தன் திருமணத்திற்கு சவப்பெட்டியில் வந்திருக்கிறார் மணமகன் ஒருவர். மணமகனின் நண்பர்கள் சவப்பெட்டியில் வைத்து அவரை திருமண மண்டபத்திற்கு எடுத்துவரும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பரவி கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.
திருமணம் என்பது நாம் அனைவரும் நினைவில் வைத்துகொள்ளும் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்று. முன்பெல்லாம் பாரம்பரிய சடங்குகளை கடைப்பிடித்து நடக்கும் திருமணங்கள், தற்போது, வித்தியாசமான, சாகசங்கள் நிறைந்த நிகழ்வாக நடக்கிறது. ஓடும் ரயிலில், நடுக்கடலில், வானில் பறந்துகொண்டு திருமணம் செய்துகொண்டவர்கள் என பட்டியல் நீளம்.
இந்நிலையில், டிக்டாக்கில் பதிவிடப்பட்ட வீடியோ ஒன்று, இணையவாசிகளிடையே விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பேசப்படும் அந்த வீடியோவில், திருமணத்திற்கு வந்திருக்கும் சிலர் சவப்பெட்டி ஒன்றை எடுத்து வருகின்றனர். சிரித்துக்கொண்டே அவர்கள் சவப்பெட்டியை எடுத்து வருவது சற்று குழப்புகிறது.
அந்த பெட்டியை திருமணம் நடக்கும் மேடைக்கு கொண்டு சென்று அவர்கள் திறக்க, உள்ளேயிருந்து மணமகன் வெளியே வருகிறார். இந்த சவப்பெட்டியை எடுத்து வந்தது மணமகனின் நண்பர்கள்.
இதனை பார்த்த விருந்தாளிகள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். சவப்பெட்டியை இறக்கி வைத்துவிட்டு அதன் முன் நின்று புகைப்படங்களும் எடுத்துகொண்டனர்.
இதனை திருமண விருந்தாளிகளில் ஒருவர் வீடியோ எடுத்து டிக் டாக் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவர், “ இது இறுதிச் சடங்கா? இல்லை, என் நண்பன் தன் திருமணத்திற்கு இப்படி தான் வந்திறங்கினான்” என தலைப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோ பதிவிடப்பட்டதிலிருந்து, இணையவாசிகள் மணமகனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுவரை 8 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது இந்த வீடியோ. சிலர் இதை வேடிக்கையான ஒன்றாக பார்த்தாலும், மக்கள் இது மரியாதைக் குறைவான செயல் என கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust