பிரான்சில் 1980-களில் ஆல்பைன் நகரத்தில் செய்தித்தாள்களை விநியோகிக்கும் போது இளம்பெண் ஒருவர் காணாமல் போனதாக வழக்கு தொடரப்பட்டது.
இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான 25 வயதான பெண், Grenoble-ன் வடகிழக்கில் உள்ள Pontcharra-ல் செய்தித்தாள்களை விநியோகிக்கும் போது காணாமல் போனதாகவும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அதன் பின்னர் அவரது உடல் கண்டுபிடிக்கப்படாததையடுத்து அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது.
அதன் பின்னர் இளம்பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் அவரது கணவர் மீண்டும் வழக்கை விசாரிக்கக் கோரிய நிலையில் 2020-ல் வழக்கு மீண்டும் திறக்கப்பட்டது. ஜூன் 2021 முதல், காணாமல் போன இடத்தைச் சுற்றி விசாரணை மீண்டும் தொடங்கியது.
இளம்பெண் காணாமல் போன முப்பத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு மே 9, 2022 அன்று 56 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, விசாரணையில் அந்த நபர் மேரியை கொலை செய்ததாக போலீஸ் காவலில் இருந்தபோது ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த கொலை, பாலியல் தூண்டுதலால் செய்யப்பட்ட கொலை இல்லை என்றும், மாறாக எதோ ஒரு தகராறு காரணமாகக் கொலை நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் பிரான்சில் 36 ஆண்டுகளுக்கு முன் நடந்த இளம் பெண் கொலை மீதான வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp