Glenn Maxwell தமிழச்சி வினி ராமன் திருமணம் திட்டமிட்ட தேதிக்கு முன் நடக்க இதுதான் காரணமா?

மேக்ஸ்வெல் - வினி ஜோடியின் திருமணம் இரு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தனிப்பட்ட முறையில் இனிதே நடந்தது.
Glenn Maxwell and Vini Raman

Glenn Maxwell and Vini Raman

Instagram

Published on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் தான் வெகு நாட்களாக காதலித்து வந்த வினி ராமனை 18 மார்ச் 2022 வெள்ளிக்கிழமை திருமணம் செய்து கொண்டார்.மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமன் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். வினி ராமன் ஒரு மருத்துவ அறிவியல் பட்டதாரி. பார்மசிஸ்ட் ஆகப் பணிபுரியும் வினி, 2013-ல் நடந்த மெல்பன் ஸ்டார் ஈவன்ட்டில் மேக்ஸ்வெல்லை முதன்முதலில் சந்தித்தார்.

<div class="paragraphs"><p>Glenn Maxwell and Vini Raman</p></div>

Glenn Maxwell and Vini Raman

Instagram

வினியை பிடித்து மேக்ஸ் தான் முதலில் காதலை தெரிவித்தாராம்.2017 ஆம் ஆண்டிலிருந்து டேட்டிங் செய்து வந்த இந்த ஜோடிக்கு கடந்த 2020-ல் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

இதையடுத்து கொரோனா பரவல், ஊரடங்கு உத்தரவு உள்ளிட்டவைகளால் இவர்களுடைய திருமணம் தள்ளி போனது. இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து இருவருக்கும் மார்ச் 27ஆம் தேதி திருமணம் காலை 11.35 மணிக்கு மேல் 12.35 மணிக்குள்ளாக நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மேக்ஸ் - வினி ஜோடி திடீரென திருமணம் செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிற்சியளித்துள்ளனர்.

<div class="paragraphs"><p>Glenn Maxwell and Vini Raman</p></div>
Jio அம்பானியின் கதை : முதல் நஷ்டம் - திருபாய் என்ன சொன்னார் தெரியுமா? | பகுதி 6

ஐபிஎல்லில் மேக்ஸ்வெல் ஆர்சிபி அணிக்காக ஆடுகிறார். வரும் 26ம் தேதி ஐபிஎல் தொடங்குவதால் 27ம் தேதி திருமணம் செய்ய முடியாது என்பதால் முன்கூட்டியே மேக்ஸ்வெல் திருமணம் நடத்தப்பட்டுள்ளது. 18ம் தேதி(நேற்று) மேக்ஸ்வெல் - வினிராமன் திருமணம் நடந்தது.

அவர்கள் இருவரும் திருமண உடையில் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வினிராமன் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அந்த புகைப்படம் வைரலாகிவருகிறது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com