உலகெங்கிலும் இருந்து மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் ஜெர்மனியின் புகழ்பெற்ற பீர் திருவிழாவான அக்டோபர்ஃபெஸ்ட், கொரோனா வைரஸ் காரணமாக இரண்டு வருடங்களுக்குப் பின் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
200 ஆண்டுக்கால வரலாற்று விழாவான இந்த பீர் திருவிழா 26 முறை மட்டுமே நடக்காமலிருந்ததாக கூறுகின்றனர்.
முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் காரணமாகவும், மேலும் இரண்டு முறை காலரா வெடிப்பு காரணமாகவும், அதன் பின்னர் கொரோனா காரணமாகத் தடைப்பட்டுள்ளது.
கடைசியாக 2019 இல் திருவிழா நடத்தப்பட்டபோது, 6.3 மில்லியன் விருந்தினர்கள் 7.3 மில்லியன் லிட்டர் ஜெர்மன் பீர் குடித்துள்ளனர்.
இந்த திருவிழா சுமார் 1.2 பில்லியன் யூரோக்கள் வருமானத்தை ஈட்டுகிறது. 2021 இல் ஆண்டு சராசரி நுகர்வு 84 லிட்டர்களுடன் ஐரோப்பாவின் அதிக பீர் குடிப்பவர்களில் ஜெர்மனியர்களாக உள்ளனர்.
இந்த திருவிழாவிற்கு பெரும்பாலான ஆண்கள் தோல் ஷார்ட்ஸ் (Leather ஷார்ட்ஸ்) உடைகளிலும் மற்றும் பெண்கள் dirndl எனப்படும் பாரம்பரிய ஆடை அணிந்து வருவார்கள். இது போன்று பல இடங்களில் வித்தியாசமான விழாக்களை நடத்தி வருமானம் ஈட்டி வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust