Sweden: 6000 மனிதர்கள், கட்டிடங்கள் என ஒரு முழு நகரமே இடம்பெயர காரணம் என்ன?| Explained

சுமார் 6000 பேர் இடம்பெயர்கின்றனர். இவர்கள் தற்போது கிருனா அமைந்துள்ள இடத்தில் இருந்து 1.9 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்குப் பக்கமாக நகர்கின்றனர். இவர்களுக்கு பொருளாதார ரீதியில் சிக்கல்கள் ஏற்படும் என்று கணிக்கின்றனர்.
Sweden: 6000 மனிதர்கள், கட்டிடங்கள் என ஒரு முழு நகரமே இடம்பெயர காரணம் என்ன? | Explained
Sweden: 6000 மனிதர்கள், கட்டிடங்கள் என ஒரு முழு நகரமே இடம்பெயர காரணம் என்ன? | ExplainedTwitter

ஸ்வீடனில் ஒரு முழு நகரமே இடம்பெயர்க்கப்பட்டு வருகிறது. இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்த இடம்பெயர்தல் முடிவடையவுள்ளது.

அதெப்படி ஒரு நகரம் முழுவதும் இடம்பெயரும்? மக்கள் மட்டும் ஓரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு சென்றனரா என்றால், அது தான் இல்லை. இங்கிருந்த கட்டிடங்களும் இடம் மாறியுள்ளன.

அது எப்படி சாத்தியம்? இதற்கு என்ன காரணம்? இந்த பதிவில்...

ஸ்வீடனின் வடக்கு பகுதியில் அமைந்திருக்கிறது கிருனா என்கிற நகரம். இங்கு நாம் துருவ ஒளிகளை (northern lights) காணமுடியும். இந்த நகரத்தின் மக்கள் தொகை சுமார் 23 ஆயிரம் தான்.

இங்கு ஒரு மிகப் பெரிய இரும்பு தாதுச் சுரங்கம் மற்றும் நிலத்தடி பார்வையாளர் மையம் அமைந்திருக்கின்றன. இவை தான் இந்த நகரத்தின் அடையாளங்கள் என்றே கூறலாம்.

இதை தவிர இந்த கிருனா நகரத்தின் நிலத்தில் வளமான கனிமங்கள் மற்றும், அதிகபடியான பூமி தனிமங்கள் (Earth Elements)களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.

இந்த குறிப்பிட்ட கூறுகள் எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகள் மற்றும் காற்றாலை டர்பைன்களின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஸ்வீடனின் துணை பிரதமரான எப்பா புஷ் தங்கள் நகரத்தை தங்கச் சுரங்கம் எனக் குறிப்பிட்டு ஐரோப்பா தங்கள் மீது கவனம் செலுத்தவேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

கிருனாவின் இரும்புத் தாது சுரங்கம், ஸ்வீடிஷ் அரசுக்குச் சொந்தமான LKAB ஆல் நிர்வகிக்கப்படுகிறது, இது ஐரோப்பிய ஒன்றியத்தின் விநியோகத்தில் 80 சதவீதத்தை கொண்டுள்ளது.

இந்த சுரங்கமானது, கிருனா நகர மக்கள் மட்டுமல்லாது அந்த முழு நகரத்தையே பாதிப்பதாக அறிக்கைகள் முன்வைக்கின்றன.

அதாவது, இங்குள்ள கட்டிடங்களும் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை சந்திக்கிறது. இந்த நகரத்தில் இருந்த மருத்துவமனை கட்டிடத்தில் விரிசல், பள்ளிக் கட்டிடத்தில் சேதம் என அபாயகரமான பாதிப்புகளை இந்த சுரங்கப் பணிகள் தூண்டிவிட்டிருக்கின்றன.

Sweden: 6000 மனிதர்கள், கட்டிடங்கள் என ஒரு முழு நகரமே இடம்பெயர காரணம் என்ன? | Explained
உலகப்போர்: போலி பாரிஸை உருவாக்கிய பிரான்ஸ் அரசு - யாரை ஏமாற்ற? சுவாரஸ்ய வரலாறு | Explainer

ஆகையால், ஒன்றன் பின் ஒன்றாக இந்த நகரத்தின் மக்களோடு சேர்த்து கட்டிடங்களும் இடம் மாற்றம் அடைகின்றன. இந்த இடம்பெயர்தல் சில ஆண்டுகள் முன்னரே தொடங்கிவிட்டது எனவும், இன்னும் மூன்று ஆண்டுகள், அதாவது 2026க்குள் முடிவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடம்பெயர்தல் என்பது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று கூருகின்றனர். ஆனால் மறுபக்கம், இந்த நகரத்தின் அடையாளமாக திகழும் நூற்றாண்டு பழமையான தேவாலையம் ஒன்று இடமாற்றமடைகிறது.

600-டன் மரத்தாலான, வசதியான டெரகோட்டா-வண்ண தேவாலயம், பழங்குடி சாமி மக்களின் குடிசையைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தேவாலையத்தில் எந்த விதமான மதச் சின்னமும் இல்லை. இந்த சாமி இனத்தின் மக்களின் இருப்பிடமாகவும் இவ்விடம் திகழ்ந்தது.

தற்போது சுமார் 6000 பேர் இடம்பெயர்கின்றனர். இவர்கள் தற்போது கிருனா அமைந்துள்ள இடத்தில் இருந்து 1.9 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்குப் பக்கமாக நகர்கின்றனர். இவர்களுக்கு பொருளாதார ரீதியில் சிக்கல்கள் ஏற்படும் என்று கணிக்கின்றனர்.

வீடுகளின் வாடகை 25 சதவிகித உயர்வை காணும். 1900ஆம் ஆண்டு நிறுவப்பட்ட LKAB, அரிய பூமி தனிமங்களை கண்டறிந்தது, ஐரோப்பா சீனாவை இனி குறைவாகவே சார்ந்திருக்கும் என்றும் கார்டியன் தளத்தின் அறிக்கை கூறுகிறது.

LKAB கிருனாவில் சுரங்க நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, சாமி இன மக்கள் ஆர்க்டிக் நிலங்கள் முழுவதும் கலைமான்களை (Reindeer) வளர்த்தனர். தற்போது அவர்களின் வாழ்க்கை முறை அச்சுறுத்தலில் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இது ஒரு புரம் இருக்க சுரங்க வேலைகளாலும், மனித பயன்பாட்டிலும் நிலம் பாதிப்படைந்ததன் விளைவாக கலைமான்கள் பராமரிப்பு பின்னடைவை சந்தித்திருக்கிறது. இந்த கலைமான்களின் பிரதான குளிர்கால உணவான லிச்சென் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டு சாமி கிராமங்கள் கலைமான்கள் மேய்க்கும் வழித்தடத்தினை மாற்றிவிட்டது எனவும், மற்றுமொரு கிராம மக்களும் தங்களின் மேய்ச்சல் வழிப்பாதையை மாற்றவுள்ளதாக LKAB நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Sweden: 6000 மனிதர்கள், கட்டிடங்கள் என ஒரு முழு நகரமே இடம்பெயர காரணம் என்ன? | Explained
Rudaali: பணம் வாங்கி கொண்டு இறுதிசடங்கில் அழும் பெண்கள் - கண்ணீரின் விலை என்ன? | Explainer

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com