Hero Rats: மனிதர்களை காப்பாற்ற எலிகளுக்கு பயிற்சி

ஸ்காட்லாந்து நாட்டின் விஞ்ஞானிகள் நிலநடுக்கத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற எலிகளுக்கு பயிற்சியளித்து வருகின்றனர். ஒரு சிறிய பையுடன், மைக்கும் பொருத்தப்பட்டு இடுக்குகளுக்குள் சிக்கியுள்ளவர்களிடம் சென்று வெளியில் இருப்பவர்களுடன் தொடர்புகொள்ளப் பயிற்சியளிக்கப்படுகிறது.
Hero Rats
Hero RatsTwitter
Published on


உலகில் இயற்கை பேரிடர்களால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்க, விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகள் செய்து வருகின்றனர். இதற்கு பேரிடர்களை முன்பே கணிக்கக்கூடிய விலங்குகளின் பங்களிப்பு மிக அதிகம்.

ஸ்காட்லாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள், எலிகளைக் கொண்டு நிலநடுக்கத்தில் சிக்கியவர்களைக் கண்டறிந்து காப்பாற்ற பயிற்சிகளை அளித்து வருகின்றனர். நாம் செய்யும் பல பரிசோதனைகளை முதலில் எதிர்கொள்பவர்களை எலி என்று தான் குறிப்பிடுவோம். அந்த வகையில், இங்கு இந்த எலிகள் தான் பல மனித உயிர்களை காப்பாற்ற போகிறது.

Hero Rats
Hero RatsTwitter

டோன்னா கென் என்கிற விஞ்ஞான ஆராய்ச்சியாளர் மற்றும் குழு, APOPO எனும் லாப நோக்கமற்ற அமைப்புடன் இணைந்து 'ஹீரோ ராட்ஸ்' எனும் இந்த திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். எலியின் உருவத்திற்கு ஏற்றார்போல் ஒரு சிறிய பை, அதில் இணைக்கப்பட்டுள்ள ஒரு மைக்ரோஃபோன் ஆகியவற்றை எலிகளுக்குப் பொருத்தி, இடுக்குகளுக்குள் சென்று, சிக்கியவர்களைக் கண்டுபிடிக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு யாரேனும் மாட்டிக்கொண்டிருந்தால், அவர்களிடம் சென்று அந்த பையில் பொருத்தப்பட்டுள்ள பொத்தானை டிரிக்கர் செய்ய பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 7 எலிகள் இந்த பட்டனை அழுத்தினால் வரும் சத்தத்திற்கு ரெஸ்பாண்ட் செய்ய பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 170 எலிகளை பயிற்றுவிக்கவுள்ளதாக ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

இப்போதைக்கு, விஞ்ஞானிகள் தயாரித்த மாதிரிகளுக்குள் (mock debris) நுழைந்து வெளிவந்துகொண்டிருக்கும் எலிகளை, முழுவதும் தயார்படுத்தி துருக்கி நாட்டுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியின் முடிவுக்குள் இந்த பைகளில் மைக்குடன் சேர்த்து கேமேராக்கள், மற்றும் லொகேஷன் டிராக்கர்களையும் சேர்த்து பொருத்தி மீட்புக்குழு எளிதில் இடுக்குகளில் சிக்கியவர்களை தொடர்புகொள்ள ஏற்பாடுகள் செய்துவருகின்றனர். அந்த பட்டனை டிரிக்கர் செய்தால், வெளியில் காத்திருக்கும் மீட்புக்குழுவிடம் பேசி நிலநடுக்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க இது உதவும்.


இவ்வாறு சரியாக உள்ளே சென்று வரும் எலிகளுக்கு அவைகளுக்கு பிடித்த உணவுகளை டோன்னா வெளியில் தயாராக வைத்திருக்கிறார். இந்த mock debris-க்குள் சென்றுவிட்டு வரும் எலிகள் அந்த உணவை சிரிஞ்ச் மூலம் சாப்பிடும் புகைப்படங்களை டோன்னா ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்

Hero Rats
சுனாமி, பூகம்பம் ஏற்படுவதை முன்பே கணிக்கும் விலங்குகள் - ஓர் ஆச்சர்ய தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com