Sprite : நிறம் மாறியது குளிர்பான பாட்டில் - நிறுவனம் தெரிவிக்கும் காரணம் என்ன?

அறுவது ஆண்டுகளாக பச்சை நிற பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்பட்ட ஸ்ப்ரைட், கோகோ கோலா நிறுவனத்தின் அதிகம் விரும்பப்பட்ட, மற்றும் விற்கப்பட்ட குளிர்பானம் ஆகும்.
Coca Cola changes bottle color after 60 years
Coca Cola changes bottle color after 60 yearsTwitter

60 ஆண்டுகளாக விற்கப்பட்ட பச்சை நிற ஸ்ப்ரைட் குளிர் பானத்தின் பாட்டில் நிறம் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

ஸ்ப்ரைட் குளிர்பானம், இனிமேல் வெள்ளை நிற பாட்டிலில் அடைத்து விற்கப்படும் என்று கோகோ கோலா நிறுவனம் அறிவித்துள்ளது. அறுவது ஆண்டுகளாக பச்சை நிற பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்பட்ட இந்த குளிர்பானம், கோகோ கோலா நிறுவனத்தின் அதிகம் விரும்பப்பட்ட, மற்றும் விற்கப்பட்ட குளிர்பானம் ஆகும்.

இதற்கு சுற்றுச்சூழலின் மீது கொண்டுள்ள அக்கறையே காரணம் என தெரிவித்துள்ளது அந்நிறுவனம். பச்சை நிற பிளாஸ்டிக் பாட்டில்களை தயாரிக்க பாலி எத்திலீன் டெரெப்தலேட் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இந்த பச்சை நிற பாட்டில்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஆகிறது. இதனை மறு சுழற்சி செய்ய முடியாது.

ஆனால் இந்த பச்சை நிற பாட்டிலை வைத்து தரையில் போடப்படும் கார்பெட்டுகள், ஆடைகள் போன்றவை மட்டும் தான் தயாரிக்க முடியும்.

இதனால் மறு சுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த ஏதுவான பாட்டில்களைத் தயாரிக்கும் பொருட்டு, கோகோ கோலா நிறுவனம் அதன் நிறத்தை வெள்ளையாக மாற்றப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நிற மாற்றம் செய்யப்பட்டுள்ள பாட்டில்கள் அமல்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 2019 முதல் பிலிப்பைன்ஸ் போன்ற சில ஐரோப்பிய நாடுகளில் வெள்ளை நிற பாட்டில்களில் தான் ஸ்பரைட் பானம் விற்கப்படுகிறது. இனி உலக நாடுகள் அனைத்திலும் நிறமற்ற பாட்டில்கள் பயன்பாட்டுக்கு வரப்போகிறது.

மேலும் Dasani என்ற தண்ணீர் பிராண்டும் தயாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ள கோகோ கோலா நிறுவனம், இதன் பாட்டில்களை 100 சதவீதம் மறு சுழற்சி செய்யக்கூடியவையாகத் தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


புதியதாக அறிமுகப்படுத்தப்படும் இந்த வெள்ளை நிற பாட்டிலில் அட்டை மற்றும் மூடி பச்சை நிறத்திலேயே தான் இருக்கும்.

Coca Cola changes bottle color after 60 years
Elon Musk : கோகோ கோலா வாங்கப் போகிறேன் - ட்விட்டரில் அதகளம் செய்யும் எலான்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com