Ukraine Russia Conflict : ரசிய ஊடக விளம்பரங்களைத் தடை செய்த Google - Latest Updates

உக்ரைன் மீதான ரசிய படையெடுப்பை அடுத்து அமெரிக்காவின் கூகுள் நிறுவனம், தனது தளங்களில் ரசிய ஊடகங்கள் பெறும் விளம்பர வருவாயைக் கடந்த சனிக்கிழமை முதல் தடை செய்திருக்கிறது.
Google

Google

Pexels

உக்ரைன் மீதான ரசிய படையெடுப்பை அடுத்து அமெரிக்காவின் கூகுள் நிறுவனம், தனது தளங்களில் ரசிய ஊடகங்கள் பெறும் விளம்பர வருவாயைக் கடந்த சனிக்கிழமை முதல் தடை செய்திருக்கிறது.

ஏற்கனவே கூகுளின் நிறுவனமான யூடியூபும், மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக்கும் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

“உக்ரேனில் போர் நடைபெறுவதற்கு பதிலடியாக ரசிய அரசால் நிதியளிக்கப்படும் ஊடகங்கள் விளம்பர வருமானம் பெறுவதை எங்களது அனைத்து தளங்களிலும் தடை செய்துள்ளோம்", என்று கூகுளின் தகவல் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

போர் குறித்த நிலவரங்களை தொடர்ந்து அவதானிப்பதாகவும், தேவையெனில் மேற்கொண்டு புதிய நடவடிக்கைகளை எடுக்கப் போவதாகவும் கூகுள் அதிகாரி தெரிவித்தார்.

ஏற்கனவே யூடியூப் நிறுவனம் ரசிய ஊடக சேனல்களின் விளம்பர வருமானத்தை நிறுத்துவது உள்ளிட்டு பல்வேறு தடைகளை விதித்திருக்கிறது.

“போர் காரணமாக உக்ரைனில் நடக்கும் அசாதரணமான சூழலில், நாங்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்" என்று யூடியூப் தகவல் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Youtube

Youtube

Facebook

Faரசியா டுடே

ரசியா டுடே என்பது ரசிய அரசால் நிதியளிக்கப்பட்டு நடத்தப்படும் ஒரு செய்தி ஊடகமாகும். இந்நிறுவனத்தை உள்ளிட்டு பல ரசிய ஊடகங்களை உலகம் முழுவதும் அப்படி வருமானத் தடை செய்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுவில் யூடியூப் சானல்களின் வருமானம் என்பது பயனர்களால் அந்த வீடியோக்களை பார்க்கும் போது கிடைக்கும் ஒன்றாகும்.

உலகில் இருக்கும் பல நாடுகள் ரசிய மீது பல்வேறு தடைகளை விதித்திருக்கின்றன. உக்ரைன் ஆக்கிரமிப்பு நடந்த வியாழக்கிழமைக்கு பிறகு ரசிய வணிகம், வங்கிகள், மற்றும் ரசிய பிரமுகர்கள் மீது இத்தடைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

போர் குறித்த புதிய தகவல்களை கவனமாக கண்காணித்து வருவதாகும் தேவையெனில் இன்னும் பல புதிய நடவடிக்கைகளை யூடியூபில் அமல்படுத்துவதாகவும் அதன் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

பண வருவாயைக் கட்டுப்படுத்துவதுடன், ரசிய ஆதரவு சேனல்களின் பரிந்துரைகளை மட்டுப்படுத்துவதாகவும் யூடியூப் கூறியிருக்கிறது. அதே போன்று உக்ரைன் போர் குறித்த அதிகாரப்பூர்வ செய்திகளை மட்டும் தேடும் வசதியில் வெளியிடுவதாகவும் கூறியிருக்கிறது. இதன் பொருள் ரசிய ஆதரவு செய்திகள் தேடல் பெட்டியில் வராது.

Google

Yuvan Shankar Raja : ராம் முதல் செல்வராகவன் வரை - நவரச இசையை அள்ளி தந்த கலைஞன்

Russia Today

Russia Today

Twitter

தடை

பிப்ரவரி மாத ஆரம்பத்தில் ஜெர்மனி அரசு, ரசியா டுடே ஊடகத்தை தடை செய்திருக்கிறது. ஜெர்மன் ஊடகநிறுவனமான Deutsche Welle யின் மாஸ்கோ மைய பணியகத்தை ரசிய அரசு மூடியதன் பதிலடியாக ஜெர்மன் அரசு இம்முடிவை எடுத்திருக்கிறது.

2005-ஆம் ஆண்டு துவகப்பட்ட அரசு நிறுவனமான ரசியா டுடே (RT) தொடர்ந்து மேற்கத்திய அதிகார நிறுவனங்கள் தவறான தகவல்களை பரப்புவதாகக் குற்றம் சாட்டுகிறது. சான்றாக அமெரிக்கா தலைமையிலான ஈராக் போர், அதில் பேரழிவு ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக படையெடுப்பு என்று சொல்லி பின்னர் அப்படி ஒரு ஆயுதமே இல்லை என உண்மை வெளிவந்தது, ஆப்கான் போர், தென் அமெரிக்காவில் நடந்த அமெரிக்க சதிகள் இப்படி மேற்குலகின் தவறுகளை ரசிய டுடே தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

யூடியூப் நிறுவனத்தின் குறிப்பு படி கடந்த சில நாட்களாக தவறான தகவல்களை ஏமாற்றும் பொருட்டு பகிர்ந்த நூற்றுக்கணக்கான சானல்களை அகற்றியிருப்பதாக கூறுகிறது.

ஆக போர் என்பது உக்ரைனில் மட்டுமல்ல, செய்திகள் உருவாகும் உலகிலும் நடைபெறுகிறது என்பதை மேற்கண்ட செய்திகள் காட்டுகின்றன.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com