GTA: 90'ஸ் கிட்ஸின் ஃபேவரைட் வீடியோ கேமை ரீகிரியேட் செய்த இளைஞர்கள்- யார் இவர்கள்?

இந்த வீடியோ கேமில் வரும் Carl Johnson அல்லது CJ கதாப்பாத்திரம் எளிதில் மறக்க முடியாதது. பவர் ரேஞ்சர்ஸ், பாப்பாய் வரிசையில் இளைஞர்கள் மனதில் அதிகம் பதிந்த கதாப்பாத்திரமாக இது இருக்கிறது.
GTA : 90'ஸ் கிட்ஸின் ஃபேவரைட் வீடியோ கேமை தத்ரூபமாக நடித்த இளைஞர்கள் - வைரல் வீடியோ!
GTA : 90'ஸ் கிட்ஸின் ஃபேவரைட் வீடியோ கேமை தத்ரூபமாக நடித்த இளைஞர்கள் - வைரல் வீடியோ!Twitter
Published on

90களின் குழந்தைகளுக்கு மிகப் பெரிய பொழுதுபோக்காக இருந்தது வீடியோ கேம்கள். கம்பியூட்டர் கடைகளில் பணம் கொடுத்து பல மணி நேரம் விளையாடிய விளையாட்டுகளில் ஒன்று GTA - Grand Theft Auto.

இந்த வீடியோ கேமில் வரும் Carl Johnson அல்லது CJ கதாப்பாத்திரம் எளிதில் மறக்க முடியாதது. பவர் ரேஞ்சர்ஸ், பாப்பாய் வரிசையில் இளைஞர்கள் மனதில் அதிகம் பதிந்த கதாப்பாத்திரமாக இது இருக்கிறது.

ஜிடிஏவில் வரும் பாடி லாங்குவேஜ்களை அப்படியே காப்பி செய்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், வீடியோ கேமில் வரும் அதே கேமரா அசைவுகளுடன் இளைஞர்கள் நடித்துள்ளனர். சிஜே பாத்திரத்தின் வெள்ளை பனியனையும் நீல நிற ஜீன்ஸையும் திரையில் வரும் நபர் அணிந்திருக்கிறார்.

வீடியோ கேமின் அதே நடை மற்றும் பாவனைகளை பயன்படுத்தியிருக்கின்றனர். சில நேரங்களில் இது சிஜே என்றே நினைக்கும் அளவு தத்ரூபமாக வீடியோ அமைந்துள்ளது.

புதிதாக விளையாடுபவர் செய்வது போல சுவற்றில் முட்டுவதும் குதிப்பதும் சண்டையிடுவதும் அந்த வீடியோவில் தெரிகிறது.

GTA : 90'ஸ் கிட்ஸின் ஃபேவரைட் வீடியோ கேமை தத்ரூபமாக நடித்த இளைஞர்கள் - வைரல் வீடியோ!
அதிவேகத்தில் சென்ற டிடிஎஃப் வாசன் : அலறிய ஜி.பி முத்து - வைரல் வீடியோ

இந்த வீடியோ 38 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது, இந்த இளைஞர்களின் உழைப்பை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இந்த வீடியோ Ghetto Trio என்ற குழுவால் உருவாக்கப்பட்டது. நடன கலைஞர்களான இவர்களின் நடன வீடியோக்கள் எப்போதும் இன்ஸ்டாவில் ஹிட் அடிக்கும். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

GTA : 90'ஸ் கிட்ஸின் ஃபேவரைட் வீடியோ கேமை தத்ரூபமாக நடித்த இளைஞர்கள் - வைரல் வீடியோ!
மன வயதை எப்போதாவது சோதித்ததுண்டா? ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வைரல் ட்வீட்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com