுடன் பிரிந்து விட்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன.

சில வாரங்களுக்கு முன்பு மஸ்க்கின் நியுராலிங்க் நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் ஜிலிஸ் என்பவருடன் 2021 நவம்பரில் உறவு கொண்ட மஸ்கிற்கு இரகசியமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்தன என்று செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தன.

ஒரு புறம் டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாகக் கூறி பின்னர் அதைக் கைவிட்ட மஸ்க் அந்நிறுவனத்தோடு சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார். மறுபுறம் அவர் குறித்த பாலியல் சர்ச்சை செய்திகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. தொழிலிலும் சரி, சொந்த வாழ்விலும் சரி எலான் மஸ்க் ஒரு சர்ச்சைக்குரிய மனிதராகவே இருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com