சீனா: முகமூடி அணிந்து இன்டர்வியூவுக்கு வர சொன்ன நிறுவனம் - ஓஹோ இதான் காரணமா?
சீனா: முகமூடி அணிந்து இன்டர்வியூவுக்கு வர சொன்ன நிறுவனம் - ஓஹோ இதான் காரணமா?Twitter

சீனா: முகமூடி அணிந்து இன்டர்வியூவுக்கு வர சொன்ன நிறுவனம் - ஓஹோ இதான் காரணமா?

சீனாவின் செங்டு ஆண்ட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம், தங்கள் நிறுவனத்திற்கு நேர்காணலுக்கு வருபவர்கள் முகமூடி அணிந்து வரவேண்டும் என கூறியிருந்தது. விண்ணப்பதாரர்கள் முகங்கள் முழுவதுமாக மறைக்கப்பட்டிருக்கவேண்டும் என அறிவித்திருந்தது.
Published on

நேர்காணலுக்கு வருபவர்கள் முகமூடி அணிந்து வரவேண்டும் என புதிய அறிவிப்பை கொடுத்துள்ளது சீன நிறுவனம் ஒன்று

நாம் ஏற்படுத்தும் ஃபர்ஸ்ட் இம்பிரெஷன் நிறுவனத்தில் நமக்கான இடத்தை நிர்ணயிக்கும் எனலாம்.

அதிலும் முக்கியமாக நமது முகத்தில் நாம் எந்த அளவுக்கு தைரியத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறோம் என்பதும் கவனிக்கப்படும். ஆனால் அதற்கே முட்டுக்கட்டை போடுகிறது இந்த சீன நிறுவனம்.

சீனாவின் செங்டு ஆண்ட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம், தங்கள் நிறுவனத்திற்கு நேர்காணலுக்கு வருபவர்கள் முகமூடி அணிந்து வரவேண்டும் என கூறியிருந்தது. விண்ணப்பதாரர்கள் முகங்கள் முழுவதுமாக மறைக்கப்பட்டிருக்கவேண்டும் என அறிவித்திருந்தது.

இதனால் நேர்காணலுக்கு வந்தவர்கள் நாடகங்களில் பயன்படுத்தும் காஸ்டியூம் மாஸ்க் அணிந்து வந்திருந்தனர். விண்ணப்பதாரர்கள் மட்டுமல்ல, நேர்காணல் நடத்தும் அதிகாரிகளும் முகமூடி அணிந்திருந்தனர்

சீனா: முகமூடி அணிந்து இன்டர்வியூவுக்கு வர சொன்ன நிறுவனம் - ஓஹோ இதான் காரணமா?
இன்டெர்வியூ இப்படி தான் நடக்கிறதா? Pristyn Care துணை நிறுவனரின் பதிவால் சர்ச்சை

சவுத் சைனா மார்னிங் போஸ்ட்ட்டின் அறிக்கையின்படி அந்நாட்டின் சமூக வலைத்தளமான டூயின் பக்கத்தில் இந்த நேர்கானல் வீடியோ வைரலாகியுள்ளது.

மாஸ்க் அணிய என்ன காரணம்?

  • வெறும் வெளித் தோற்றத்தை வைத்து மட்டும் ஒருவரின் திறனை எடைப்போட கூடாது

  • சிலருக்கு கூட்டத்தை பார்த்தால் பயம் ஏற்படலாம். இந்த சோசியல் ஆன்க்சைட்டியை போக்க முகமூடி அணிய அறிவுத்தப்பட்டது

  • நேர்காணல் நடத்துபவர்களை பார்த்தால் பதற்றம் ஏற்படலாம்.

  • கேண்டிடேட்களுக்கு ஒரு வெள்ளை நிற மாஸ்க் அளிக்கப்பட்டது. அதில் அவர்கள் கைவண்னத்தை காண்பிக்கலாம் எனவும் கூறப்பட்டது. கேண்டிடேட்டின் திறனை அறியும் மற்றுமொரு சோதனை முயற்சி.

பலரும் நிறுவனத்தின் இந்த முயற்சியை பாராட்டி வருகின்றனர்.

இந்த செங்டு நிறுவனம் இவ்வாறான வித்தியாசமான நேர்காணல்களுக்கு பெயர்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீனா: முகமூடி அணிந்து இன்டர்வியூவுக்கு வர சொன்ன நிறுவனம் - ஓஹோ இதான் காரணமா?
சிறப்பாக பணியாற்றினால் காஸ்ட்லி கார்! ஊழியர்களை சர்ப்ரைஸ் செய்த இந்திய நிறுவனம் - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com