Burj Khalifa

Burj Khalifa

Facebook

புர்ஜ் கலிஃபா : ஆண்டுக்கு 1000 கோடி ஈட்டும் உலகின் மிகப்பெரிய கட்டடம்!

தற்போது புர்ஜ் கலிஃபா-வில் 1.2 மில்லியன் பேரின் பெயரில் விளக்குகள் எரிகின்றன. புர்ஜ் கலிஃபா குறித்த மேலும் சுவாரஸ்யமான தகவல்களை காண்போம்.

2020-ம் ஆண்டு கொரோனா காரணமாக அரபு அமீரகத்தில் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டது. சாதாரண மக்கள் பலரும் வேலையில்லாமல் தவித்தனர். அப்போது அவர்களுக்கு உணவளிக்க புர்ஜ் கட்டிடம் உதவியது.

ஒரு நபருக்கு உணவளிக்கச் செலவாகும் பணத்துக்கு ஒரு விளக்கு என 1.2 மில்லியன் விளக்குகளையும் விற்றனர். இதனால் 1.2 மில்லியன் மக்களுக்கு உணவு கிடைத்தது. தற்போது 1.2 மில்லியன் பேரின் பெயரில் விளக்குகள் எரிகின்றன. புர்ஜ் கலிஃபா குறித்த மேலும் சுவாரஸ்யமான தகவல்களை காண்போம்.

வானளாவிய உயரம்

2716.5 அடி (828m) உயரம் கொண்ட புர்ஜ் கலிஃபா கட்டிடம் உலகின் மிக உயரமான கட்டிடம் எனப் பெயர் பெற்றது. இதன் உயரம் ஈபிள் டவரை விட மூன்று மடங்கு அதிகம் மற்றும் நயாகரா நீர்வீழ்ச்சியை விட 15 மடங்கு உயரமானது.

Burj khalifa

Burj khalifa

Facebook

ஏன் இவ்வளவு பெரிய கட்டிடம்?

துபாயின் எண்ணெய் வணிகத்துக்கு அடுத்தபடியாக அதிக வருமானம் தரக்கூடிய துறையாக சுற்றுலாத் துறையை உருவாக்க நினைத்த அரசு, உலகின் மிக உயரமான கட்டிடத்தை கட்டலாம் எனத் திட்டமிட்டது. இதன் மூலம் உலகைத் திரும்பிப்பார்க்க வைக்க முடியும், அதிக சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கலாம் என்பது துபாய் அரசின் கணக்கு.

இரண்டு சூரிய அஸ்தமனம்!

ஒரே நாளில் ஒரே இடத்திலிருந்து சூரிய அஸ்தமனத்தை இரண்டு முறைக் காண முடியும் என்றால் நம்பவுவீர்களா? புர்ஜ் கலிஃபா-வில் முடியும். ஒரு முறை கீழ்த் தளத்திலிருந்தும் மற்றோருமுறை மேல் தளத்திலிருந்தும் காணலாம்.

வியூ பாயிண்ட்

உயரமான இடத்திலிருந்து கீழே பார்ப்பது சிலருக்குப் பயமாகவும் சிலருக்கு சுவாரஸ்யமாகவும் இருக்கும். நகரங்களில் உயர்ந்த கட்டிடத்தில் இருந்து சாலையில் எறும்பு போன்று மனிதர்கள் நடந்து செல்வதை எல்லோரும் பார்த்திருப்போம். அது போன்று உலகில் மிக உயரமான வியூ பாயிண்டும் புர்ஜ் கலிஃபா தான். 555 அடி உயரத்தில் இதன் மிக உயரமான வியூ பாயிண்ட் அமைந்திருக்கிறது.

View Point

View Point

Twitter

தூரத்தில் தெரியும் கோபுரம்

உலகம் உருண்டையாக இருப்பதால் மிக உயரமான கட்டிடங்களின் உச்சியைத் தூரத்திலிருந்தே பார்க்க முடியும். உலகத்திலேயே உயரமான கட்டிடத்தைக் கிட்டத்தட்ட 95 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து பார்க்க முடியும் என்று சொல்கிறார்கள்.

ஏன் புர்ஜ் “கலிஃபா” என்று பெயர் பெற்றது ?

2010-ம் ஆண்டு திறக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு வரை அதற்கு “புர்ஜ் துபாய்” எனப் பெயர் சூட்டுவதாகத் தான் இருந்தது. ஆனால் அதன் பக்கத்து நகரமான அபுதாபியின் அதிபர் ஷேக் கலீஃபா இபின் சயீத் அல் நஹ்யான் என்பவரைக் கௌரவிக்கும் விதமாக “புர்ஜ் கலிஃபா” எனப் பெயரிடப்பட்டது.

விளம்பரங்கள்

நமக்கு புர்ஜ் கலிஃபா அறிமுகமானது விளம்பரங்களின் மூலம் தான். நவரசா, ஸ்பாடிஃபை இளையராஜா என நம்ம ஊர் விளம்பரங்களும் புர்ஜ் கலிஃபா-வில் ஒளிபரப்பாகிறது. இதில் விளம்பரங்களைப் பதிவிட 3 நிமிடத்துக்கு ரூபாய் 5 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. வார நாட்கள் அல்லது மாலை 8 மணி முதல் 10 மணி வரை போன்ற முக்கியமான நேரங்களில் 7 லட்சம் வரை கட்டணம் உயர்த்தப்படும். இதன் ஆண்டு வருமானம் 1000 கோடிகளில் அமைகிறது.

Burj Khalifa

வட கொரியா : கிம் வம்சத்தின் வரலாறு | Part 1

விளம்பரங்கள்

நமக்கு புர்ஜ் கலிஃபா அறிமுகமானது விளம்பரங்களின் மூலம் தான். நவரசா, ஸ்பாடிஃபை இளையராஜா என நம்ம ஊர் விளம்பரங்களும் புர்ஜ் கலிஃபா-வில் ஒளிபரப்பாகிறது. இதில் விளம்பரங்களைப் பதிவிட 3 நிமிடத்துக்கு ரூபாய் 5 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. வார நாட்கள் அல்லது மாலை 8 மணி முதல் 10 மணி வரை போன்ற முக்கியமான நேரங்களில் 7 லட்சம் வரை கட்டணம் உயர்த்தப்படும். இதன் ஆண்டு வருமானம் 1000 கோடிகளில் அமைகிறது.

Burj Khalifa

Burj Khalifa

Facebook

புதிய கட்டிடம்

புர்ஜ் கலிஃபா-வின் சாதனைகளை முறியடிக்கும் வண்ணம் புதிதாக துபாய் க்ரீக் டவர் என்ற கட்டிடத்தைக் கட்டிவருகிறது துபாய் அரசு.

logo
Newssense
newssense.vikatan.com