உலகின் மிக நீண்ட முத்த போட்டி இனி நடைபெறாது - கின்னஸ் உலக சாதனைகள் சொல்லும் காரணம் என்ன?

இதுவே உலகின் மிக நீண்ட முத்தமாக இருக்கும் என கின்னஸ் உலக சாதனைகள் கூறியுள்ளது. இனி இந்த பிரிவில் எந்த போட்டிகளும் நடைபெறாது.
உலகின் மிக நீண்ட முத்த போட்டி இனி நடைபெறாது - கின்னஸ் உலக சாதனைகள் சொல்லும் காரணம் என்ன?
உலகின் மிக நீண்ட முத்த போட்டி இனி நடைபெறாது - கின்னஸ் உலக சாதனைகள் சொல்லும் காரணம் என்ன?twitter
Published on

கின்னஸ் உலக சாதனைகள் ஆண்டுதோறும் நடத்திக்கொண்டிருந்த உலகின் மிக நீண்ட முத்ததிற்கான போட்டிகளை நிறுத்தியுள்ளது. போட்டியாளர்களை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் இந்த போட்டி பாதித்ததால் இந்த முடிவுக்கு வந்ததாக கின்னஸ் உலக சாதனைகள் கூறியுள்ளது.

இந்த உலகின் மிக நீண்ட முத்ததிற்கான போட்டிகள் கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு நடைப்பெற்றது. இதில் பங்கேற்று சுமார் 58 மணி நேரம் முத்தமிட்டு உலக சாதனையை படைத்தனர் தாய்லாந்தை சேர்ந்த ஏக்கச்சாய் லக்‌ஷனா தம்பதி.

இதுவே தற்போது வரை, சுமார் 9 ஆண்டுகளாக மிக நீண்ட முத்தமாக இருக்கிறது.

இதுவே உலகின் மிக நீண்ட முத்தமாக இருக்கும் என கின்னஸ் உலக சாதனைகள் கூறியுள்ளது. இனி இந்த பிரிவில் எந்த போட்டிகளும் நடைபெறாது.

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் பல தம்பதிகளை, போட்டியாளர்களை ஈர்த்த இப்போட்டி நிறுத்தப்பட்டதற்கான காரணத்தையும் கின்னஸ் உலக சாதனைகள் கூறியுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு விதிமுறைகள் சில உள்ளன

உலகின் மிக நீண்ட முத்த போட்டி இனி நடைபெறாது - கின்னஸ் உலக சாதனைகள் சொல்லும் காரணம் என்ன?
Kiss Day : மனிதர்கள் முத்தமிடுவதற்கு என்ன காரணம்?

1. தம்பதிகள் (போட்டியாளர்கள்) தொடர்ந்து முத்தமிட வேண்டும். அவர்களின் உதடு சற்றும் விலகிவிடக்கூடாது. சிறிதளவு விலகினாலும் அவர்கள் தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட்டு போட்டியிலிருந்து விலக்கப்படுவார்கள்

2. போட்டியாளர்கள் எந்த விதமான உறுதுணையும் இல்லாமல் நிற்க வேண்டும்.

3.போட்டியாளர்கள் உறங்கக்கூடாது. இவர்களுக்கு தாகம் எடுத்தாலோ பசி எடுத்தாலோ உட்கொள்ளும் பானத்தை உதடுகள் ஒன்றை ஒன்று பிரியாமல் ஸ்டிரா மூலம் அருந்தவேண்டும்.

உணவு, ஓய்வு, அல்லது கழிவறை செல்லவேண்டும் என்றாலும் கூட முடியாது. இவர்கள் அடல்ட் டயாப்பர்கள் அணியவும் அனுமதியில்லை.

உலகின் மிக நீண்ட முத்த போட்டி இனி நடைபெறாது - கின்னஸ் உலக சாதனைகள் சொல்லும் காரணம் என்ன?
சர்வதேச முத்த தினம் : முத்தம் ஆண்களுக்கும் தான் - பாச முத்தம் பகிரும் தமிழ் நடிகர்கள்

இப்படி கடுமையான விதிமுறைகள் இருந்ததால், பலரும் போட்டி முடியும் முன் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். பலரும் மூச்சையடைந்து விழுந்தனர்.

போட்டியை வென்ற தம்பதிகள் கூட சுய நினைவை இழக்கும் அளவு போட்டி அவர்களை பாதித்தது. 2004ல் இத்தாலியை சேர்ந்த நபர் ஒருவர் மரணிக்கும் தருவாயில் இருந்து மீண்டும் உயிர்பிக்க வேண்டியதாக இருந்துள்ளது. இவர் இந்த போட்டியில் தன் காதலியை 31 மணி நேரம் 18 நிமிடங்களுக்கு முத்தமிட்டார்.

இதனால் உலகின் மிக நீண்ட முத்தத்திற்கான போட்டிகளை நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மிக நீண்ட முத்ததிற்கான மாரத்தான் போட்டிகளை நடத்தப்படும் எனவும் போட்டியாளர்கள் இடையிடையே ஓய்வெடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது

உலகின் மிக நீண்ட முத்த போட்டி இனி நடைபெறாது - கின்னஸ் உலக சாதனைகள் சொல்லும் காரணம் என்ன?
உலகின் முதல் முத்தம்: 4,500 ஆண்டுகளுக்கு முன் மனிதன் முதன் முதலில் முத்தமிட்டானா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com