Putin: "ரஷ்ய அதிபர் புடின் படுத்தபடுக்கையாக உள்ளார்" - உளவாளி சொல்லும் பகீர் தகவல்

கிறிஸ்டோபர் ஸ்டீல் என்கிற முன்னாள் பிரிட்டிஷ் உளவாளி, ரஷ்ய அதிபர் உடல்நலம் இல்லாமல் இருக்கிறார் என்றும் அவருக்கு இருப்பது குணமடைக்குடிய நோயா அல்லது உயிருக்கே ஆபத்தா என்ற கேள்வி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Putin
Putin Twitter
Published on

கிறிஸ்டோபர் ஸ்டீல் என்கிற முன்னாள் பிரிட்டிஷ் உளவாளி, ரஷ்ய அதிபர் உடல்நலம் குன்றி இருக்கிறார் என்று கூறி இருப்பது உக்ரைனில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இவர் 2006 மற்றும் 2009க்கு இடையிலான காலகட்டத்தில் லண்டனில் உள்ள MI6 இல் ரஷ்யாவுக்கான உளவு பிரிவை நடத்தியவராவார்.

மேலும் ஸ்கை நியூஸுக்கு அவரளித்த பேட்டியில் "இப்போது வரை புதின் எந்த நோயால் உடல்நலக் குறைவை சந்தித்திருக்கிறார் என்பது குறித்து சரியாகத் தெரியவில்லை. அது குணப்படுத்த கூடியதா? இல்லையா? என்பது குறித்தும் தெரியவில்லை. ஆனால் புதின் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி” என்று தெரிவித்துள்ளார்.

Christopher Steele
Christopher SteeleTwitter

2016 அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் ரஷ்ய தலையீடு இருப்பதாக டோனால்ட் டிரம்ப் மீது குற்றச்சாட்டு எழுப்பியதும் ஸ்டீல் தான். அவர் கூறுகையில், "நிச்சயமாக, ரஷ்யா மற்றும் பிற இடங்களிலிருந்து நாங்கள் கேள்விப்படுவதிலிருந்து பார்க்கும் போது புதின் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பது உறுதி" என்கிறார்.

உக்ரைன் ராணுவ அதிகாரி க்ரியிலோ புடனொவ் ஸ்கை நியூஸுக்கு அளித்த பேட்டியில் ”ரஷ்ய அதிபர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு ரஷ்யாவில் தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று கூறியிருக்கிறார்.

Putin
Putin Twitter

இதுகுறித்து புதினுக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரணையை மேற்கொண்ட அமெரிக்க இதழான நியூ லைன்ஸ், “அவர் ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்” என்றும் “அவர் மிகவும் நலிவுற்றுக் காணப்படுகிறார்” என்றும் தெரிவித்திருக்கிறது. இந்த செய்தியானது தற்போது மேற்குலக முதலாளிகளிடையே விவாதமாகியிருக்கிறது.

Putin
Russia அதிபர் Vladimir Putin : யார் இந்த புடின் ? வியக்க வைக்கும் பின்னணி !

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com