15,500 பெண்களுக்கு 18 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்கும் கூகுள் - காரணம் என்ன?

பாலினப் பாகுபாடு காரணமாகப் பெண் பணியாளர்களுக்குக் குறைந்த ஊதியம் வழங்கப்பட்டதாகப் புகார் எழுந்த நிலையில், 15500 பெண்களுக்கு சுமார் 118 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க கூகுள் நிறுவனம் முன்வந்துள்ளது.
Sundar Pichai
Sundar PichaiTwitter
Published on

கடந்த 2017-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் முன்னாள் பெண் பணியாளர்கள் மூன்று பேர் கூகுள் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில் பாலினப் பாகுபாடு காரணமாகப் பெண் பணியாளர்களுக்குக் குறைந்த ஊதியம் வழங்கப்பட்டதாகவும், அவர்களுக்குத் தகுதி குறைவான பணிகளே வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் கூகுள் நிறுவனம் கலிஃபோர்னியாவின் சம ஊதிய சட்டத்தை மீறியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

Google
GoogleNewsSense

இந்த விவகாரம் இணையத்தில் பேச்சு பொருளாக மாறியது. இதற்குத் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனம் 118 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதாவது இந்திய மதிப்பில் சுமார் 920 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு வழங்கவுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.

ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள விசாரணையில், கூகுள் வழங்க முன்வந்த இழப்பீடு நீதிபதியால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sundar Pichai
கூகுள் நிறுவனம் எப்படி பணம் ஈட்டுகிறது தெரியுமா? - இந்தக் கட்டுரையை படியுங்கள்!

பாலின பாகுபாட்டிற்காகக் கூகுள் மீதான ஆய்வு இது முதல்முறை அல்ல, கடந்த ஆண்டு, கூகுள் பெண் பொறியாளர்களுக்குக் குறைந்த ஊதியம் மற்றும் ஆசிய வேலை விண்ணப்பதாரர்களைச் சரியாக நடத்தவில்லை என்று கூறிய வழக்கை முடித்து வைக்க $2.5 மில்லியன் செலுத்த ஒப்புக்கொண்டது கூகுள்.

Sundar Pichai
பணத்திற்கு பதிலாக தங்கத்தை சம்பளமாக வழங்கும் ஓர் 'அடடே' நிறுவனம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com