3,500 ஆடுகளுக்கு வேலை கொடுத்த கூகுள் நிர்வாகம் - ஆச்சர்யம் தந்த அடடா சம்பவம்

கூகுள் நிறுவனம், லிவிங் சிஸ்டம்ஸ் லேண்ட் மேனேஜ்மெண்ட் என்கிற நிறுவனத்திடமிருந்து சுமார் 3,500 ஆடுகளை வாடகைக்கு வாங்கியது. இது புல் தரைகளை நிர்வகிப்பதோடு, பூச்சிக் கொள்ளிகளைப் பயன்பாட்டையும் கணிசமாகக் குறைக்கும் என்று கூறியது.
3,500 ஆடுகளுக்கு வேலை கொடுத்த கூகுள் நிர்வாகம்
3,500 ஆடுகளுக்கு வேலை கொடுத்த கூகுள் நிர்வாகம்NewsSense
Published on

தொழில்நுட்ப உலகில் எதற்கு எடுத்தாலும் எந்திரங்களைத்தான் மனித இனம் அதிகம் சார்ந்து இருக்கிறது. உணவு சமைப்பது, உணவு டெலிவரி, உணவு உற்பத்தி முதல் உடல் எடையைக் குறைப்பது வரை எல்லாவற்றுக்கும் எந்திரங்கள் நம்மோடு இரண்டரக் கலந்துவிட்டன.

இப்படி ஒரு சூழலில் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் கடந்த பல ஆண்டுகளாக தன் அலுவலகத்தில் இருக்கும் புல் தரைகளை நேர்த்தியாகவும், சீராகவும் வைத்திருக்க ஆடுகளைப் பயன்படுத்தி வருகிறது.

சரியாகச் சொல்ல வேண்டுமானால், கடந்த 2009ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் தன் கலிஃபோர்னியா தலைமையகத்தில் இருக்கும் புல் தரைகளை நிர்வகிக்க ஒரு பெரிய ஆட்டு மந்தையை வாடகைக்கு எடுத்தது. அதோடு ஆடுகளை கவனித்துக் கொள்ளவும் தனியே ஒரு நபரை பணிக்கு அமர்த்தியது.

உலகமே கார்பன் நியூட்ராலிட்டி, ஜீரோ கார்பன் எமிஷன்... குறித்தெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் போது, புல்தரைகளை நேர்த்தியாக வைத்துக் கொள்ள பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களைப் பயன்படுத்தி தோட்டப் பணிகளைச் செய்வதற்குப் பதிலாகக் குறைவான கார்பனை உமிழும் ஆடுகளை பணியில் அமர்த்தியது கூகுள்.

கூகுள் நிறுவனம், லிவிங் சிஸ்டம்ஸ் லேண்ட் மேனேஜ்மெண்ட் என்கிற நிறுவனத்திடமிருந்து சுமார் 3,500 ஆடுகளை வாடகைக்கு வாங்கியது. இது புல் தரைகளை நிர்வகிப்பதோடு, பூச்சிக் கொள்ளிகளைப் பயன்பாட்டையும் கணிசமாகக் குறைக்கும் என்று கூறியது.

அப்போதிலிருந்து உலகம் முழுக்க பல நிறுவனங்களும் இம்முறையைப் பின்பற்றத் தொடங்கின. 2018ஆம் ஆண்டு வாக்கில், இப்படி ஆடு போன்ற கால்நடைகளை வாடகைக்கு விடும் பல நிறுவனங்கள் அமெரிக்காவில் இயங்கி வருவதாக ஃபோர்ஸ் பத்திரிகை தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டது.

கூகுளைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகர நிர்வாகமும் தன் நகர்புற பூங்காக்களில் அதிகப்படியாக வளரும் புற்களைக் கட்டுப்படுத்த அல்லது புல் தரைகளை நிர்வகிக்க செம்மறி ஆடுகளைக் களமிறக்கியது. முதற்கட்டமாக பாரிஸ் அர்கைவ்ஸ் கட்டடத்தைச் சுற்றி வூலி ஐவ்ஸ் (woolly ewes) ரக ஆடுகள் களமிறக்கப்பட்டன.

3,500 ஆடுகளுக்கு வேலை கொடுத்த கூகுள் நிர்வாகம்
கூகுள், டெஸ்லா, ஆப்பிள்: செலவை குறைக்க திட்டம் - என்ன நடக்கிறது உலகச் சந்தையில்?

ஒரு புல் வெட்டும் எந்திரத்துக்கு பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்கள் செலவுகள் மற்றும் எந்திரத்தைப் பராமரிக்க ஆகும் செலவில் பாதி தான் ஆடுகளைப் பராமரிக்க ஆவதாக பாரிஸ் பண்ணை இயக்குநர் மார்செல் காலெட் (Marcel Collet) பத்திரிகை ஒன்றிடம் கூறி இருந்தது நினைவுகூரத்தக்கது. அடுத்த கட்டமாக Seine-Saint-Denis பகுதிக்கு செம்மறி ஆடுகள் படையெடுத்தன.

கூகுள் ஆடுகளைப் பயன்படுத்தியது, பாரிஸ் நகர நிர்வாகம் ஏன் செம்மறி ஆடுகளைப் பயன்படுத்துகிறது..? என்கிற கேள்விக்கும் ஒரு சுவாரசிய பதில் இருக்கிறது.

3,500 ஆடுகளுக்கு வேலை கொடுத்த கூகுள் நிர்வாகம்
கூகுள் நிறுவனம் எப்படி பணம் ஈட்டுகிறது தெரியுமா? - இந்தக் கட்டுரையை படியுங்கள்!

பொதுவாகவே ஆடுகள், மனிதர்கள் தங்கள் தட்டில் உள்ள உணவை முழுமையாக வழித்துச் சாப்பிடுவது போல சுத்தமாக புற்களை சாப்பிடக் கூடியவை. ஆனால் செம்மறி ஆடுகளோ பச்சைப் பசேலென இருக்கும் இடங்கள், புற்கள் அதிகமாக மண்டிக் கிடக்கும் புதர்கள் போன்ற இடங்களில் மட்டுமே சாப்பிடும் என யூரோ நியூஸ் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

உண்மையிலேயே ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் ஒரு இயற்கையான தோட்டப் பணியாளர்கள், இயற்கையின் பாதுகாவலர்கள் என்றால் அது மிகை இல்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com