உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் : சறுக்கிய இந்தியா , முதலிடத்தில் யார்?

ஈரான், மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகள் இந்தியர்களை விசா இல்லாமல் அனுமதிப்பதாக சமீபத்தில் அறிவித்த பின்னரும் இந்தியா அட்டவணையில் முன்னேறாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் : சறுக்கிய இந்தியா , முதலிடத்தில் யார்?
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் : சறுக்கிய இந்தியா , முதலிடத்தில் யார்?Twitter

உலக நாடுகளின் பாஸ்போர்ட்டை தரவரிசைப்படுத்தும் ஹென்லி பாஸ்போர்ட் அட்டவணை வெளியாகியிருக்கிறது.

இந்த அட்டவணையில் கடந்த ஆண்டு 84வது இடத்தைப் பிடித்திருந்த இந்திய பாஸ்போர்ட் 85வது இடத்துக்கு சரிந்துள்ளது.

தரவரிசை குறைந்திருந்தாலும் இந்திய பாஸ்போர்ட் கொண்டு விசா இல்லாமல் பயணிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 60ல் இருந்து 62ஆக உயர்ந்திருக்கிறது.

இந்த அட்டவணையின் முதல் இடத்தில் இருக்கிறது பிரான்ஸ். 194 நாடுகளுக்கு பிரான்ஸ் பாஸ்போர்ட்டுடன் விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் பிரான்ஸுடன் முதலிடத்தில் உள்ளன.

நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடந்த ஆண்டில் இருந்த அதே 106வது இடத்தில் இருக்கிறது. பங்களாதேஷ் 101வது இடத்தில் இருந்து 102வது இடத்துக்கு சரிந்துள்ளது.

மாலத்தீவு 58வது இடத்தில் தன்னை தக்கவைத்துக்கொண்டுள்ளது. மாலத்தீவு பாஸ்போர்ட் இருந்தால் 96 நாடுகளுக்கு பயணிக்கலாம்.

ஈரான், மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகள் இந்தியர்களை விசா இல்லாமல் அனுமதிப்பதாக சமீபத்தில் அறிவித்த பின்னரும் இந்தியா அட்டவணையில் முன்னேறாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் : சறுக்கிய இந்தியா , முதலிடத்தில் யார்?
500 பேர் மட்டுமே வைத்திருக்கும் உலகின் அரிதான பாஸ்போர்ட் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com