உலகில் அதிக சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் உள்ள நாடு எது?: தெரிந்த நாடுகள் தெரியாத தகவல்கள்

நாம் தினசரி செய்தித்தாளில் கடந்து வரும் ஒவ்வொரு நாட்டிலும் நாம் அறியாத பல சுவாரசியமான உண்மைகள் இருக்கின்றன. இங்கே அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.
World
WorldCanva

உங்களுக்கு உலகில் பல நாடுகளைத் தெரிந்திருப்பதாகக் கருதலாம். ஆனால் எல்லா நாடுகளைப் பற்றியும் முழுமையாக எவரும் தெரிந்திருக்க முடியாது. ஒவ்வொரு நாட்டிலும் நாம் அறியாத பல சுவாரசியமான உண்மைகள் இருக்கின்றன. இங்கே அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.

Cricket Stadium
Cricket StadiumCanva

உலகில் அதிக சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் உள்ள நாடு எது?

நிச்சயமாக அது இந்தியாதான். கிரிக்கெட்டை ஒரு மதம் போலப் பாவிக்கும் இங்கே 52 சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன. வேறு எந்த நாட்டிலும் இந்த எண்ணிக்கை கிடையாது.

Niger People
Niger PeopleCanva

உலகில் இளைய தலைமுறை அதிகம் வாழும் நாடு எது தெரியுமா?

ஆப்பிரிக்காவில் உள்ள நைஜர் நாடு. நைஜரின் பாதி மக்கள் தொகையின் வயது 14 அல்லது அதற்கும் குறைவானது ஆகும். இந்நாட்டின் சராசரி வயது 15 மட்டுமே.

Fat
FatCanva

உலகில் பருமனான உடல்வாகு கொண்ட நாடு

தென் பசிபிக் கடலில் உள்ள அமெரிக்க சமோவான் நாடுதான் குண்டான மனிதர்களைக் கொண்ட நாடு. நாட்டின் மக்கள் தொகையில் 74.6% பேர் உடல் பருமன் கொண்டவர்கள்.

Lake
LakeCanva

எந்த நாட்டில் ஏரிகள் அதிகம்?

கனடாவில்தான் உலகிலேயே அதிக ஏரிகள் இருக்கின்றன. உலகில் உள்ள ஏரிகளில் தோராயமாக 60% கனடாவில் காணப்படுகின்றன.

Saudi
SaudiCanva

ஆறுகள் இல்லாத ஒரு நாட்டைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஆறுகளே இல்லாத நாடு பாலைவனம் சூழ்ந்திருக்கும் சவுதி அரேபியாதான். இங்கு ஒரு ஆறு கூட இல்லை.

Greenland
GreenlandCanva

குறைவான மக்கள் தொகை கொண்ட நாடு எது?

கிரீன்லாந்து நாடுதான் குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடு. இங்கே ஒரு சதுர கிலோமீட்டருக்கு 0.2க்கும் குறைவான மக்களே வாழ்கின்றனர். இதற்கடுத்து மங்கோலியா, நமீபியா, ஆஸ்திரேலியா மற்றும் ஐஸ்லாந்து நாடுகளில் குறைவான மக்களே வாழ்கின்றனர். இது அந்தந்த நாடுகளின் பரப்பளவைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

Maldives
MaldivesCanva

கடல்மட்டத்திலிருந்து குறைந்த உயரம் கொண்ட நாட்டை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

கடல்மட்டத்திலிருந்து சராசரியாக 1.8 மீட்டர் உயரத்தில் மாலத்தீவு அமைந்துள்ளது. காலநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்ந்தால் இந்நாடு கடலில் மூழ்கும் வாய்ப்பு அதிகம்.

Diaspora indian
Diaspora indianTwitter

தாய்நாட்டிலிருந்து பணி நிமித்தமாக வெளிநாடு செல்லும் மக்களின் நாடு எது?

அந்தநாடு இந்தியாதான். சுமார் ஒரு கோடியே அறுபத்தாறு இலட்சம் மக்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர்.

Guinea
GuineaCanva

பலமொழிகள் பேசும் நாடு ஏதுவாக இருக்கும்?

பப்புவா நியூ கினியா நாட்டில் 840க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. நாடு சிறியது என்றாலும் மொழிகளின் எண்ணிக்கை அதிகம்.

Forest
ForestCanva

எந்த நாட்டில் காடுகள் அதிகம் இருக்கின்றன?

சுரினாம் நாட்டில்தான் உலகிலேயே அதிக காடுகள் நிறைந்திருக்கின்றன.

Tanks
TanksCanva

எந்த நாட்டுப் படையில் போர் டாங்கிகள் அதிகம் உள்ளன?

தற்போது உக்ரைன் மீது படையெடுத்திருக்கும் ரஷ்யாவில்தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் 20,000 டாங்கிகள் உள்ளன.

Farming
FarmingCanva

விவசாயப் பண்ணைகளே இல்லாத நாடு உலகில் உள்ளதா?

உள்ளது. பண்ணைகளே இல்லாத நாடு நமக்குத் தெரிந்த சிங்கப்பூர்தான்.

Bulgaria
Bulgaria Canva

மக்கள் தொகை வேகமாகக் குறைந்து வரும் நாடு எது?

உலகிலேயே மிகக் குறைந்த பிறப்பு விகிதம், மற்றும் அதிக இறப்பு விகிதத்தோடு உள்ள நாடு பல்கேரியா. 2020 இல் 69 இலட்சமாக இருக்கும் மக்கள் தொகை 2050இல் 54 இலட்சமாகக் குறையுமெனக் கணிக்கப்பட்டுள்ளது. இது பல்கேரிய மக்கள் தொகையில் 22.5% சரிவாகும்.

செம்மறி
செம்மறி Canva

நாட்டின் மக்கள் தொகையில் ஒரு மனிதருக்கு அதிக செம்மறி ஆடுகள் உள்ள நாட்டை கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவிற்கு அருகில் உள்ள பாக்லாந்து தீவுதான் அந்த நாடு. இங்கே ஒரு நபருக்கு 153 செம்மறி ஆடுகள் உள்ளன. இந்த தீவு நாட்டின் மக்கள் தொகை 3,300. தீவில் இருக்கும் மொத்த செம்மறி ஆடுகள் 4,90,000.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் Canva

உலகில் அதிக கஞ்சா உற்பத்தி செய்யும் நாடு?

ஆப்கானிஸ்தான் நாட்டில்தான் அதிக கஞ்சா உற்பத்தி செய்யப்படுகிறது.

Prisoner
PrisonerPexels

உலகில் எந்த நாட்டுச் சிறைகளில் கைதிகள் எண்ணிக்கை அதிகம்?

அமெரிக்காவில்தான் 20 இலட்சத்து 12 ஆயிரம் பேர் சிறைகளில் அடைக்கப் பட்டிருக்கின்றனர். உலகிலேயே அதிக சிறைவாசிகள் அமெரிக்கர்கள்தான்.

உள்நாட்டு மகிழ்ச்சியை அளவிடும் நாடு எது?

ஜிடிபி எனும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பதில் மொத்த உள்நாட்டு மகிழ்ச்சியை அளவிடும் உலகின் ஒரே நாடு பூட்டான்தான்.

France
FranceCanva

பெரும்பாலான நேர மண்டலங்கள் எந்த நாட்டில் உள்ளது?

பிரான்சில்தான் 12 வகை நேர மண்டலங்கள் உள்ளன. அதற்கு அடுத்து அமெரிக்காவில் 11 நேர மண்டலங்களும், ரஷ்யாவில் 9ம் உள்ளன.

Canada
CanadaCanva

படித்தவர்கள் அதிகம் உள்ள நாடு எது?

கனடாதான் உலகில் அதிகம் படித்தவர்கள் வாழும் நாடு. அதிலும் 56.27% பேர் உயர்கல்வியே பெற்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் Canva

உலகில் அமைதி இல்லாத நாடு எது தெரியுமா?

ஆப்கானிஸ்தான்தான் உலகில் அமைதி குறைவான நாடு.

World
அணில்தானே என்று நினைக்காதீர்கள் - அணில் பற்றிய ஐந்து ஆச்சர்ய உண்மைகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com