ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா பழங்குடி பெண்கள் தொப்பை வைத்திருக்கும் ஆண்களையே விரும்பி திருமணம் செய்து கொள்கின்றார்களாம் வாருங்கள் அவர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
எத்தியோப்பியா நாட்டில் உள்ள பழங்குடி மக்களிடையே ஒரு விநோதமான விழா உள்ளது.
இந்த விழாவில் என்ன விநோதம் என நீங்கள் கேட்கலாம் அதில் தான் ஒரு ஆச்சரிய தகவல் உள்ளது
இந்த விழாவில் பங்கேற்கும் ஆண்களில் யாருக்கு அதிக தொப்பை உள்ளதோ அவர்களுக்கு அவர்களின் வழக்கப்படி அதிக மரியாதையும் திருமணமும் செய்து வைக்கப்படும் என கூறப்படுகின்றது.
போடி இனமக்களில் 7 பிரிவுகளை சேர்ந்த ஆண்களில் நன்கு கொழுத்த தொப்பையான ஆண்மகனே அந்த வருடம் அந்த மக்களின் கதாநாயகானக கருதப்படுகிறார்.
மேலும் ஆப்பிரிக்க பழங்குடி மக்களிடையே உடல் பருமன் என்பது அவர்களின் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. ஆகவே இந்த போட்டி வருடப்பிறப்பின் போது நடத்தப்படுகிறது .
அதன்படி ஜூன் மாதம் போட்டியானது தொடங்கும் போட்டிக்கு தயராகும் ஆண்களுக்கு ஆறு மாதங்களுக்கு, அவர்களுக்கு நன்கு உணவளிக்கப்படுகிறது. இந்த ஆண்களுக்கு உணவாக மாட்டு இரத்தம் மற்றும் பாலில் செய்யப்பட்ட சிறப்பு உணவை அடிக்கடி கொடுக்கின்றனர்.
இதன் மூலம் அவர்களின் உடல் ஒரு பெரிய மாற்றத்தைக் காணும் இவ்வாறு ஆறுமாதங்கள் கவனிக்கப்படும் .
இந்த ஆறு மாதமும் ஆண்கள் தங்கள் குடிசையை ( குடும்பத்தை ) விட்டு வெளியேற வேண்டும் எந்தவிதமான உடல் உழைப்பு அல்லது பாலியல் உறவுகளில் ஈடுபடக்கூடாது அவ்வாறு மீறினால் அவர்கள் விலக்கி வைக்கப்படுவார்கள்.
போட்டியின் போது கொழுத்த ஆண்கள் இறகுகள் கொண்ட தலைக்கவசத்தை அணிந்து உடலில் களிமண் சாம்பல் பூசி வந்து அவர்களின் புனித மரத்தை சுற்றி வருகின்றனர்.
இறுதியாக யார் கொழுத்த தொப்பை உள்ளதோ அவர்கள் அந்த மக்களின் தலைவனாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்த நபருக்கு தங்களின் பெண்ணை கொடுப்பதை மரியாதையாக கருதுகின்றனர்.
அதே சமயம் போட்டிகளில் மட்டுமின்றி, எத்தியோப்பியாவில் உள்ள பெண்கள் உடல் பருமனாக உள்ள ஆண்களையே விரும்பி திருமணமும் செய்துகொள்கின்றனர் என்பதும் கூடுதல் சிறப்பு செய்தியாகும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust