விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கிடந்த பாம்பு தலை - வெளியான வீடியோவால் பயணிகள் அதிர்ச்சி

தொடர்ந்து பத்திரிகைகளில் வெளிவரும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று தெரிவித்துக் கொள்வதாகவும், முழுமையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் விமான நிர்வாகம் சார்பாக தெரிவித்துள்ளனர்.
Snake Head
Snake HeadTwitter
Published on

சன்ரைஸ் எக்ஸ்பிரஸ் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பாம்பின் தலை கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பயணிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

துருக்கியின் அனகாராவிலிருந்து ஜெர்மனியின் டஸ்ஸல்டார்ஃப் நகருக்கு சென்ற சன் எக்ஸ்பிரஸ் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் ஒரு சிறிய பாம்பின் தலை இருப்பதை விமான குழுவின் உறுப்பினர் ஒருவர் கண்டறிந்துள்ளார்.

இதனை எடுத்து அந்த உணவில் எப்படி பாம்பின் தலை வந்தது என்பது குறித்து விமான நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதையடுத்து, விமான நிர்வாகம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

சன் எக்ஸ்பிரஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில்,

விமானத்துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக எங்களின் சேவை தொடர்ந்து வருகிறது, பயணிகள் மற்றும் பணியாளர்களுக்குப் பாதுகாப்பான விமான பயணத்தைக் கொடுப்பதே எங்களின் முன்னுரிமை என்று தெரிவித்துள்ளனர்.

Snake Head
காணாமல் போன விமானம் 37 ஆண்டுகளுக்கு பின் தரையிறங்கியதா? - டைம் ட்ராவல்
Sun Express Flight
Sun Express Flight Twitter

மேலும் தொடர்ந்து பத்திரிகைகளில் வெளிவரும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று தெரிவித்துக் கொள்வதாகவும், முழுமையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் விமான நிர்வாகம் சார்பாக தெரிவித்துள்ளனர்.

முன்பு ஒரு முறை இதுபோன்று உணவில் இறந்த நத்தைகள் இருந்ததனால் சன் எக்ஸ்பிரஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Snake Head
மோனிகா கன்னா : தீ பிடித்த விமானம், 185 பேரை காப்பாற்றிய பைலட் - திக்திக் நிமிடங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com