Ukraine Russia War : Europe மிகப் பெரிய அணுமின் நிலையம் Zaporizhzhia தாக்கப்பட்டதா?

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான, உக்ரைனில் உள்ள சபோரிசியா (Zaporizhzhia) மீது, ரஷ்ய துருப்புக்களின் தாக்குதலால் தீப் பிடித்துள்ளதாக உக்ரைன் கூறுகிறது
Zaporizhzhia

Zaporizhzhia

Twitter

வெள்ளிக்கிழமை அதிகாலையில் ரஷ்ய துருப்புக்கள் உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் ஐரோப்பியாவில் மிகப்பெரிய அணுமின் நிலையமான சபோரிசியா தீ பிடித்து எரிந்து வருவதாகவும், அங்கு புகை வெளியேறிக்கொண்டிருப்பதை அதிகாரிகள் கவனித்ததாக அந்த அணுமின் நிலையம் உள்ள எனர்கோடர் நகரின் மேயர் கூறினார்.

உள்ளூர் படைகளுக்கும் ரஷ்ய துருப்புக்களுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, டிமிட்ரோ ஓர்லோவ் இவ்வாறு கூறினார்.

உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறுகையில், ரஷ்யா தொடர்ந்து அனைத்து பக்கங்களிருந்தும் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்த தாக்குதலை உடனடியாக நிறுத்தாவிடில் அணுமின் நிலையம் வெடித்து சிதறி பேராபத்து ஏற்படக் கூடும் என்று கூறினார்.

"ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான Zaporizhzhia NPP மீது ரஷ்ய இராணுவம் எல்லாப் பக்கங்களிலிருந்தும் துப்பாக்கிச் சூடு நடத்துகிறது.தீ பிடித்துள்ள நிலையில், அணு மின் நிலையம் வெடித்தால், அது செர்னோபிலை விட 10 மடங்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்த கூடியதாக இருக்கும்!" என்றார் குலேபா

கதிர்வீச்சு இல்லை

இது தொடர்பாக ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ள சர்வதேச அணுசக்தி ஆற்றலுக்கான முகமை,”இதுவரை எந்த கதிர்வீச்சும் பதிவாகவில்லை,” என கூறி உள்ளது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com