இன்றை தலைமுறையினரிடையே சோலோ டிரிப் செல்லும் வழக்கம் அதிகரித்து விட்டது, அன்றாட வாழ்க்கையிலிருந்து பிரேக் எடுப்பதற்காக, மன அமைதிக்காக என பல்வேறு காரணங்களை எடுத்துகொள்கின்றனர்
தனியாக சுற்றுலா செல்வது ஒரு விதமான புத்துணர்ச்சியை கொடுக்கும், மனச் சோர்வை நீக்கும், நீங்கள் யாரென்று உங்களுக்கே புதியதாய் ஒரு நம்பிக்கை பிறக்க வைக்கும்.
அப்படி டிரிப் செல்ல குறிப்பிட்ட சில இடங்களை மக்கள் அதிகம் தேடியுள்ளனர். அந்த லிஸ்ட்டில் வியட்நாமின் ஹனோய், டாப்பில் உள்ளது.
சாகச பயண நிறுவனமான எக்ஸ்ப்ளோர் வேர்ல்ட்வைடு மூலம் உலகளாவிய தேடல் தரவுகளின் பகுப்பாய்வு மூலம் சோலோ டிரிப்க்கான சிறந்த இடங்கள் கண்டறியப்பட்டன.
Explore Worldwide ஆனது இரண்டு வருட ஆய்வுக்கு பின்னர் தனிப் பயணத்திற்காக மக்கள் அதிகம் தேடும் இடங்களின் பட்டியலை உருவாக்கியது. வியட்நாமின் ஹனோய், பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தைவானின் தைபே மற்றும் பாங்காக் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளன.
கணக்கெடுப்பின்படி, ஹனோய் சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடமாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இது நகரத்தின் அற்புதமான வரலாற்று கட்டிடக்கலை, வரலாற்று கோயில்கள், என விஷயங்களை உள்ளடக்கியுள்ளாது.
அதிலும் முக்கியமாக ஹனோய் பாதுகாப்பாக நகரமாக மதிப்பிடப்பட்டுள்ளது. 100க்கு 62 மதிப்பெண்கள் பெற்று, உலகின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக இது திகழ்கிறது.
உள்ளூர் உணவு
நகரத்தைப் பற்றிய உண்மையான உணர்வைப் பெற, பல கஃபேக்களைப் பார்வையிடவும், அருகிலுள்ள சந்தைகளைப் பார்க்கவும். இங்கு சுவையான உள்ளூர் உணவுகள் கிடைக்கும்.
கலையின் புகலிடம்
ஹனோய் வியட்நாமின் கலை மையமாக அறியப்படுகிறது. நகரின் பல அருங்காட்சியகங்கள், கட்டிடக்கலை ஆகியவற்றை நீங்கள் பார்வையிடலாம். மேலும் நகரத்தின் கலாச்சாரத்தை முழுமையாக அனுபவிக்க, புகழ்பெற்ற ஹனோய் ஓபரா ஹவுஸிற்குள் செல்லவும்.
வாசனை திரவிய பகோடா
நகரின் வாசனை திரவிய பகோடா ஒரு வரலாற்று புத்த கோவிலாகும். இது கிட்டதட்ட பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
ஹோன் கீம் ஏரி
இந்த ஏரி அழகான காட்சிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், ஆராயக்கூடிய ஒரு கோயிலையும் கொண்டுள்ளது. இந்த இடத்தில், நீங்கள் ஓய்வெடுக்கலாம், நகரத்தின் அழகை அனுபவிக்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust