வேலையை விட்டு நின்றால் 10% சம்பள உயர்வு - அமெரிக்க நிறுவனத்தின் அடடே அறிவிப்பு!

இந்த நிறுவனம், தங்கள் ஊழியர்கள் யாராவது வேலையை விட்டு நிற்பதாக கூறினால், அவர்களுக்கு 10 சதவிகிதம் சம்பள உயர்வு தருகிறது.
வேலையை விட்டு நின்றால் 10% சம்பள உயர்வு
வேலையை விட்டு நின்றால் 10% சம்பள உயர்வு canva
Published on

வேலையை விட்டு செல்பவர்களுக்கு 10 சதவிகித சம்பள உயர்வை தருகிறது அமெரிக்க நிறுவனம் ஒன்று. 

ஓர் இடத்தில் வேலைக்கு சேர்ந்து சில காலம் அனுபவத்தை பெற்ற பின்னர், நம்மில் பலர் வேறு வேலைக்கு விண்ணப்பிப்போம். கையோடு நாம் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் நிறுவனத்திடமும் விடைபெறுவதாக கூறுவோம். ஆகையால், நாம் நிறுவனம் குறிப்பிடும் நோடீஸ் பீரியட் ஐ நிறைவு செய்துவிட்டு வேலையிலிருந்து நின்றுவிடுவோம். 

பெரும்பாலும் நிறுவனங்கள்,வேலையை விட்டு நின்று சில காலம் கழித்து தான் கடைசி மாத சம்பளத்தை நமக்கு தருவார்கள். ஆனால் இங்கு ஒரு நிறுவனம், தங்கள் ஊழியர்கள் யாராவது வேலையை விட்டு நிற்பதாக கூறினால், அவர்களுக்கு 10 சதவிகிதம் சம்பள உயர்வு தருகிறது.

சுருக்கமாக சொன்னால், வேலையை விடுபவர்களுக்குச் சம்பள உயர்வு!

கொரில்லா என்ற அமெரிக்க மார்கெட்டிங் நிறுவனம் ஒன்று தான் இதை செய்து வருகிறது. கொரில்லா நிறுவன ஜான் ஃப்ராங்கோ தன் LinkedIn பக்கத்தில் இந்த யுக்தியை "Smooth Transition" என்றும் குறிப்பிட்டிருந்தார். 

வேலையை விட்டு நின்றால் 10% சம்பள உயர்வு
இன்டெர்வியூ இப்படி தான் நடக்கிறதா? Pristyn Care துணை நிறுவனரின் பதிவால் சர்ச்சை

மேலும் ஃப்ராங்கோ கூறுகையில், "ஊழியர்கள், பணியிலிருந்து விடைபெறுவதாக எங்களிடம் 6 வாரங்களுக்கு முன்னரே தெரிவிக்கிற நிலையில், அவர் முழு நேர ஊழியராக இருந்தால் அவருக்கு 10 சதவிகித சம்பள உயர்வு வழங்கப்படும். மேலும் அவர்களை நாங்கள் மூன்று மாதங்கள் எங்களுக்கு வேலை செய்துகொடுத்து விட்டு விடைபெறும்படி கேட்டுக்கொள்வோம்"

மூன்று மாதங்கள் கழித்து அவர்களை அனுப்பி வைத்துவிடுவோம் என தெரிவித்த ஃப்ராங்கோ, இப்படி செய்வதால், ஊழியர்களுக்கும் நிறுவனத்திற்கும் மனக்கசப்புகள் இருக்காது எனவும் தெரிவித்தார்.

மேலும் ஊழியர்களுக்கு வேலை தங்களுக்கு சரியானது அல்ல என தோன்றும்பட்சத்தில், இந்த யுக்தி அவர்களை தைரியமாக முன்வர உதவுகிறது என ஜான் குறிப்பிட்டார். 

இந்த மூன்று மாத நோட்டீஸ் பீரியட்டில், நிறுவனமும் மாற்று ஊழியரை தேர்ந்தெடுத்துக்கொள்ளும். தங்கள் நிறுவன ஊழியர்கள் வேலையை விட்டு செல்வதை அவர்கள் விரும்பவில்லை என்றாலும், நம்மோடு சேர்ந்து ஊழியர்களும் கடைசி வரை வருவார்கள் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்கிறார் ஜான்.

சமீபத்தில் தங்கள் சிறந்த ஊழியர்களுள் ஒருவர் வேலையை விடுவதாக கூறியபோது, Smooth Transition முறையை கையாண்டதாகவும், அவருக்கு 10% சம்பள உயர்வைக் கொடுத்ததுடன்,  மாற்றாக வேறு ஒருவரை அவர்கள் தேர்ந்தெடுக்க எளிதாக இருந்ததாகவும் ஃப்ராங்கோ குறிப்பிட்டார். 

ஒரு நாளைக்கு 18 மணி  நேர வேலை, ஊழியர்கள் பொறுமையை சோதிக்க கடினமான தேர்வுகளை வைக்கிறோம் என பிரபல நிறுவனங்கள் கூறி வரும் வேளையில், இது இனிய செய்தியாக வந்து விழுந்திருக்கிறது.

வேலையை விட்டு நின்றால் 10% சம்பள உயர்வு
வேலையை விட்டு நீக்கும் போது அழுத CEO, ஊழியருக்கு குவிந்த வேலை வாய்ப்பு - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com